mankayakarasi (1)திருமதி மங்கையற்கரசி குமாரசாமி

பிறப்பு : 26 ஒக்ரோபர் 1946 — இறப்பு : 3 பெப்ரவரி 2016

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி குமாரசாமி அவர்கள் 03-02-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னப்பபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
ராகவன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கிரிதரன், முரளிதரன்(சுவிஸ்), ஜெயதரன்(நெதர்லாந்து), சுஜாதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், பங்கையற்செல்வி(சுவிஸ்), விஜயலட்சுமி(கனடா), காலஞ்சென்ற சாரதாம்பிகை(சுவிஸ்), விமலா(சுவிஸ்), திருநாவற்கரசு(கனடா), காலஞ்சென்ற தவவிநாயகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கண்ணையா, சண்முகம், சீவரட்ணம், சண்முகநாதன், பேரின்பநாதன்(சுவிஸ்), பாலசுப்பிரமணியம்(இலங்கை), தணபாலசுப்பிரமணியம்(சுவிஸ்), காலஞ்சென்ற கிருஸ்ணபாலன், சுகிர்தா(கனடா), தமயந்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திரவதனா(அவுஸ்திரேலியா), யோகநிதி(சுவிஸ்), ரஞ்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
ராகவி, கிஷாந்(அவுஸ்திரேலியா), கிரிஷான், அபிராமி(லண்டன்), அஷ்னா, அவநெஷ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: சனிக்கிழமை 06/02/2016, 04:30 பி.ப
முகவரி: Crematorium laan 6, Groningen, Netherlands
தகனம்
திகதி: சனிக்கிழமை 06/02/2016, 06:00 பி.ப
முகவரி: Crematorium laan 6, Groningen, Netherlands
தொடர்புகளுக்கு
ராகவன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61433637051
முரளி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765112153
ஜெயா — நெதர்லாந்து
தொலைபேசி: +31686196479
சுஜாதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447941532036

திருமதி முருகேசு நல்லம்மாதிருமதி முருகேசு நல்லம்மா

பிறப்பு : 4 டிசெம்பர் 1922 — இறப்பு : 27 சனவரி 2016

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முருகேசு நல்லம்மா அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

பூரணம், மனோன்மணி(ஓய்வுபெற்ற பிரதம தாதி), இராமச்சந்திரன்(ஓய்வுபெற்ற அதிபர்), குலசிங்கம்(குணம்- முன்னாள் ப. நோ. கூ. சங்க லிகிதர்), தனபாலசிங்கம்(பாலசிங்கம்- கனடா), தர்மபாலன்(குஞ்சு- கனடா), இன்பநாதன்(பாண்டு- கனடா), பத்மநாதன்(ராசன்- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சிவக்கொழுந்து, சின்னதுரை, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, தம்பிஐயா(ஓய்வுபெற்ற தபால் அதிபர்), வசந்தகோகிலம், காலஞ்சென்ற ஞானசௌந்தரி, குலநாயகி, மீனாம்பிகை(கனடா), யோகராணி(கனடா), திருக்கலாதேவி(கனடா), சுகந்தினி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கந்தையா, இளையதம்பி, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேவறஞ்சிதா, கனகறஞ்சிதா, தெய்வேந்திரன், செல்வறஞ்சிதா, லோகறஞ்சிதா, யோகேந்திரன், சுரேந்திரன், குமணன், நிமலினி, எழிலினி, லோஜினி, கபிலன், தயன், ஜசீலன், சசிபரன், ஜெயந்தன்(பாபு), சத்தியன், ஜனகன், நயனன், சுவர்ணன், ருதுசா, சாகித்தியா, கவிவர்ணன், சுபோதன், சுபேதன், சுபாங்கன், இலக்கியன், சங்கீர்த்தன், மாதங்கி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற நிரோசா, உஜிதா, கோசலா, லொசானி, டயானி, ஜனோதன், தருணிகா, தருணிகன், கோபிகன், பிருந்தன், பிரணவன், வைஸ்ணவி, பிரதீஸ், யாமளன், சைதன்யன், காலஞ்சென்ற சௌஜன்யன், சின்மயன், அனந்தினி, வர்சன், தமிழவி, அகரன், யதுமினன், அக்சதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் திருவையாற்றிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 54/1,
திருவையாறு,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராமச்சந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772556004
தம்பிஐயா மனோன்மனி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776166080
பூரணம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772644017
குலசிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766860254
தர்மபாலன்(குஞ்சு) — கனடா
தொலைபேசி: +19054172098
பத்மநாதன்(ராசன்) — நோர்வே
தொலைபேசி: +4721902881

அமரர் கந்தையா பாலசுப்பிரமணியம்அமரர் கந்தையா பாலசுப்பிரமணியம்

(சின்னையா)

அன்னை மடியில் : 4 பெப்ரவரி 1927 — ஆண்டவன் அடியில் : 28 டிசெம்பர் 2015

திதி : 27 சனவரி 2016

யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன்குளம், சுவிஸ் Zurich, Dielsdorf ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்கே
எங்களை எல்லாம் அன்புடனும் பண்புடனும்
வளர்த்து நல்வழி காட்டி எம்மை
ஆளாக்கிய அன்புத் தெய்வமே!

இன்றுடன் நீங்கள் இறைவனடி சேர்ந்து
31 நாளாகி விட்டதே நம்ப முடியவில்லை!
எங்கள் நெஞ்சு வெடிக்கிறதே ஐயா
உங்கள் முகம் எப்போ பார்ப்போம்?

31 நாள் என்ன 31 ஜென்மம் ஆனாலும்
நாங்கள் வாழும் வரை நீங்களும்
எங்களுடன் வாழ்வீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள்
மனோன்மணி அம்மாளை வேண்டுகின்றோம்!

என்றும் உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

எமது தந்தையின் பிரிவுச்செய்தி கேட்டு ஓடோடி வந்து உதவி செய்து துயரங்களில் பங்கேற்ற நண்பர்கள், நண்பிகளுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், பல வழிகளில் உதவிகள் புரிந்த அனைவருக்கும், தொலைபேசி, whatsapp மூலம் அனுதாபச் செய்தி தெரிவித்த அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 27-01-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Wehntalerstrasse 19, 8157 Dielsdorf Zurich, Switzerland என்னும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் வீட்டுக்கிரியையிலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
சபினாஷ்(பேரன்)
தொடர்புகளுக்கு
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41762942010

    அமரர் கனகசபை சிவபாதம்  தோற்றம்          மறைவு
18 ஏப்ரல் 1933      17 சனவரி 2011
அமரர் கனகசபை சிவபாதம்

அமரர் சிவபாதம் பொன்னம்மாதோற்றம்             மறைவு
12 மே 1938 7            பெப்ரவரி 2015
அமரர் சிவபாதம் பொன்னம்மா

அமரர் கனகசபை சிவபாதம்

திதி: 21-01-2016

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை சிவபாதம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு ஐயாவே உங்களை இழந்து
ஆண்டுகள் ஐந்து ஆனபோதும்
ஆறாத ரணத்துடன் நாங்கள்
நடைப்பிணமாய் நடமாடுகின்றோம்!

