பல கோடி செலவில் நடாத்தப்பட்ட ரோபோஷங்கர் மகள் திருமணம்!

நடிகர் ரோபோ ஷங்கர் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் ஆனவர். சின்ன வயதில் பாடி பில்டிங் செய்து வந்த அவர், காமெடி ட்ராக்கில் குதித்து பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர்.

தற்போது ரோபோ ஷங்கர் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அவருக்கு என்று ரசிகர்களும் அதிகம் இருக்கிறார்கள்.

பல கோடி செலவு செய்தது ஏன் .
சமீபத்தில் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அதற்காக ரோபோ ஷங்கர் பல கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்தார்.

அவ்வளவு செலவு செய்தது ஏன் என சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது ரோபோ ஷங்கர் கூறி இருக்கிறார்.

எனது திருமணம் மிக மிக எளிமையாக நடந்தது. பெண் வீட்டில் இருந்து சிலர் வந்திருந்தார்கள், மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்த ஒரே ஆள் நான் தான். அந்த அளவுக்கு சிம்பிளாக என் திருமணம் சென்னை வடபழனியில் நடந்தது.

அதனால் மகள் திருமணத்தையாவது பிரம்மாண்டமாக நடத்தலாம் என எண்ணி செலவு செய்தேன் என ரோபோ ஷங்கர் பேசி இருக்கிறார்.