உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகிவிட்டதா என்பதை அறிந்து கொள்வது எப்படி?

ஒரு ஸ்மார்ட்போன் நமது வாழ்வில் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அந்த ஸ்மார்ட்போனில் உள்ள சார்ஜை மெயிண்டன் செய்வது. பலமுறை சார்ஜ் செய்ய மறந்துவிட்டு குறைந்த சார்ஜுடனோ அல்லது சார்ஜையும் சேர்த்து எடுத்து கொண்டு செல்லும் நிலையோ ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும்

தற்போதைய நவீன ஸ்மார்ட்போன்களில் சார்ஜ் செய்யப்படும்போது முழுவதும் சார்ஜ் ஆன பின்னர் ஆட்டோமெட்டிக்காக மின்சாரத்தை அதில் உள்ள ஆப்சன் நிறுத்திவிடும் என்றாலும் 100% சார்ஜ் ஆனவுடன் பிளக்கை எடுத்துவிட வேண்டும் என்பது முக்கியம். ஆனால் 100% சார்ஜ் ஆகிவிட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது. அவ்வபோது பார்த்து கொண்டே இருக்க முடியுமா? இதற்குத்தான் 100% சார்ஜ் ஆனவுடன் நம்மை உஷார் படுத்த ஒருசில ஆப்ஸ்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஐந்து ஆப்ஸ்களை தற்போது பார்ப்போம்.

புல் பேட்டரி & தெஃப்ட் அலாரம் (Full Battery & Theft Alarm)

பேட்டரி சார்ஜ் ஆகி முடிந்ததை உஷார் செய்யும் ஆப்ஸ்களில் மிக முக்கியமானது இந்த வகை ஆப். அதுமட்டுமின்றி நமது ஸ்மார்ட்போன் திருடு போகும்போது நம்மை உஷார் படுத்தி நமக்கு நன்மையை செய்யும். 16.4 எம்பி மட்டுமே உள்ளதால் இந்த ஆப்-ஐ நீங்கள் எளிதாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்துவிட்டு அதை எனேபிள் செய்துவிட்டால் போதும். உங்கள் மொபைல்போன் 100% சார்ஜ் ஆனவுடன் அலாரம் அடுத்து உங்களை உஷார் படுத்தும். அலாரம் அடிக்கும் போது ஸ்டாப் அலாரம் பட்டனை க்ளிக் செய்துவிடால் போதும். உடனே அலாரம் நின்றுவிடும்

பேட்டரி 100% அலாரம்: (Battery 100% Alarm)

இந்த பேட்டரி 100% அலாரம் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்துவிட்டால் உங்களுடைய ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகி முடிந்த பின்னர் உங்கள் மொபைல் போனில் நோட்டிபிகேஷன் காண்பிக்கும். அதில் இருந்தே சார்ஜ் புல் ஆகிவிட்டதை அறிந்து கொள்ளலாம். அதேபோல் சார்ஜ் புல் ஆனவுடன் அலெர்ட் டோன் சவுண்டும் உங்களுக்கு கேட்கும்.

இந்த ஆப்-ல் அவ்வப்போது விளம்பரம் வந்து தொல்லை படுத்துவதாக நீங்கள் எண்ணினால் ரூ.60 கட்டணம் செய்தால் போதும், உங்களுக்கு விளம்பர தொந்தரவு இருக்காது. இந்த வசதியை நீங்கள் விரும்பினால் பயன்படுத்தி கொள்ளலாம்

பேட்டரி புல் அலாரம் (Battery Full Alarm)\

பேட்டரி புல் ஆகிவிட்டதை அறிவிக்கும் இன்னொரு வகையான ஆப்தான் இந்த பேட்டரி புல் அலாரம். இதில் நான்கு பாக்ஸ்கள் இருக்கும். அவற்றில் நோட்டிபிகேஷனை டர்ன் ஆப் செய்வது, 100% ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆனவுடன் அலர்ட் செய்வது, அலர்ட் நோட்டொபிகேஷன் அனுப்புவது மற்றும் வைப்ரேஷன் வசதியை வைத்துக்கொள்வது அல்லது நிறுத்திக்கொள்வது என்பதே ஆகும். இந்த ஆப் வெறும் 5.95 எம்பி அளவே இருப்பதால் இதை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் எளிதாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

பேட்டரி எச்டி+ (Battery HD +)