உங்கள் நினைவுகளை நெஞ்சில் சுமந்து
கடின உழைப்பை சிரமேற்கொண்டு
கடமைகளை சரிவரச்செய்து
கண்ணியத்துடன் வாழ்ந்து வந்தவரே

வெள்ளை நிற ஆடையை விரும்பி அணிபவரே
ஆடை மட்டுமல்ல உங்கள் உள்ளமும் வெள்ளை ஐயா!

எத்தனை காலங்கள் கழிந்தாலும் வையகத்தில்
எம்மோடு நீங்கள் இருந்த கணங்களை நினைத்து
நாம் ஆறுதல் அடைவோம் ஐயாவே!

சிவபாதம் பொன்னம்மா

திதி: 27-01-2016

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதம் பொன்னம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உதிரத்தைப் பாலாக்கி எமக்கு ஊட்டியவளே!
உங்களை நாம் இழந்து ஓராண்டு ஆனதம்மா!
எம்மை அன்புடன் அரவணைக்க அருகில்
நீங்கள் இல்லாமல் தவிக்கின்றோம் நாங்களம்மா!

எத்தனை உறவுகள் அருகிலிருந்து
அன்பினைப் பொழிந்தாலும் அத்தனையும்
உந்தன் அன்புக்கு ஈடாகுமா அம்மா!

எங்கள் கனவிலும் நினைவிலும்
உங்கள் முகம் தானம்மா!
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கே
பிள்ளைகளாய் பிறந்திட மனம் ஏங்குதம்மா!­­­­­

தகவல்
குடும்பத்தினர்
123456
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +19052161801
செல்லிடப்பேசி: +16472437472
– — கனடா
தொலைபேசி: +16478212252
தயா — கனடா
செல்லிடப்பேசி: +19052161801
கருணா — கனடா
தொலைபேசி: +16472437472
சிவம் — கனடா
தொலைபேசி: +16478212252
திரு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41622121434
சிவலிங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447418279
சிவநிதி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41217111191

அமரர் கணேசு திருநாவுக்கரசுஅமரர் கணேசு திருநாவுக்கரசு

பிறப்பு : 3 பெப்ரவரி 1948 — இறப்பு : 18 சனவரி 2014

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணேசு திருநாவுக்கரசு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு இரண்டு போனாலும்
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு

எம்மை ஆறாத் துயரத்தில்
விட்டு போனதேனோ
புன்னகை புரியும் உங்கள் முகம்

எமக்கு தினமும் தெரிகிறது
ஆனாலும் அது உண்மை இல்லை
என்று நினைத்தபின் எம் மனம் கலங்குகிறது

என்றும் உங்கள் ஆத்மா எங்களுடன் இருக்கும்
தினமும் கண்ணீர் விட்டபடி கலங்கி
நிற்கும் உங்கள் அன்பு மனைவி,
அன்பு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

உங்கள் ஆத்மா சாந்தி அடைய தினமும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்…

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செந்தூரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41323537570
செல்லிடப்பேசி: +41765641888

திருமதி சிவபாக்கியம் முத்துக்குமாருதிருமதி சிவபாக்கியம் முத்துக்குமாரு

அன்னை மடியில் : 5 ஓகஸ்ட் 1919 — ஆண்டவன் அடியில் : 23 சனவரி 2016

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கலட்டி சீனியர் ஒழுங்கையை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் முத்துக்குமாரு அவர்கள் 23-01-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்ரமணியம்(தம்பு விதானையார்), காமாட்சி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற முத்துகுமாரு அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவகுமார், ஸ்ரீகுமார், மற்றும் தர்மகுமாரி(கனடா), ரதிகுமாரி(கொழும்பு), யசோகுமார்(லண்டன்), செல்வகுமாரி(கலிபோர்னியா), விஜயகுமார்(லண்டன்), புஷ்பகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சின்னம்மா, சிங்கப்பூர் வேலாயுதம், வினாசித்தம்பி, கதிராசிப்பிள்ளை, நல்லையா, குணசிங்கம் ஆகியோரின் அன்பு இளையச் சகோதரியும்,

பத்மநாதன்(கனடா), காலஞ்சென்ற சிவதாசன், தெய்வேந்திரன்(கலிபோர்னியா), உதயகுமார்(லண்டன்), சகுந்தலாதேவி(யாழ்ப்பாணம்), கமலாம்பிகை(சென்னை), ஸ்ரீ வசந்தமாலா(லண்டன்), உதயராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகவல்லி, சபாரத்தினம்(பெரியசபா), இரத்னசிங்கம், சிவஞானவல்லி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கமலகுமார்(கண்ணன்- கனடா), சதிஸ்குமார், நர்மதா, மதுரா, ரூபனா, பிரியந்தி, ஹரிபிரசாந்த்(ஹரி- கனடா), லகுஷியமா, ஓம்பிரகாஷ், ஜெனனி, அனோஜா, நிரஞ்சா,சௌமியா, விபஞ்சி, சேந்தன், ரிஷ்யஷங்கர்(ரிஷி), பிரேம்சந்த்(சந்துரு), திவ்யந்த்(திவி), கெளதம், சிந்தியா, கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஷ்ணு, வைஷ்ணவி, அபிஷன், விக்ரம், மதுஷா, அனுராகா, துஷாரா, பிரித்திகா, லக்சனா, சஹானா, விட்டல், பிரேம்சாயி, ஆதனா, வெற்றி, நதீஷ், ஆகாஷ், மீனாட்ஷி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 30/01/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Aeterna Funeral Complex, 55 Gince street, Saint Laurent, QC H4N 1J7, Canada(T.P +15142845440)
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/01/2016, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Aeterna Funeral Complex, 55 Gince street, Saint Laurent, QC H4N 1J7, Canada(T.P +15142845440)
தொடர்புகளுக்கு
ஹரி(பேரன்) — கனடா
தொலைபேசி: +15147814274
கண்ணன்(பேரன்) — கனடா
தொலைபேசி: +16138995660
பத்மநாதன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +15143128527
யசோகுமார்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447808477755

நல்லம்மா மாரிமுத்துதிருமதி நல்லம்மா மாரிமுத்து

மலர்வு : 11 ஒக்ரோபர் 1929 — உதிர்வு : 22 சனவரி 2016

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், தாவடி வன்னியசிங்கம் வீதியை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா மாரிமுத்து அவர்கள் 22-01-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆசையப்பு, குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

