நிறுத்தப்படும் பிக்பாஸ்? கடைசி நேர சர்ச்சை..

பிக்பாஸ் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அது எந்த மொழியாக இருந்தாலும் நிச்சயம் சர்ச்சைகள் பல கிளம்பும்.

தெலுங்கு பிக்பாஸ் துவங்கும் முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. சில பெண்கள் இந்த நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது casting couch புகார் தெரிவித்துள்ளனர். போலீஸ வரை சென்றுள்ள இந்த புகார் பற்றித்தான் தெலுங்கு மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள பிக்பாஸ் ஷூட்டிங்கை நிறுத்தும்படி தொகுப்பாளராக உள்ள நடிகர் நாகார்ஜூனா கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஷோ பற்றி நெகடிவ் பேச்சு அடங்கிய பிறகு துவங்கலாம் என அவர் கேட்டுள்ளாராம். டிவி நிர்வாகம் என்ன முடிவெக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.