43 வயதிலும் ஸ்லிம்மாக இருக்கும் சினேகா

நடிகை சினேகா 43 வயதிலும் இளமையாக இருப்பதற்கு எடுத்துக்கொள்ளும் டயட் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நடிகை சினேகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், ரசிகர்களால் புன்னகை அரசி என்று அழைக்கப்படும் சினேகா, இன்றும் இளமையாக இருந்து வருகின்றார்.

இவர் நடிகர் பிரச்சன்னாவைக் காதலித்து திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் கூட விஜய்யுடன் கோட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். தற்போது 43 வயதாகும் சினேகாவின் சீக்ரெட் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

நடிகை சினேகா எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரியை மட்டுமே எடுத்துக் கொள்கின்றார்.

மேலும் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரையை உணவிலிருந்து நீக்குவது உண்டு. சினேகாவும் தனது உணவில் சர்க்கரை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் பல மாற்றங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது டயட்டில் பெரும்பாலும் கார்ப்ஸ், மினரல்ஸ், புரதம் மற்றும் ஃபைபர் சத்து நிறைந்த உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வதுடன், சாப்பாட்டில் உப்பையும் மசாலாவையும் குறைத்துள்ளார்.

சினேகா, அதிகமாக தண்ணீர் குடித்து, தன் உடலில் நீர்ச்சத்து இருக்குமாறு பார்த்துக்கொண்டுள்ளார்.

நாம் ஒரு நாளைக்கு சர்க்கரை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் 200 முதல் 500 கலோரி வரை குறைக்க முடியும் என்றும், அதாவது வாரத்திற்கு 1 கிலோ வரை எடையை குறைக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.