லிங்கேஸ்வரன், காலஞ்சென்ற இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, நாகமுத்து, அன்னம்மா, கதிராசிப்பிள்ளை, கண்ணம்மா, வள்ளிப்பிள்ளை(தேவி), மற்றும் திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சித்ரா, தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுனன், நிரூஷா, கெளதம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
லிங்கேஸ்வரன்(மகன்), திருமதி.இராஜேஸ்வரன்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/01/2016, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Hendon Crematorium, Holders Hill Road, Mill Hill, NW 7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு
திருமதி.இராஜேஸ்வரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442089039897
செல்லிடப்பேசி: +447846117891
லிங்கேஸ்வரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497424226225

பிரேமலா ராஜ்மோகன்திருமதி பிரேமலா ராஜ்மோகன்

மலர்வு : 7 ஓகஸ்ட் 1956 — உதிர்வு : 20 சனவரி 2016

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். ஏழாலை, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரேமலா ராஜ்மோகன் அவர்கள் 20-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விஜயரட்ணம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சற்குணராசா, பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

ராஜ்மோகன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவிதன்(Stefan), விஜிதன்(Diayan), கவிதன்(Karon) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கத்ரீனா(Catrina) அவர்களின் அன்பு மாமியாரும்,

அமிர்தவதனா, நிர்மலா, ஆனந்தசொரூபன், கோகிலா, அற்புதா, அருட்சகோதரர் ஜோன் விஜயரட்ணம்(மதி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலசேகரம், ஜெயசூரியன், ரவி, பாலசிங்கம், டில்த்திரா, நிர்மலா, ராஜ்குமார், பிரேமலதா, ராஜராஜன், பரிமளா, வத்சலா, ரஜிதா, நவரஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 23-01-2016 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணி முதல் ந.ப 12:00 மணி வரை Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவர், பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 22/01/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 23/01/2016, 09:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 23/01/2016, 12:00 பி.ப
முகவரி: Pine Ridge Memorial Hall, 635 Birchmount, Canada
தொடர்புகளுக்கு
ராஜ்மோகன்(கணவர்) — கனடா
செல்லிடப்பேசி: +16477669267
நிர்மலா(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி: +14162922884
ஜோன் விஜயரட்ணம்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14166276195

மார்க்கண்டு மாரிமுத்துஅமரர் மார்க்கண்டு மாரிமுத்து

பிறப்பு : 14 யூன் 1931 — இறப்பு : 24 சனவரி 2007

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Waltrop ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு மாரிமுத்து அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

எத்தனை உறவுகள் அகிலத்தில் இருந்தாலும்
காலத்தின் மோதலினால் அவை மாறுபடும் தாயே!
எங்களை அரும்பாடுபட்டு அறநெறியில் வளர்த்தீரே!

அம்மா ஒன்பது ஆண்டு கரைந்ததம்மா
உன் அன்பு முகம்,
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!

நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!

பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும் பிரியாத தாய் நீயம்மா!
அன்று எங்கள் அழுகையின் அர்த்தம் புரிந்த
அகராதி புத்தகம் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா!

ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
உன்னை போன்று அன்பு செய்ய யாரும் இல்லையம்மா
இவ் உலகில்…

என்றும் பிரிவால் துயறுரும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

தகவல்
குடும்பத்தினர்

பீதாம்பரம் செல்லம்மாஅமரர் பீதாம்பரம் செல்லம்மா

மண்ணில் : 13 மே 1936 — விண்ணில் : 23 சனவரி 2013

யாழ். மாரீசன் கூடலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த பீதாம்பரம் செல்லம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் வீட்டு குல தெய்வம்

அன்புடனும் அளவற்ற பாசத்துடனும்
கண் இமைக்குள் வைத்து
வாழ வழி காட்டிவிட்டு
எம்மை விட்டு பிரிந்தது ஏனோ?

துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
உன்னுடன் ஒரு நாள் பழகுவோரை கூட
“ஆசை அம்மா” என
இறுதிவரை அழைக்கும் அளவுக்கு
எல்லோரையும் அரவணைத்த தெய்வமே.

நம் உள்ளத்தில் மட்டும் இல்லாது
உன் ஆசை மருமக்களின் உள்ளத்திலும்
வளரும் உன்னதமான தெய்வம் அம்மா நீ!

உங்கள் உடல்தான் பிரிந்து சென்றது
ஆனாலும் முழு நினைவாக உங்கள்
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797783309

சோமசுந்தரம் சோதிலிங்கம்திரு சோமசுந்தரம் சோதிலிங்கம்

(ஐயா)

பிறப்பு : 15 ஓகஸ்ட் 1945 — இறப்பு : 21 சனவரி 2016

யாழ். கரவெட்டி கரணவாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Heimberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சோதிலிங்கம் அவர்கள் 21-01-2016 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமுதநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற செல்வநாயகம், சோதிமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுகந்தினி(கனடா), சுகந்தன்(பின்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கதிர்த்தம்பி(கனடா), நதியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாருகா, நித்தி, மைத்தி, மாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 22/01/2016, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium, Schönaustrasse 23, 3600 Thun, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 23/01/2016, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium, Schönaustrasse 23, 3600 Thun, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/01/2016, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium, Schönaustrasse 23, 3600 Thun, Switzerland
தொடர்புகளுக்கு
சுகந்தினி — கனடா
தொலைபேசி: +16478545497
சுகந்தன் — பின்லாந்து
தொலைபேசி: +358401347704
நாகேந்திரம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41763281591
செல்லிடப்பேசி: +41787157596
யோகி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788768825

திலகவதி உலகநாதன்அமரர் திலகவதி உலகநாதன்

மலர்வு : 1 சனவரி 1944 — உதிர்வு : 21 சனவரி 2014

திதி : 28 சனவரி 2016

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திலகவதி உலகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் இதய தெய்வத்துக்கு

அன்பின் பிறப்பிடமாய் அறிவின் இருப்பிடமாய்
பண்பின் உருவமாய் பண்பாட்டில் சிறப்பாய்
வாழ்ந்து காட்டி எமை வாழவைத்த தெய்வம்
வானம் சென்றின்று ஈராண்டுஆனதுவோ?

ஆண்டிரண்டு சென்றாலும் ஆறாது எம் மனது
மறைந்து நீ சென்றாலும் மறையாது எம் மனதில்
துயரம் வரும் போதெல்லாம் துணையிருந்து துயர் துடைப்பாய்
துன்பப்படும் எமையிப்போ யார்வந்து துயர் துடைப்பார்

அருகிலிருந்து எமக்கெல்லாம் ஆறுதல் தந்தெம்மை
ஆளாக்கி வைத்திங்கே அழகு பார்த்திருந்தாய்
மகளை போல் நாமுன்னை மஞ்சத்தில் பார்த்திருக்க
மனங்கொண்டு பார்க்கையிலே மறைந்தது தானேனோ?

