இலங்கை, இந்தியாவின் காலணியாக மாறி வருவதாக முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் புபுது ஜாகொட இந்த குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் ஊடாக இலங்கை இந்தியாவின் காலணியாக மாறி வருவதாகத் தெரிவித்துள்ளார்
இலங்கையின் பல்வேறு துறைகள் ஒவ்வொன்றாக இந்தியாவின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மருந்துப் பொருள் கொள்வனவு தொடர்பிலும் இந்தியாவின் வர்த்தக நோக்கங்களை இந்த அரசஙர்கம் நிறைவேற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நுகேகொடை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.