ரத்னம் திரை விமர்சனம்

இயக்குனர் ஹரி கமர்ஷியல் படங்களின் கிங் என்று அழைக்கப்படுபவர். இவர் படங்களுக்கு என மிகப்பெரிய பேமிலி ஆடியன்ஸ் கூட்டம் இருக்கும், அந்த வகையில் விஷாலுடன் தாமிரபரணி, பூஜை தொடர்ந்து ஹாட்ரிக் அடித்தார ரத்னம் மூலம், பார்ப்போம்.

கதைக்களம்
ஆந்திரா-தமிழ்நாடு பார்டரில் மிகப்பெரும் கொள்ளையுடன் படம் தொடங்குகிறது, அதை தொடர்ந்து வேலூரில் விஷால் எம் எல் ஏ சமுத்திரக்கனி அடியாளாக போலிஸ் தட்டிகேட்க வேண்டிய அநியாயங்களை தனி ஆளாக தட்டி கேட்கிறார்.

அப்போது ஒரு நாள் வேலூரில் ப்ரியா பவானி ஷங்கரை பார்க்க, அவர் இங்கு நீட் எக்ஸாக் எழுத வருகிறார். ஆனால், வந்த இடத்தில் ப்ரியா பவானி ஷங்கரை ஒரு ஆந்திரா கூலிப்படை கும்பல் கொல்ல வருகிறது.

இதை அறிந்த விஷால் அவருக்கு பாதுக்காப்பு கொடுக்க, பிறகு தான் தெரிகிறது, ஒரு நிலப்பிரச்சனையில் ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தையே அழிக்க, ஆந்திராவின் ராயுடு பிரதர்ஸ் தேடி வர, இந்த பிரச்சனை விஷால் கைக்கு வருகிறது, பிறகு என்ன விஷால் நிலத்தை மீட்டு ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
ஹரி படத்திற்கு என்றே அளவு எடுத்த செஞ்ச பீஸ் போல் இருக்கிறார் விஷால். ஆறடி உயரம், 50 பேரை தூக்கி போட்டு அடித்தால் கூட நம்பும் லாஜிக் என படம் முழுவதும் ஆக்‌ஷன் அதகளம் செய்துள்ளார்.

ஆனால், மார்க் ஆண்டனி பாதிப்பு இன்னமுமே உள்ளது, இரண்டிலுமே அம்மாவை நினைத்து ஏங்கும் கதாபாத்திரம் விஷாலுக்கு , என்ன அதில் காமெடி, இதில் சீரிஸ், அது ஒரு கட்டத்தில் விஷால் சீரிஸாக பேசினாலும் மார்க் ஆண்டனி போல தெரிகிறது.

ப்ரியா பவானி ஷங்கர் விஷால் அம்மா போலவே உள்ளதாள் அவரை காப்பாற்ற போராடும் கதை என்றாலும் அதில் பல பேஸ் ஸ்டோரிகளை வைத்து ஹரி தனக்கே உரிய ஸ்டைலில் விறுவிறுவென எடுக்க முயற்சி எடுத்துள்ளார்.

வெறும் ஹீரோயின் ஆக மட்டும் கத்தி எடுக்காமல் விஷாலுக்கு என்று வைத்த பேக் ஸ்டோரி, விஷாலுக்கும் வில்லனுக்கும் என்ன சம்மந்தம் என ஒவ்வொன்றாக காட்டிய விதம், ஹரி இன்றும் கமர்ஷியலில் புதிதாக செய்ய முயற்சிக்கிறார் என்பதை காட்டுகிறது.

இடைவேளை சேஸிங் காட்சி பரபரப்பையும், டெக்னிக்கலாக சூப்பராகவும் உள்ளது. மற்றப்படி வில்லனை ஊர் விட்டு ஊர் போய் கொல்லும் ஹரியின் டெம்ப்ளேட் காட்சிகள் அவர் படத்திலே பார்த்த நியாபகத்தை ஏற்படுத்துகிறது.

ஒரே ஊரில் தான் விஷால் அம்மா குடும்பம் உள்ளது ப்ரியா பவானி குடும்பமும் உள்ளது, அவர்களுக்கு தெரியாத உருவ ஒற்றுமை விஷாலுக்கு மட்டுமே தெரிந்தது கொஞ்சம் லாஜிக் பார்த்துயிருக்கலாம் ஹரி சார்.

ஹரி படம் என்ன விறுவிறுப்பாக சென்றாலும், தொய்வு ஏற்படும் போது காமெடி பாடல்கள் துணை நிற்கும், இதில் ஹெவி மிஸ்ஸிங், வேலூர் என்பதால் வெயில் கொஞ்சம் ஓவர் தான், ஆனால், எதோ பாலைவானம் போல் காட்டியது ஏன் சார்.

க்ளாப்ஸ்

ஆக்‌ஷன் காட்சிகள்.

இடைவேளை சிங்கிள் ஷாட் சேஸிங்.

செண்டிமெண்ட் காட்சிகள்

பல்ப்ஸ்

பார்த்து பழகி போன காட்சிகள்.

மொத்தத்தில் ஹரி-விஷால் கூட்டணியில் குடும்பங்கள் ரசிக்கும் படமாக வந்துள்ளது ரத்னம். ஆனால், இது எந்த அளவிற்கு இளைஞர்களை கவரும் என தெரியவில்லை.