அன்பாலே எமையெல்லாம் அரவணைத்து பார்த்தவிதம்
இறைவன் விரும்பியுனை இணையடி ஏற்றானோ
இன்றளவும் எம் நெஞ்சம் உன் பிரிவால் துடிக்கிறதே
இதயக் கமலத்தில் உன் நினைவில் நாம் வாழ்வோம்!

உன்பிரிவால் வாடும்
கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள்

தகவல்
கணவர்(லண்டன்)
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459257079

rg1

பொன்னுத்துரை இராஜகோபாலன்அமரர் பொன்னுத்துரை இராஜகோபாலன்

(கோபால், கடிகார திருத்துநர்- கொழும்பு, வவுனியா)

அன்னை மடியில் : 20 சனவரி 1952 — ஆண்டவன் அடியில் : 6 பெப்ரவரி 2001

திதி : 21 சனவரி 2016

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனியா குருமன்காடு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை இராஜகோபாலன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள அப்பாவே!
ஆண்டுகள் பதினைந்து ஆனதுவோ?
எங்களை விட்டு நீங்கள் பிரிந்து

உழைப்பை உயர்வாய் மதித்தவர் நீங்களே
உறவுகளை அன்போடு அணைத்தவர் நீங்களே
உங்களின் வழித்தடத்தை பின்பற்றி
நன்மக்களாய் நாம் மிளிர்வோம்
இதுவே உங்களுக்கு நாம் தரும் உறுதி

அடுத்தொரு பிறப்பு உண்டென்றால்
அப்பொழுது மட்டுமல்ல- ஏழேழு
பிறப்பிலும் எமக்கே அப்பாவாய்
பிறந்திட வேண்டுகிறோம் அப்பா!

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது

உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள், தாய், சகோதர, சகோதரிகள்
மைத்துனர், மைத்துனிமார்கள், மருமக்கள்
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்

வீட்டு முகவரி:
இல. 18,
புகையிரத வீதி,
குருமன்காடு,
வவுனியா.

தகவல்
வசந்தரூபன்(மருமகன்- கனடா)
தொடர்புகளுக்கு
ரூபன் விஜிதா(மகள்) — கனடா
தொலைபேசி: +14378871286
விஜயலெட்சுமி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778836864
வினோத்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779544374
ஜெயந்தன்(மருமகன்) — இந்தியா
செல்லிடப்பேசி: +919698072705

திரு கணபதிப்பிள்ளை ஜெயகுமாரன்திரு கணபதிப்பிள்ளை ஜெயகுமாரன்

(குட்டி, குமார், உரிமையாளர்- Kings Food Store, New Malden)

தோற்றம் : 26 டிசெம்பர் 1967 — மறைவு : 15 சனவரி 2016

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜெயகுமாரன் அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், துரைராஜசிங்கம் பத்மினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதிவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

காரணி(Kingston University), கஜானா, கானுஜன், ஹரிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றஜ்சிதமலர், சுகந்தமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிவதனன், விவேகானந்தன், சிறிஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விரவி, விரதன், சரபன், சரசவி, சாரகி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086481272
செல்லிடப்பேசி: +447818452361
சுதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799000852

வினாசித்தம்பி குஞ்சிதபாதம்அமரர் வினாசித்தம்பி குஞ்சிதபாதம்

(குஞ்சன்)

தோற்றம் : 9 நவம்பர் 1958 — மறைவு : 22 சனவரி 2013

திதி : 19 சனவரி 2016
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வினாசித்தம்பி குஞ்சிதபாதம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

சிறு வயது முதலே குடும்பப்பாரம்
தனைச் சுமந்து
சின்னப்பிள்ளைத் தனங்களை மறந்து
சிறப்பாகவே தொழில்தனைச் செய்து
சீரிய நெறியுடன் வாழ்ந்து வந்தவரே
உங்களை அப்பாவாய் பெற்றதனால்
பெற்றோமே பெரும்பேறு

கண்ணை இமை காப்பது போல்
எங்களை அரும்பாடுபட்டு
அறநெறியில் வளர்த்தீரே
இன்று நாம் உங்களை இழந்து
ஆண்டுகள் மூன்று ஆனதுவே
உங்கள் கனிவான புன்னகையை
என்று நாம் காண்போமோ

எத்தனை ஆண்டுகள் கழித்தாலும்
எங்களின் இதயத் துடிப்பில்
நொடிப்பொழுதும் உங்கள் நினைவே

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், தாய், சகோதர, சகோதரிகள்
மைத்துனர், மைத்துனிமார்கள், மருமக்கள்
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி: +14166305301
தாய் — இலங்கை
தொலைபேசி: +94245670748

திரு நாகநாதர் கந்தையாதிரு நாகநாதர் கந்தையா

தோற்றம் : 8 ஏப்ரல் 1922 — மறைவு : 16 சனவரி 2016

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் கந்தையா அவர்கள் 16-01-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பூரணம் அவர்களின் ஆருயிக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இராசசூரியன், சந்திரசூரியன், மற்றும் பாலசூரியன்(கனடா), கனகசூரியன்(கனடா), யோகசூரியன்(கனடா), சிவசூரியன்(பிரான்ஸ்), தர்மசூரியன்(பிரான்ஸ்), சரஸ்வதி(கனடா), குணவதி(கனடா), மகேஸ்வரி(இலங்கை), நவநீதம்(கனடா), சரோஜினிதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, சின்னத்தாய், நாகலிங்கம், அன்னப்பிள்ளை, சின்னப்பிள்ளை, முத்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கெங்கேஸ்வரன்(இலங்கை), தணிகாசலம்(கனடா), நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற சாரதாதேவி, முகுந்தவச்செல்வி(கனடா), யோகராணி(கனடா), நாகேஸ்வரன்(இலங்கை), சோமசுந்தரம்(கனடா), காலஞ்சென்ற குகநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, சின்னம்மா, பாக்கியம், ஆச்சிக்குட்டி, சேதுப்பிள்ளை, கண்ணம்மா, அருளம்மா, மாரிமுத்து, பொன்னம்மா, ஐயாத்துரை, மற்றும் தவமணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லோகேஸ்வரன் விமலாதேவி, நகுலேஸ்வரன் தயாழினி, நாகேஸ்வரன் விஜிதா, நிமலேஸ்வரன் சுபாநந்தினி, கேதீஸ்வரன் வனிதா, நிறஞ்சனி அநபாயன், நாகேந்திரன் சுமித்திரா, புஸ்பராஜன் பாமினி, சந்திரகலா மகேந்திரன், யோகராஜேஸ்வரி கணேஷ்ராஜ், பாஸ்கரன் துபாரணி, மோகனரஞ்சனி, குமரவேல் சுதா, அனித்தா, தயாகர், சுதாகர் கேதீஸ்வரி, நந்தனா, வினோதன், நிமலன் ஜனனி, தயாபரன், திவாகரன், திவாஜினி, திவாரணி, பூமிகா, துர்க்கா, அகிஷன், சர்மினா, அனுசன், திலாசினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஞானன், சக்தி, அருண், மதுஷா, தருண், லவனியா, நிதில், அக்‌ஷயன், அக்‌ஷரா, பிரதீபன், ஜிபித்தா, தர்ஷன், சுனஜா, அபிநாஷ், சுஜிற், வறர்ஜித், லயமிதா, சாதனா, வறசனா, வருண், பிரவீன், வறப்பிகா, சிலாசினி, நிதூஷன், றினூஷன், அக்‌ஷரா, அஜனன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
41, Rich wood St,
M9N 3Y8,
Toronto,
Canada

