ஆவணி அவிட்டம் அன்று சந்திர கிரகணம் வந்தால், அன்று ஆவணி அவிட்டம் அனுஷ்டிக்கக் கூடாது

santhira

ஆவணி அவிட்டம் அன்று சந்திர கிரகணம் வந்தால், அன்று ஆவணி அவிட்டம் அனுஷ்டிக்கக் கூடாது; மீறி அனுஷ்டித்தால் எதிர்பாராத விளைவுகள், அழிவுகள் ஏற்படும் என வெளியான, ‘வாட்ஸ் ஆப்’ தகவலால் குழப்பம் நிலவியது.

இதற்கு, தீர்வு காணும் வகையில், சென்னை, ஆழ்வார்பேட்டை உள்ள வைதீகஸ்ரீ அலுவலகத்தில் விவாதம் நடந்தது.

இதில், பாம்பு பஞ்சாங்கம், ஸ்ரீமடத்து பஞ்சாங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், சாஸ்திரிகள், மகான்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முடிவில், ஆகஸ்ட், 7ம் தேதி அன்று, யஜுர் ஆவணி அவிட்டம் செய்யலாம் என, ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதே கருத்தை, ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள், அழகிய சிங்கர் மற்றும் அனைத்து ஆச்சாரியார்களும் ஏற்றுக்கொண்டனர்.

இதேபோல, 1990ம் ஆண்டிலும் ஆவணி அவிட்டமும், சந்திர கிரகணமும் சேர்ந்து வந்தது. அப்போது, அதே தினத்தில் தான் ஆவணி அவிட்டம் அனுஷ்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.