இந்த ஆப், ஐபோன், ஐபாட் ஆகியவற்றுக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டது. இந்த ஆப் உங்களுக்கு சார்ஜை உஷார் படுத்துவது மட்டுமின்றி நீங்கள் அதிக நேரம் இண்டர்நெட் செய்வது, ரீசார்ஜ் செய்யாமல் இருப்பது, கேம்ஸ் விளையாடிவிட்டு அப்படியே மறந்துபோய் வைத்துவிடுவது, புத்தகம் படித்துவிட்டு மறந்துவிடுவது, நேவிகேஷனை க்ளோஸ் பண்ணாமல் இருப்பது, வீடியோ சேட்டிங்கை க்ளோஸ் செய்யாமல் மறந்துவிடுவது ஆகியவற்றையும் உஷார் படுத்தும்

புல் சார்ஜ் அலர்ட் ஆப்: (Full Charge Alert with Cydia)

இதுவும் iOSவகை போன்களுக்காக உருவாக்கப்பட்ட ஆப்ஸ்களில் ஒன்று. இதன் மூலம் சார்ஜ் முழுமையாகிவிட்டால் உங்களுக்கு இசை மூலம் அதை அலர்ட் செய்யும். மேலும் விதவிதமான இசை ஆப்சன்கள் இதில் இருப்பதால் எந்த வகை இசை உங்களுக்கு வேண்டும் என்பதை தேர்வு செய்தால் அந்த இசையில் உங்களை அலர்ட் செய்யும்

சமையல் அறையில் சிரமப்படும் பெண்களே!.. இந்த ஐடியாக்கள் உங்களுக்குத்தான்…

சமையல் அறையில் பணி புரிவதுகூட பெண்களுக்கு ஒரு ரிஸ்க்கான வேலைதான். காரணம் குடும்பத்திலுள்ளவர்கள் உள்ள அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும். ஏதாவது குறை கூறிக்கொண்டே இருப்பார்கள்.

அதிலும் உணவு சமைத்து பரிமாற சற்று தாமதமாகிவிட்டால் சொல்லவே தேவையில்லை. அப்படியே வீட்டை ரணகளப்படுத்திவிடுவார்கள்.

இப்படியான பிரச்சினை தவிர்ப்பதற்காக விரைவாகவும், நேர்த்தியாகவும் முட்டை போன்ற உணவுகளை இலகுவாக உடைத்துக் கொள்ள சில ஐடியாக்கள் இங்கே தரப்பட்டுள்ளன. கண்டிப்பாக இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உபயோகப்படும்.

கொலஸ்ட்ராலைக் கரைத்து, இதய நோய் வரும் அபாயத்தைத் தடுக்கும் இயற்கை மருந்து…..

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரும் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவைக் குறைக்கும். இதற்கு ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குளோராஜெனிக் அமிலம், கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, இதய நோய் வரும் அபாயத்தைத் தடுக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, கெட்ட கொழுப்புக்களின் அளவை சீரான அளவில் குறைக்கும்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி சாறு – 1 கப்

ஆப்பிள் சீடர் வினிகர் – 1 கப்

வெங்காய சாறு – 1 கப்

எலுமிச்சை சாறு – 1 கப்

தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சாறுகளையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் குறைவான தீயில் வைத்து, 30 நிமிடம் கிளறி விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அதில் 3 கப் தேன் சேர்த்து கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும்.

இந்த மருந்தை தினமும் காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவிவிட்டு, வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

இப்படி கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் உட்கொண்டு வந்தால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இரத்தக் குழாயில் உள்ள கொழுப்பு படிந்திருப்பது கரைக்கப்பட்டு, இரத்தக் குழாய் சுத்தமாகும்.

ஏனுங்க அம்மணி நாங்க மட்டும் என்ன கோவமாவா பேசுறோம்?… செம்ம சிரிப்பு காட்சி!…

உலக மொழிகளில் தமிழுக்கு என்றுமே ஒரு தனித்துவம் உண்டு. அதில் முக்கியமாக உயிரினங்களை உயர்திணை, அஃறிணையாக வேறுபடுத்திக் காட்டுவதுதான். அதே போன்று ஒரு சொல்லுக்கு பல கருத்துக்களை எடுக்கவும் முடியும்.

இவ்வாறு ஒரு சொல் பல பொருள்பட பேசி அவ்வப்போது பிரச்சினைகளில் மாட்டுப்பட்டவர்களும், பல்ப் வாங்கியவர்களும் நிறையப்பேர் இருப்பார்கள்.

அதே போன்றே இங்கும் ஒரு பெண் தனது பெயரை சொல்லப் போய் எப்படி பல்ப் வாங்கி மௌமாகின்றார் என்று பாருங்கள்? இது ரசிப்பதற்காக மட்டுமே யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.

