வெல்லப்போவது இந்த அணிதான்.! அடித்து கூறும் ரிக்கி பாண்டிங்.!!

உலககோப்பை வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையில் ஆடும் அணிகள் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணியில் ஒன்றுதான் இந்த உலக கோப்பையை வெல்லும் என பல முன்னணி வீரர்கள் தெரிவித்துள்ளனர். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடி வருகிறது.

இந்நிலையில் உலககோப்பை எந்த அணி வெல்லப் போகிறது என்பது குறித்து முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியவை, இங்கிலாந்து அணி இந்த உலக கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்பு உள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

இங்கிலாந்து அணி அண்மைக்காலமாக அபாரமாக அடிவருகிறது. மற்றொரு காரணம் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது இந்த அணிக்கு கூடுதல் பலம் என்று கூறினார். இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள், இங்கிலாந்துக்கு கடும் சவாலாக இருக்கும். தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளும் வலுவாக தான் உள்ளது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்