நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா

கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

அட்லீ தயாரிப்பில் இந்தியில் உருவாகி வரும் பேபி ஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தான் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகும். அதன்பின் அது வெறும் வதந்தி தான் என தெரியவரும். அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

திருமணம்
அதன்படி, நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 13 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருகிறாராம். அவர் கேரளாவை சேர்ந்தவர் என்றும், அவர் நகைக்கடை உரிமையாளரின் மகன் என்றும் கூறப்படுகிறது. இருவரும் 13 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், தற்போது திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் இது உண்மையா அல்லது எப்போதும் போல் வதந்தியா என்று.