ஜெயலலிதாவுக்கு உடற்பயிற்சி மூலம் பிசியோதெரபி சிகிச்சை

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நேற்று 41-வது நாளாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று காலை 10.05 மணிக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அவர், மதியம் 2.15 மணிக்கு வெளியே சென்றார். மீண்டும் மாலை 4.20 மணிக்கு உள்ளே சென்ற அவர், மாலை 6.15 மணிக்கு வெளியே புறப்பட்டு சென்றார்.

இதேபோல், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்களான சீமா, ஜூடி ஆகியோரும் காலை முதலே அவ்வப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி மூலம் உடற்பயிற்சி மேற்கொள்ள செய்தனர். தற்போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த ஒரு வாரத்தில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக நேற்று அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு நடிகை நமீதா, தமிழகத்தை சேர்ந்த இந்திய கபடி அணி வீரர் தர்மராஜ் சேரலாதன் உள்பட பலர் வந்து சென்றனர்.

ஆஸ்பத்திரிக்கு வெளியே அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் பெற்று வருகிறார். லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, மற்ற மருத்துவ நிபுணர்கள் குழுவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அற்புதமான மருத்துவ சிகிச்சையை அளித்து கண்காணித்து வருகின்றனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா தற்போது பேசுகிறார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும், மிகவும் பாராட்டத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிசியோதெரபி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் உடற்பயிற்சியிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடற்பயிற்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சகஜநிலைக்கு வந்து அரசியல் பிரச்சினையிலும், ஆட்சி பிரச்சினைகளிலும் முழுநேரம் பங்கேற்க வருவார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்கு உடல்நலம் தேறிவருவதற்கு மக்கள் ஆண்டவனை தொழும் ஈடுபாடு, அவர்கள் செய்யும் பூஜை, அவர்கள் தரும் ஆசிர்வாதமும் தான் முக்கிய காரணம். அவர்கள் எல்லோருக்கும் அ.தி.மு.க. சார்பில் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை நமீதா நிருபர்களிடம் கூறும்போது, “முதல்-அமைச்சர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை மாதிரி திரும்பி வருவார்கள். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். நல்ல வலிமையோடு மீண்டும் அவர் திரும்பி வந்து பொதுமக்களுக்கு நல்லது செய்வார்” என்றார்.

ராகுகாலத்தில் ஒரு செயலைச் செய்ய நேர்ந்தால் அதற்கு பரிகாரம் உண்டா?

தவிர்க்க முடியாத பட்சத்தில் ராகுகாலத்தில் ஏதேனும் ஒரு செயலைச் செய்ய நேர்ந்தால் அதற்கு பரிகாரம் உண்டா? என்பதற்கான பதிலை கீழே பார்க்கலாம்.

ராகுகாலத்தில் ஒரு செயலைச் செய்ய நேர்ந்தால் அதற்கு பரிகாரம் உண்டா?
அன்றாடம் செய்து வரும் பணிகளுக்கு ராகுகாலம், எமகண்டம் பார்க்கத் தேவையில்லை. புதிதாக ஒரு முயற்சியில் இறங்கும்போது நல்லநேரம் பார்த்துச் செய்வது நல்லது. அப்படியும் தவிர்க்க முடியாத பட்சத்தில், ராகுகாலத்தில் ஒரு செயலைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும்போது விஷ்ணுதுர்க்கையை மனதிற்குள் பிரார்த்தனை செய்துகொண்டு காரியத்தைத் தொடங்கலாம்.

அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு சுமங்கலிப் பெண்ணின் கையால் ஒரு குவளை சுத்தமான தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு செயலில் இறங்கினால் எடுத்த பணி வெற்றிகரமாக நடந்தேறும். செயலில் வெற்றி கண்டதும் அருகில் உள்ள ஆலயத்தில் துர்க்கைக்கு விளக்கேற்ற வேண்டியது அவசியம்.

இது பெண்களுக்கு மட்டும்…

மாதவிடாய் நாட்கள் பெண்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தும் ஒன்றாகும். இந்த நேரத்தில் சில பெண்களுக்கு மன அழுத்தம், உடற்சோர்வு, வயிற்று வலி ஏற்படும். இவை அனைத்தும் உடல் அளவில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் மாதவிடாய் நேரத்தில் துர்நாற்றம் வீசுவதால் பெண்கள் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.

மாதவிடாய் காலத்தில் துர்நாற்றம் வீசுவதற்கான காரணம் இதோ, இந்த நேரத்தில் பெண்களின் PH அளவு அதிகரிப்பதால் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து துர்நாற்றம் வீசச் செய்கிறது.

