மயக்க மருந்து கொடுக்கப்பட்டு 17 நோயாளிகள் கொலை…

பாரீஸ், பிரான்ஸ் நாட்டில் மயக்கவியல் மருத்துவர் ஒருவர், 17 நோயாளிகளுக்கு விஷம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு பிரான்சை சேர்ந்தவர் பெடரிக் பெச்சியர், 43. மயக்கவியல் மருத்துவர்.

இவர் 2017 ல் சக மருத்துவரின் மருத்துவ உபகரணத்தில் விஷத்தை ஏற்றியதால், 9 நோயாளிகள் உயிரிழந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டாலும், மருத்துவத் தொழிலில் ஈடுபட அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மேலும் 17 நோயாளிகள் இதே போன்ற சம்பவத்தால் உயிரிழந்துள்ளதால் பெடரிக் கைது செய்யப்பட்டுள்ளார்.விஷம் ஏற்றப்பட்ட உபகரணங்களால் நோயாளிகள் ஆபத்தான நிலைக்கு செல்லும் போது, அவர்களை காப்பாற்றி தன் மருத்துவ திறமையை காட்டவே இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டதாக சக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இக்குற்றச்சாட்டை பெடரிக் மறுத்துள்ளார்.