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 19/01/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 20/01/2016, 08:00 மு.ப — 09:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 20/01/2016, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 20/01/2016, 12:00 பி.ப
முகவரி: Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பாலசூரியன் — கனடா
தொலைபேசி: +16477609059
கனகசூரியன் — கனடா
தொலைபேசி: +14168044467
யோகசூரியன் — கனடா
தொலைபேசி: +16477181850
தர்மசூரியன் — கனடா
தொலைபேசி: +14168487489
சரஸ்வதி — கனடா
தொலைபேசி: +19053992815
குணவதி — கனடா
தொலைபேசி: +19052300665
நவநீதம் — கனடா
தொலைபேசி: +16473420074
மகேஸ்வரி — இலங்கை
தொலைபேசி: +94242260045
சரோஜினிதேவி — கனடா
தொலைபேசி: +14168487489

ஆறுமுகம் விநாயகமூர்த்திதிரு ஆறுமுகம் விநாயகமூர்த்தி

இறப்பு : 16 சனவரி 2016

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் விநாயகமூர்த்தி அவர்கள் 16-01-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அமராவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

முத்துலஷ்மி அவர்களின் பாசமிகு கணவரும்,

யசோதரன்(கரன்), பகீரதன்(பகி), கீதாஞ்சலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரதிருபசிங்கம், பரமேஸ்வரி, மற்றும் முத்துலிங்கம், திரிபுவனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாநிதி, டகிதா, ஈஸ்வரன்(தீபன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராஜேஸ்வரி, அன்னபூரணி, நித்தியலஷ்மி, ரத்தினம், ருக்குமணி, தனலஷ்மி, காலஞ்சென்றவர்களான மோகனராணி, இந்திராணி, பத்மநாதன், மற்றும் சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, ராமநாதன், தம்பிப்பிள்ளை, மற்றும் தியாகராசா, ஆகியோரின் அன்புச் சகலனும்,

தனோச், நிதுஷிகா, நிதுராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யசோதரன்(கரன்) — இத்தாலி
தொலைபேசி: +393297174781
பகீரதன்(பகி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753393158
முத்துலிங்கம் — ஜெர்மனி
தொலைபேசி: +4921918424442
திரிபுவனம் — ஜெர்மனி
தொலைபேசி: +495113908063
தீபன்/கீதா — இலங்கை
தொலைபேசி: +94242225108
செல்லிடப்பேசி: +94776366331

விஸ்வலிங்கம் நடராஜாஅமரர் விஸ்வலிங்கம் நடராஜா

பிறப்பு : 28 செப்ரெம்பர் 1944 — இறப்பு : 17 டிசெம்பர் 2015

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா வளசரவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் நடராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

இந்து மாசமுத்திரம் முத்தென விளங்கும் ஈழமணித்திருநாட்டின் தலைநகரமாம் யாழ்ப்பாணம் என்னும் மாநகரில் புங்குடுதீவு என்னும் ஊரினிலே 28-09-1944 உதித்தவர் தான் இந்த ஓவிய வினோதர் என்ற பட்டத்தைப் பெற்ற ஓவியக் கலைஞர் விஸ்வலிங்கம் நடராஜா.

பல்கலைக் கலைஞர்கள் வாழ்ந்த இந்த மாநகரில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்று ஓவியத்தில் ஓரு முத்திரை பதித்தவர் தான் இந்த நடராஜா என்ற கலைஞர்.

உதிக்கின்ற செங்கதிர் கீழ்திசையில் தன் செங்கதிரைப் பரப்பியது போல் திருக்கோவில்களில் இவரினால் வரையப்பட்ட ஓவியங்களும் தெய்வீக ஒளியை பரப்பியது.

யாழ் நகரிலுள்ள பல கோவில்களில் ஓவியங்கள் இவருடைய ஓவிய திறமைகளினால் தான் உருவாக்கப்பட்டது. இவருடைய ஓவியத் திறனுக்காக ஆவரங்கால் சிவன் ஆலய நிர்வாகிகளினால் ஓவிய வினோதர் என்ற பட்டமும் யாழ்ப்பாணத்திலுள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம், ஓவிய கலா இரத்தினம் என்ற பட்டத்தையும், அகில இலங்கை திருமுறை மன்றம் ஓவியச்சுடரொளி என்ற பட்டத்தையும், மற்றும் இவருடைய ஓவியத்திறமைக்காக வண்ணக்கலையரசு ஓவியர் திலகம், ஓவிய மாமடு, வண்ணக்கலா கேசரி, ஓவியக்கலை மாமணி போன்ற பட்டங்களையும் ஆலய நிர்வாகிகளால் இவருடைய ஓவியத்திறனுக்காக வழங்கப்பட்டது.

இவர் தன் இறுதிக்கால வாழ்க்கையை இந்தியாவிலுள்ள சென்னை மாநகரில் இருக்கும் வளசரவாக்கத்தில் ஆரம்பித்தார். இவர் ஒரு சிவன் பக்தனாக இருந்த போதும் இந்தியாவிலுள்ள கோவில்களை தரிசிக்க தவறியது இல்லை.