மேலும், கருப்பையின் புறப்பகுதிகளில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளின் தொற்றுக்கள் இருப்பதால், வெளியேறும் ரத்தத்தில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

மாதவிடாய் காலத்தில் பெண்ணுறுப்பு ஈரப்பதமாக இருப்பதால், பூஞ்சை தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தம் சுகாதார பட்டையின் காரணமாக, காற்று உட்புக முடியாமல் தடுக்கப்படுகிறது. இதுவும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

நாகதேவதை சிலையில் இருந்து கசியும் தண்ணீர், பக்தர்கள் ஆச்சர்யம்

தமிழகத்தில் உள்ள சாமி சிலைகளில் இருந்து அவ்வப்போது தண்ணீர், பால் ஆகியவை கசிந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வாணியம்பாடி கோயிலில் நாகதேவதை சிலையிலிருந்து திடீரென தண்ணீர் கசிந்து வருவதால், கடவுள் அருள் என பக்தர்கள் போற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் பழமை வாய்ந்த ஓம்சக்தி அம்மன் கோயில் உள்ளது. அங்கு நாகதேவதை சிலை உள்ளது. நாகதேவதை சிலை முன் செவ்வாய், வெள்ளி மற்றும் முக்கிய விஷேச நாட்களில் பெண்கள் எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுவது வழக்கம். நேற்று அதே போல் ஒரு பெண் விளக்கு ஏற்ற சென்ற பொழுது, நாகதேவதை சிலையிலிருந்து தண்ணீர் கசிவதை கண்டு வியந்தார்.

இந்த தகவலை கோயில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். உடனே பூசாரி அங்கு வந்து அந்த தண்ணீரை துடைத்து விட்டு பார்த்தார். ஆனால் மீண்டும் தண்ணீர் கசிந்து கொண்டே இருந்தது. அதை பார்த்து எல்லாம் அந்த அம்மனின் செயல் என பகதர்கள் கூறிக்கொண்டிருந்த பொழுது, பக்தர்களில் ஒருவருக்கு சாமி வந்தது, அவர், ‘நான் தான் நாக்தேவதை, இங்கு தண்ணீராக உருமாறி வந்துள்ளேன்’ என கூறியுள்ளார். இதையடுத்து அங்கு பக்தர்கள் கூட்டம் குவிந்தது. அம்மன் சிலையிலிருந்து கசிந்த தண்ணீரை பிடித்து, சிறப்பு வழிபாடு செய்தனர்.

கொலை குற்றச்சாட்டு உறுதியானதா..? தலைதெறிக்க ஓடிய வீரவன்ச

தேசிய சுதந்திர முன்னணி இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கலந்துக் கொள்வதாக, அனைத்து ஊடக நிறுவனங்களுக்கு அறிவிப்பு விடுத்து, தொலைநகல் தகவல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

தொலைநகல் தகவலின் காரணமாக அனைத்து ஊடகங்களின் ஊடகவியலாளர்களும் அந்த இடத்திற்கு சென்றுள்ள போதிலும் விமல் வீரவன்ச அங்கிருந்து சென்றுள்ளார்.

ஊடக சந்திப்பை புறக்கணித்த வீரவன்ச, வீரகுமார திஸாநாயக்கவை ஊடக சந்திப்பை நடத்துமாறு கூறிவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இன்றைய தினம் ஊடக நிறுவனங்கள் அவரது வீட்டில் இடம்பெற்ற மர்மமான மரணம் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள தயாராக இருந்தனர்.

எனினும் இதனை அறிந்துக் கொண்ட விமல் வீரவன்ச ஊடகவியலாளர் சந்திப்பை புறக்கணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டை கவிழ்க்கும் கருத்துக்களை வெளியிட்டு வந்த விமல் இந்த நாட்களில் சற்று அமைதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் விமல் வீரவன்ச வீட்டில் 24 வயது இளைஞன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணத்துடன் வீரவன்ச குடும்பத்திற்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த மரணம் இயற்கையானது அல்லவெனவும், திட்டமிட்ட கொலை எனவும் பிரேதபரிசோதனை அறிக்கைகள் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் கேள்விக்காக காத்திருக்கும் சங்ககாரா! அது எப்படி தெரியுமா?

இலங்கை முன்னாள் வீரர் சங்ககாரா தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விக்களுக்கு பதில் அளிக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் இடது கை மட்டையாளர் குமார் சங்ககாரா. இவருக்கென்றே இலங்கையில் மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.

