மூன்று வயது மகனை கொன்ற தாய்!!

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை ஐயப்பன் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அவருக்கு மூன்று வயது மகன் கிஷோர் ஆகியோர் இருந்துள்ளார். புவனேஸ்வரிக்கு அந்த பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் என்ற இளைஞர் உடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அறிந்ததும் கார்த்திகேயன் தனது மனைவியை கண்டித்தார். இதனால், வேறு பகுதிக்கு குடியேற நினைத்து அம்பத்தூர் மேனாம்பேடு வ உ சி நகரில் வாடகைக்கு குடியேறினர். இந்நிலையில் மகன் கிஷோர் மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக புவனேஸ்வரி மாமியாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் இறந்த மகனின் உடலை இறுதி சடங்கு செய்வதற்கு தனது அக்கா வீட்டிற்கு புவனேஸ்வரி கொண்டு சென்றார். ஆனால், அவரது அக்கா சந்தேகப்பட்டு போலீசுக்கு தெரிவித்தார் .போலீசார் நடத்திய விசாரணையில் கிஷோர் அடித்து கொல்லப்பட்டது தெரிந்தது.

கிஷோரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விசாரணையில் புவனேஸ்வரியும், கள்ளகாதலன் சோமசுந்தரமும் சேர்ந்துதான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. சோமசுந்தரம் 4 மாதத்திற்கு முன்பு மேனாம்பேடு பகுதிக்கு குடிவந்துள்ளார்.

அப்போது, இருந்தே கிஷோரை அடிக்கடி தாக்கி வந்துள்ளார். இதனை அக்கம்பக்கத்தினர் கவனித்துள்ளனர். தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. இச்சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தன்று உணவு உண்ணவில்லை எனக்கூறி குழந்தையை தோசை கரண்டியால் புவனேஸ்வரி அறைந்ததுடன், எட்டி உதைத்ததில் காயம் ஏற்பட்டு குழந்தை பலியானது தெரியவந்துள்ளது.