தன்னுடைய அன்பான வார்த்தைகளினால் அனைவரையும் கவரும் சக்தி கொண்ட இவர் கடந்த மார்கழி திங்கள் 17ம் நாள் காலை அன்பு மனைவியையும், பிள்ளைச் செல்வங்களையும், மற்றும் சகோதர, சகோதரியையும், மருமக்களையும், மைத்துனர், மைத்துனிகளையும், பேரப்பிள்ளைகளையும் தவிக்க விட்டு இறைவனின் திருப்பாதத்தை சென்றடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியையில் கலந்துகொண்டவர்களுக்கும், அனுதாப செய்திகளை அனுப்பியவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்
கிருஷ்ணா(சகோதரர்)

வைத்தியநாதன் பெருமைனர்திரு வைத்தியநாதன் பெருமைனர்

இறப்பு : 15 ஜெனவரி 2016

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சந்தையடியை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியநாதன் பெருமைனர் அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெருமைனர், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

தவநாதன், குலநாதன்(டென்மார்க்), சந்திரமதி(டென்மார்க்), காலஞ்சென்ற சிவநாதன், தயாமதி, யோகநாதன், கமலநாதன், விமலநாதன், கோபிநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகம்மா, பார்வதி, ராமநாதன்(கனடா), சிவமணி, காலஞ்சென்ற லிங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரூபாவதி, யசோதா(டென்மார்க்), இளங்குமரன்(டென்மார்க்), சிறிதரன், வசந்தி, ரஞ்சனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நாகேந்திரம், சுப்பிரமணியம் பொன்னம்பலம்(கனடா), காலஞ்சென்ற தவமணி, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செந்தூரன், றொசாந், நிசாந், சுபவர்மன், விதுர்சனா, துவாரகன், கௌசிகன், டினுசிகா, சேரன், கஜானன், பகிர்த்தனா, பவிதன், பவிசனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கனிசா(சுவீடன்) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773451420
குலநாதன் — டென்மார்க்
தொலைபேசி: +4598192519
சந்திரமதி — டென்மார்க்
தொலைபேசி: +4536161266
தயாமதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779408839
யோகநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94215681482
கமலநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776349201
விமலநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770392906
கோபிநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773549079

தம்பிப்பிள்ளை சொர்ணம்மாதிருமதி தம்பிப்பிள்ளை சொர்ணம்மா

பிறப்பு : 13 ஏப்ரல் 1929 — இறப்பு : 10 சனவரி 2016

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சொர்ணம்மா அவர்கள் 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பொடியர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை(பகவதி) அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இமயபாலன், சிவபாலன், மற்றும் தயாநிதி(சுவிஸ்), அருந்தவநாயகி(கொழும்பு), தர்மநாயகி(வசந்தா- ஜெனிவா), கணேசலிங்கம்(கனடா), சிவநேசன்(டென்மார்க்), காலஞ்சென்ற பிறேமநாயகி, நவநீதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம், பராசக்தி, ஐயாத்துரை, v.k.நடராசா, தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திருமேனிப்பிள்ளை, ரூபி, மற்றும் கிருபாநிதி, காராளபிள்ளை, பகவத்சிங்கம், கீதா, சுதர்சினி, சிவகுமாரி(கவிதா) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான தங்கம், நடராசா, லீலாவதி, கண்ணம்மா, மற்றும் ராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விக்னேஸ்வரன் சிவப்பிரியா, தவக்குமார் ராசாத்தி, ரகுநாதன் கமலினி, சுரேஸ்வரன் சசிதாதர்சினி, சத்தியதர்சன் தர்சினி, சிவரூபன், தனுஷன், விஷ்னு, சொர்ணநிதி, சுதாகரன் சிவப்பிரியா, சிவகுமார் அனுசியா, சிவகாந்தன் கிந்துஜா, முரளிதரன் தர்சினி, தனுஷன், நகுலானந்தன் அமுதினி, குமரன், அமரன், கஜீர்த்தா, தஜீர்த்தன், பிரகீர்த்தன், வினோஷன், யாழினி, பிரசாந், பிறின்ஸ், நிதுஷன், அபிஷன், அனுஷன் ஆகியோரின் செல்லப் பாட்டியும்,

அதீஷன், அக்ரகா, அக்ரணா, கரீஸ், அனேஸ், இனேஸ், சகிஸ், அர்ச்சனா, ரஜீவன், ராகவி, லவனி, டனுஸ், குயிலினி, கவினா, தமிழருவி, சதுர்சன், துர்கா, லதுர்ஷன், அபிஷேகா, நேகா, அனந்திகா, திலக்ஷன், அக்ஷயன், வர்சா, அபினேஸ், அஜிஸ் ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-01-2016 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயவர்த்தன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
64/63, சென் பெனடிக்,
மாவத்தை,
கொழும்பு-13.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
காந்தன்(நிதி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789208546
அருந்தவநாயகி — இலங்கை
தொலைபேசி: +94112332426
வசந்தா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41227424665
செல்லிடப்பேசி: +41788253292
கணேஷ் — கனடா
தொலைபேசி: +19562521263
சிவநேசன் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4560853144
நவநீதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793634592

தம்பு பொன்னையாஅமரர் தம்பு பொன்னையா

பிறப்பு : 7 ஓகஸ்ட் 1922 — இறப்பு : 27 டிசெம்பர் 2011

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பு பொன்னையா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அழியாத ஓவியமே!
அழைத்துவிட்டாரோ
ஆண்டவர் தம்முடனே
அழுவதற்கும் கண்ணீர் இன்றி
தவிக்கின்றோம் நாமிங்கு!

சூரியனும் உதிக்கவில்லை
சந்திரனும் தோன்றவில்லை
அமாவாசை இருட்டாக மாறிவிட்டது
எங்கள் வாழ்வு

உங்களுக்காய் நாம் உள்ளத்தில்
ஏற்றி வைத்த நினைவின்
ஒளி தீபம் மண்ணோடு
நாம் வாழும் காலம் வரை மறையாமல்
ஒளி வீசிக்கொண்டு இருக்கும்

ஒரு பிறையோடும்
விடிவெள்ளியாய் வழிகாட்ட
இன்னுயிர் துறந்து
இறையோடு கலந்த உமக்கு
கண்ணீர் மலர்தூவி அஞ்சலிக்கின்றோம்!

உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி மக்கள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்

தகவல்
குடும்பத்தினர்

சுப்பையா சுந்தரம்திரு சுப்பையா சுந்தரம்

பிறப்பு : 12 பெப்ரவரி 1936 — இறப்பு : 11 சனவரி 2016

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சுந்தரம் அவர்கள் 11-01-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னு தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்மனி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வச்சந்திரன்(டென்மார்க்), ரஞ்சினிதேவி(சுவிஸ்), மனோரஞ்சினி(கோண்டாவில்), ரவிச்சந்திரன்(சுவிஸ்), ரஞ்சிதமலர்(சுவிஸ்), ஞானச்சந்திரன்(மலேசியா), பிறேமச்சந்திரன், தனபாலன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்லத்தம்பி, முத்துத்தம்பி, மார்க்கண்டு, செல்லம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரினாஒன்சன், செல்வரத்தினம்(கண்ணன்- சுவிஸ்), சிவகுமாரன், துஸ்யந்தி(சுவிஸ்), தவராசா(சுவிஸ்), மாலினி(இந்தியா), சுபாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விக்ரோரியா, இஸபெலா, சபேனா, சோபிகா, லக்சியன், ரகுவரன், ரேகா, ரம்மியா, ஆதுசன், ஆரியன், பிறேமி, நியோமி, தர்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
தலங்காவற் பிள்ளையார் கோவிலடி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

