ஆடம்பர ஹொட்டலில் 5 லட்சத்திற்கு சாப்பிட்ட ஏழை நபர்… அதிர்ச்சியடையாமல் அடுத்து படிங்க!..

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆடம்பர ஹொட்டல்களில் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தப்பி வந்த ஏழை நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு பிரான்ஸில் உள்ள Valence நகரில் Maison Pic என்ற ஆடம்பர ஹொட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஹொட்டலுக்கு 61 வயதான வீடில்லா நபர் ஒருவர் சாப்பிட சென்றுள்ளார்.

வகை வகையான உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்ட அவர் யாரும் கவனிக்காத நேரத்தில் அங்கிருந்து தப்பியுள்ளார். இந்த ஹொட்டலில் அவர் சாப்பாடு உள்பட 2,354 யூரோ வரை பணம் கொடுக்காமல் தப்பியுள்ளார்.

பின்னர், சில நாட்களுக்கு பிறகு Radio in Chamalieres என்ற ஹொட்டலுக்கு சென்ற அதே நபர் 1,358 யூரோ வரை செலவு செய்து விட்டு வழக்கம் போல் பணம் கொடுக்காமல் எஸ்கேப் ஆகியுள்ளார்.

ஆனால், இந்நபர் குறித்து தொடர் புகார்களை பெற்று வந்த பொலிசார் இந்த ஹொட்டலில் இருந்து வெளியே வந்தபோது அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

நபரிடம் நடத்திய விசாரணையின்போது, அவருக்கு வீடு இல்லாத காரணத்தினால், ஆடம்பர ஹொட்டல்களில் புகுந்து சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தப்பியுள்ளது தெரியவந்துள்ளது.

இதுவரை 3,712 யூரோ(5,94,942 இலங்கை ரூபாய்) வரை அவர் ஏமாற்றியுள்ளார். ஹொட்டல்களில் சாப்பாடு மற்றும் அறைகளை பயன்படுத்தியது உள்பட பிற சேவைகளும் இக்கட்டணத்தில் அடங்கும்.

மேலும், இவ்வாறு ஹொட்டல்களுக்கு பயணம் மேற்கொள்ள அவர் ரயில்களில் பயணம் செய்ததாகவும், ஆனால், ரயில் கட்டணத்தை கூட அவர் செலுத்தியது இல்லை எனவும் தெரியவந்துள்ளது. வீடில்லா அந்நபரை கைது செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.