விஜய் அரசியலுக்கு வருவது பற்றி ஜோதிகா சொன்ன பதில்

நடிகை ஜோதிகா எப்போதும் சமூக கருத்துகளை மேடைகளில் பேசுபவர். கோவிலுக்கு கொடுக்கும் காசை மருத்துவமனைகளுக்கு கொடுங்கள் என ஒருமுறை பேசி சர்ச்சையில் சிக்கியது நினைவிருக்கும்.

அப்படி சமூக அக்கறையுடன் பேட்டிகளில் பேசும் ஜோதிகா சமீபத்தில் நடந்த தேர்தலில் ஏன் வாக்களிக்க வரவில்லை என கேள்வி எழுந்தது. அதை நெட்டிசன்களும் விமர்சித்தனர்.

ஜோதிகா பதில்
தற்போது ஜோதிகா நடித்து இருக்கும் ஸ்ரீகாந்த் என்ற படத்தின் பிரெஸ் மீட் இன்று நடந்தது. அதில் ஜோதிகாவிடம் செய்தியாளர்கள் ஏன் வாக்களிக்க வரவில்லை என கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்த ஜோதிகா, ‘நான் வருஷா வருஷம் ஓட்டு போடுகிறேன், சில நேரங்களில் வெளியூரில் இருப்பதால் வர முடியாத நிலை இருக்கும், உடல்நிலை சரியில்லாமல் போகும், எல்லா நேரமும் வீட்டில் இருக்க முடியாது.’

‘எனக்கும் பிரைவேட் லைப் இருக்கு. அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்’ என விளக்கம் கொடுத்தார்.

அரசியலுக்கு வருவீர்களா..
மேலும் அரசியலுக்கு வர எண்ணம் இருக்கா என கேட்டதற்கு, ‘யாரும் என்னை கேட்கல. இப்போது பசங்க படிச்சிட்டு இருக்காங்க, அதையும் கெரியரையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வர எண்ணம் இல்லை” என கூறி இருக்கிறார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கேட்டதற்கு ‘அவுட் ஆப் தி டாபிக்’ என சொல்லி பதிலளிக்க மறுத்துவிட்டார்.