தகவல்
ரவி(மகன்- சுவிஸ்), கண்ணன்(மருமகன்-சுவிஸ்)
தொடர்புகளுக்கு
மதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775272307
தவராசா ரஞ்சிதமலர் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344227726
ரவிச்சந்திரன் துஸ்யந்தி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444914425
கண்ணன் ரஞ்சினி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344232010
செல்லிடப்பேசி: +41798573316

சின்னத்தம்பி நடராஜாதிரு சின்னத்தம்பி நடராஜா

(பத்தர்)

மண்ணில் : 28 மார்ச் 1955 — விண்ணில் : 8 சனவரி 2016

யாழ். ஊரங்குணையைப் பிறப்ப்பிடமாகவும், குப்பிழான் காளி கோவிலடியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடராஜா அவர்கள் 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சந்தானலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தகுமாரி(சாந்தா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மோகனதாஸ், நிமோதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், அன்னலக்சுமி, மற்றும் அம்பலவாணர்(ராசு- கனடா), மனோன்மணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலமணி, பாலசுந்தரம், சுசிலா, உதயகுமார்(செல்வரத்தினம்), கருணாகரன், வசந்தகுமாரி(விஜயா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கண்ணதாசன், பாலதாசன், கவிதாசன், மதன், நவின், சோபா, காலஞ்சென்றவர்களான சுபாசினி, சுரேஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

உமாகாந்தன், மணிவண்னன், லோகேஸ்வரன், மதிவதனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனிசா, ஆயிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/01/2016, 08:00 மு.ப — 04:00 பி.ப
முகவரி: Schönaustrasse 23, 3600 Thun, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 11/01/2016, 12:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Schönaustrasse 23, 3600 Thun, Switzerland
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 12/01/2016, 12:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Schönaustrasse 23, 3600 Thun, Switzerland
கிரியை
திகதி: புதன்கிழமை 13/01/2016, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Schönaustrasse 23, 3600 Thun, Switzerland
தொடர்புகளுக்கு
சாந்தா(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41333350832
மோகன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41762600701
அம்பலவானர்(சகோதரன்) — கனடா
தொலைபேசி: +19053035346
விஜயா(மைத்துனி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41719314961
சிவா(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33662408779
கண்ணதாசன்(பெறாமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33622629732

சண்முகராஜா யோகபாலன்திரு சண்முகராஜா யோகபாலன்

மண்ணில் : 30 யூலை 1958 — விண்ணில் : 8 சனவரி 2016

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராஜா யோகபாலன் அவர்கள் 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகராஜா, மனோன்மணி(பரிமளம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வநாயகம், தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

உமாமகேசன், லோஜி, சுபாசினி, ஷர்மினி, ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபாலன், தர்மபாலன், மற்றும் பத்மினிதேவி, விமலாதேவி, நாகேந்திரன், துஷ்யந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நந்தகுமார், சுதேசன், தர்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரன், ஜெகசோதி, தயாளன், குணா, சுதாகரன், பெபி, ராஜன், நளினி, ரஜனி, தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்சனா, சுரதீஸ், நிக்சனா, அருதீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +4923819980338
பரமேஸ்வரன் — ஜெர்மனி
தொலைபேசி: +49238163463
உமாமகேசன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915213090399
லோஜி குமரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4923819609286
செல்லிடப்பேசி: +4915174110391
சுபா சுதேசன் — பிரித்தானியா
தொலைபேசி: +442030928596
பாபு — ஜெர்மனி
தொலைபேசி: +4923814361326

கிருஸ்ணபிள்ளை பிரபாகரன்திரு.கிருஸ்ணபிள்ளை பிரபாகரன்

தோற்றம்: 11 மார்கழி – 1961 மறைவு: 08-தை-2016

புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவளியை பிறப்பிடமாகவும், யாழ்.கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கிருஸ்ணபிள்ளை பிரபாகரன் அவர்கள் 08-01-2016 வெள்ளக்கிழமை அன்று காலமானார்.

அண்ணார் காலம்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை பூபதி தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரரும்,

காலம் சென்ற சிவநாமம் சறோஜினிதேவி அவர்களின் அனபு மருமகனும்.

காலம் சென்ற தர்மலிங்கம் நல்லம்மாவின் பேரனும்,

பாஸ்கரன்(மோகன்) சுவிஸ், காலம்சென்ற சுதாகரன் (கனடா), மனோகரன் (கனடா), கிருஸ்ணகரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வாசுகி, கருணா,செல்வி, ராசாத்தி, விமலை, ரஜனி, சித்திரா ஆகியோரின் அன்பு மைத்தினரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்—
குடும்பத்தினர்

பாஸ்கரன் சுவிஸ்
தொலை பேசி- 004121 647 33 16
கரன்-லண்டன்
தொலைபேசி -00441895252912
மனோ-கனடா
தொலைபேசி -0014168044126
சிவநாமம் சறோஜினிதேவி
தொலைபேசி -0041 315350392

தனிநாயகம் அன்னலெட்சுமிதிருமதி தனிநாயகம் அன்னலெட்சுமி

தோற்றம் : 1 நவம்பர் 1931 — மறைவு : 7 சனவரி 2016

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட தனிநாயகம் அன்னலெட்சுமி அவர்கள் 07-01-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, நாகாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தனிநாயகம்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தருமரெத்தினம்(ஆசிரியர்- இலங்கை), தனபாலசிங்கம்(இலங்கை), தவராஜா(நெதர்லாந்து), காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம்(A.D), புவனேஸ்வரன்(றவி), மற்றும் இந்திராணி(கல்வித்திணைக்களம்- இலங்கை), ஜெயராணி(ஆசிரியை- இலங்கை), மனோராணி(கல்வித்திணைக்களம்- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகம்மா, சதாசிவம்(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வனிதா, ஜீவா, தவம், கேதீஸ்(ஆசிரியை- இலங்கை), மரகதகுமார்(இலங்கை), காலஞ்சென்ற கண்ணதாசன், சாவித்திரி, புஸ்பவதி, ராணி, சதாசிவம், விஜியா, மங்கை, கிரிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுந்தரம், பழனி, கமலம், செல்லையா, பூபதி, சரஸ்வதி, மனோன்மணி, சதாசிவம், வன்னியசிங்கம், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பரமேஸ்வரி, தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சிவபாதம், கிருஷ்னபிள்ளை(இலங்கை), கமலாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற திருநாவுக்கரசு பாலையா, விஜியரெட்ணம்(சுவிஸ்), மகேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு சிறிய தாயரும்,

ரிஷி, கேதா, கோதா, காந்தன், ஜீவன், உதயன், நிருபா, மதுரா, சர்மிளன், அஜந்தா, அகிலன், யது, சங்கவி, அகலியா, கேதாரணி, பாலகுமார், இந்திரகுமார், ஜோசுவா, ஜோயலா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கரிகலன், மயூரன், பிருந்தன், விந்துஜா, பிரசோவன், துளசிகன், பிரணிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் உருத்திரபுரம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 136,
10ம் வாய்க்கால்,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி.

