குடும்ப மோதலால் 07 மாத குழந்தை கொலை

மாத்தறை ஹக்மன தெனகம பிரதேசத்தில் 07 மாத குழந்தை ஒன்றின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயையும், தந்தையையும் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் இந்தக் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் தாய் துணி ஒன்றினால் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்மன பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.