தமிழ் மொழியை கௌரவப்படுத்திய ஐசிசி!

நடந்து முடிந்த உலகக்கோப்பையில் தமிழ் மொழியை ஐசிசி கவுரவப்படுத்தியுள்ளது.

இந்தியாவிலே தமிழகத்தில் தான் கிரிக்கெட் மீதான அதிக ஆர்வம் கொண்ட ரசிகர்கள் உள்ளனர். இதற்கு சென்னை அணியை கூட உதாரணமாக கூறலாம்.

அந்த அணி தோற்றாலும், ஜெயித்தாலும் மற்ற அணிகளை விட எப்பொழுதும் தங்களுடைய ஆதரவை ரசிகர்கள் அதிகமாகவே அளித்து வருகின்றனர்.

தமிழக மக்கள் காட்டும் பாசத்தை பார்த்தே வெளிநாட்டில் இருந்து விளையாட வரும் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் ஆகியோர் தமிழில் ட்வீட் போட ஆரம்பித்தனர் என்பது மிக முக்கியமான விஷயம்.

தற்போது 2019ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை தொடரானது இங்கிலாந்தில் நடந்து முடிந்துள்ளது. போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளின் கேப்டன்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அவர்கள் பேசியவற்றை சில மொழிகளில் சப்டைட்டில் செய்து வெளியிட்டது ஐசிசி. அதன்படி இரு அணி கேப்டன்கள் பேசிய வீடியோக்களுக்கு தமிழ் மொழியில் சப்டைட்டில் கொடுத்து தமிழ் மொழியை கவுரவப்படுத்தியுள்ளது.

இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமே இடம்பிடித்துள்ளது. இந்தி மொழியை ஐசிசி சப் டைட்டில் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.