தகவல்
தவா(மகன்)
தொடர்புகளுக்கு
தவா(மகன்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31592371227
மகேந்திரன்(மகான்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41412404168
அமுதன்(பேரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798888223
றமா(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776722038
கமலாதேவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781326401

ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசுஅமரர் ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசு

தோற்றம் : 5 பெப்ரவரி 1975 — மறைவு : 9 சனவரி 2015

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
பாசமாய் எனை வளர்த்து
பார்போற்ற வாழ்வோம் என்று
பல கனவு கண்டோம் ஐயா!

பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டி மகிழ்ந்தனரே
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில் நடந்ததென்ன?
நினைத்துப் பார்க்கும் முன்னே நினைக்காமல் போனதென்ன?
நிஜம் தானா என்று எண்ணி நித்தமும் தவிக்கின்றோம்!

தாலாட்டிய தாயும் தவியாய் தவித்திட
தனயன்மார் தங்கையரும் தாழாமல் ததும்பியழ
கொண்டவள் நெஞ்சமோ குமுறி துடித்து அழ
பெற்ற பிஞ்சு மகள் பிதா உனைத் தேடி அழ
உறவுகள் அனைத்தும் உணர்வு தளர்ந்திட
ஊரே சோகமானது உன் பிரிவு என்னும் அந்த சொல்லால்

அன்போடு நீ அனைவரையும் அரவணைத்தாய்
பண்போடு நீ பலருக்கும் தோள் கொடுத்தாய்
நண்பர்களோடு நீ நாளும் நட்புற்றாய்
இறப்பு என்பது இயல்பு என்கின்றனர்
இளமையில் இப்படி இயல்பு ஆகுமா?

உள்ளத்தை கொள்ளை கொள்ளும் உத்தமனே உன் அழகு
ஜெகன் என்ற நாமம் கொண்டு ஜெகஜோதியாய் ஜொலித்தாயே
உன்னை நினைக்கையிலே உயிர் அறுந்து போகிறது
பிள்ளை கேட்கையிலே பித்துப் பிடிக்கிறது
நித்தம் உன்னைத்தேடி சித்தம் துடிக்கிறது
திக்கற்று நிக்கின்றோம் திரும்பி வரமாட்டாயோ?

ஆண்டொன்று ஆனதய்யா!
அன்பு கொண்ட உன் வதனம்
அருகினில் இருப்பது போல்
உணர்கின்றோம் அன்பால் என்றும்!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!

உங்கள் பிரிவால் துயறுரும் தாய், மனைவி, மகள்,
சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்.

தகவல்
குடும்பத்தினர்(சுவிஸ்)

மகாலிங்கம் பரமேஸ்வரிதிருமதி மகாலிங்கம் பரமேஸ்வரி

பிறப்பு : 26 நவம்பர் 1953 — இறப்பு : 5 ஜெனவரி 2016

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Frutigen ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, நாகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகாலிங்கம்(சுவிஸ்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஜீவகுமார்(சுவிஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,

தவமணி(கனடா), இராசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சம்பிக்கா(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமியாரும்,

குழந்தைவேலு(கனடா), வனித்தா(வனா- கனடா), சண்முகலிங்கம்(யோகர்- கனடா), குமாரதாஸ்(கொக்குவில்), யசோதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கண்ணப்பன், மயில்வாகனம், மற்றும் நாகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்புப் பெறாமகளும்,

குணரெத்தினம், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

காலஞ்சென்ற தனலட்சுமி, யோகேஸ்வரி(கொக்குவில்), சத்தியபாலன்(ராசன்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,

ஸ்ரீதரன்(கனடா), கேதீஸ்வரி(கனடா), கிருசாம்பாள்(கனடா), சுபாசினி(கனடா) ஆகியோரின் அன்புச் சிறியத் தாயாரும்,

சங்கீத்(சுவிஸ்), தனுஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

யதுசன்(கனடா), அனுசன்(கனடா), சந்திரகுமார்(ஜெர்மனி), சந்திரிக்கா(கனடா), சுதர்சன்(சுவிஸ்), குகரஞ்சி(சுவிஸ்), குகப்பிரியா(கொக்குவில்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 06/01/2016, 10:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Wachtmeistergasse 3, 3714 Frutigen, Switzerland
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 07/01/2016, 10:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Wachtmeistergasse 3, 3714 Frutigen, Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 08/01/2016, 10:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Wachtmeistergasse 3, 3714 Frutigen, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 09/01/2016, 10:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Wachtmeistergasse 3, 3714 Frutigen, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/01/2016, 10:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Wachtmeistergasse 3, 3714 Frutigen, Switzerland
தகனம்
திகதி: திங்கட்கிழமை 11/01/2016, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Schönaustrasse 23, 3600 Thun, Switzerland
தொடர்புகளுக்கு
மகாலிங்கம்(கணவர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41336713458
ஜீவன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798422096
ராசன்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41336711869
செல்லிடப்பேசி: +41789056274
தவமணி(சகோதரி) — கனடா
தொலைபேசி: +12892340296
இராசலிங்கம்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +16474497650
குமாரதாஸ் — இலங்கை
தொலைபேசி: +94212052361
சுகந்திமூர்த்தி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798952648

வைத்தி கணபதிப்பிள்ளைஅமரர் வைத்தி கணபதிப்பிள்ளை

மண்ணில் : 6 யூன் 1930 — விண்ணில் : 5 சனவரி 2013 

திதி : 18 டிசெம்பர் 2015

யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். இல 16, மடம் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மூச்சுப் போய் மூன்றாண்டு ஆனதா- ஐயா?
இல்லை உன் முத்துச் சிரிப்பு தொலைந்து போனதா?
என்னவென்று விம்புவேன் உம் இழப்பை

ஆண்டுகள் அழிந்தாலும் அழியாத உம் நினைவுகள்
அணுவும் உம்மை நினைக்கச் செய்கிறது
வாழ்வாங்கு வாழ வைத்தீர் ஓர் குடும்ப சுடரை
அச் சுடர் தனில் வாழ்ந்து ஒளி பரப்பினீர்

காலத்தின் கட்டளையோ- ஐயா
இன்று நீர் கடவுளாகினீர்
அருகில் இருந்தும் பார்க்க முடியாமல்- நாம்
உமை அன்றாடம் துதிக்கின்றோம்

என்றும் அழியாத நினைவுகளோடு!
உம் நினைவு நாளிற்கு எம் அளவில்லா அன்பை
மலர் சாந்தியாக செலுத்துகின்றோம்!

தகவல்
கண்ணதாசன்(சுவிஸ் Burgdorf), அகிலன்(நோர்வே Oslo)