சொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.!!

கரூர் மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக தம்பிதுரை மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பாக ஜோதிமணி போட்டியிடுகிறார்.

தேர்தல் வாக்கு பதிவுக்கு இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில், இரண்டு வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கும் முன் ஜோதிமணி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, போது மக்களில் ஒருவர், அவரை பார்த்து, இலங்கையில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சிக்கு ஆரத்தி ஒரு கேடா என்று கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிமணியின் ஆதரவாளர்கள் மற்றும் திமுகவின் செந்தில் பாலாஜியின் உடைய குண்டர்கள், கேள்வி கேட்ட நபரை கொலை வெறி தாக்குதல் நடத்தினர். பின்னர் அன்று இரவு காவல்நிலையம் சென்ற ஜோதிமணி, அடிவாங்கிய நபர் தன்னை கொலை செய்ய முற்பட்டதாக புகார் அளித்தார். மேலும் தம்பிதுரை தான் இதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜோதிமணி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார், அந்த புகைப்படத்தில், ”நான் கரூரில் தோல்வி அடைந்தால் அதற்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான்” என்று தம்பி துரை சொல்லியதாக, திமுகவின் துதிபாடும் ஒரு தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ புகைப்படம் போன்று வெளியிட்டு இருந்தார்.

இதனை கண்ட அதிமுக , பாஜக, திமுக, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ”மேடம் இது போட்டோ ஷாப், தம்பிதுரை இதில் உள்ளதுபோல் பேட்டிகொடுக்கவே இல்லை” என்று அவரை கழுவி ஊற்ற, உடனே அந்த பதிவை அழித்து விட்டார்.

தேர்தலில் நாம் தோன்றுவிடுவோம் என்ற பயத்தில், போட்டோ ஷாப் புகைப்படத்தை கூட பதியும் அளவிற்கு ஜோதிமணியின் நிலை மாறியுள்ளது.