பிரபல தனியார் இணையதளமான ISLAND CRICKET என்ற இணையதளம் சங்ககாராவின் ரசிகர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

அதாவது குறித்த இணையத்தில் ரசிகர்கள் அனைவரும் நவம்பர் 4 ஆம் திகதிக்குள் தாங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டு விட வேண்டும் என்றும், அதில் உள்ள சிறந்த 10 கேள்விகளுக்கு சங்ககாரா பதில் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.an0

வடக்கில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால் வடக்கிலுள்ள ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் வெளியேற்றப்படவேண்டும்!

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால் வடக்கில் நிலைகொண்டுள்ள ஒன்றரை இலட்சம் இராணுவத்தினரும் வெளியேற்றப்படவேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவிடம் எடுத்துரைத்துள்ளர்.

சிறீலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி வரிச்சலுகை வழங்குவது தொடர்பாக ஆராய கொழும்பு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினர் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) வடக்கு மாகாண முதலமைச்சரை கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினர்.

இச்சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்,

இந்தச் சந்திப்பு தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் கூறுகையில், இலங்கையில் தற்போதிருக்கும் நல்லிணக்கம் தொடர்பாகவும் ஆண், பெண் சமநிலை பற்றியும் பெண்களுக்கான வலுவூட்டல் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

நல்லிணக்கத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதானால், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த அரசாங்கம் முன்வர வேண்டும்.

போர் முடிந்து 7 வருடங்களின் பின்னரும் வடக்கில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினரை நிலைகொள்ளவைத்திருப்பது நல்லிணக்கத்திற்குத் தடையாகவே இருக்கும்.

வடக்கில் பொதுமக்களது 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணி, நிலங்களை படையினர் தம்வசப்படுத்தியுள்ளனர். அவற்றை இதுவரை காணிச் சொந்தக்காரர்களிடம் படையினர் திருப்பிக் கொடுக்கவில்லை.

இது குறித்த விரிவான புள்ளிவிபரம் எங்கள் வசமுள்ளது. காணி உரிமையாளர்களுக்கு இதுவரை எந்த விதமான நஷ்டஈடும் வழங்கப்படவில்லை.

அந்தக் காணிகளை அவர்கள் மீளத்தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றபோதிலும், படையினர் அவர்களது காணிகளில் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு அதன் வருமானத்தைத் தாங்களே பெற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால், வளமிக்க இந்தக் காணிகளைப் படையினரிடமிருந்து மீளப் பெற முடியாது, காணியின் சொந்தக்காரர்கள் அகதி முகாம்களில் உண்ண உணவின்றியும் வாழ்வாதாரம் எதுவுமற்ற நிலையிலும் மிக நீண்ட காலமாக வாழ்கின்றார்கள்.

விவசாயம் செய்தவர்கள் இன்று உணவுக்காக மற்றவர்களை அண்டிப்பிழைக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையை இராணுவம் ஏற்படுத்தியுள்ளதுடன், அரசாங்கமும் அது குறித்து தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருவதால் அந்த மக்கள் பட்டினியை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மீன்பிடித் தொழிலை செய்வோர் கடலுக்கு சென்று தமது தொழிலை செய்யமுடியாதுள்ளது. வடக்கு கடல்களை தெற்கிலிருந்து வரும் சிங்கள மீனவர்கள் இராணுவத்தின் பாதுகாப்புடன் ஆக்கிரமிக்கின்றனர்.

தங்கள் உரிமையைக் கேட்க முனையும் வடக்கு மீனவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இந்தப் பகுதிகளில் தமிழ் மீனவர்கள் கடற்தொழில் செய்ய முனைந்தால் அது சட்டவிரோதமானதென கூறி அவர்களை படையினர் கைது செய்கின்றனர்.

இவ்வாறான செயல்கள் மூலம் தமிழர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர். எனவே இராணுவப் பிரசன்னமானது வடக்கில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன் நல்லிணக்கத்திற்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கின்றது.

இதைவிட வடக்கில் இராணுவத்தினர் பல்வேறு பகுதிகளிலும் தாங்களே ஆரம்பப் பாடசாலைகளை நடத்தி வருகின்றனர். அங்கு தமிழ் யுவதிகளுக்கு அதிகளவில் சம்பளம் கொடுத்து அவர்களைத் தமது நிர்வாகத்தில் வைத்துள்ளார்கள்.

வடக்கில் ஆரம்பப் பாடசாலைகளை நடத்துவதற்கு இராணுவத்தினருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. ஆனால் அவர்கள் தான்தோன்றித்தனமாகவும் தங்களது நன்மைக்காகவும் இவற்றை நடத்துகின்றனர்.

சிவில் பாதுகாப்புப் பிரிவின் கீழ் இவை நடத்தப்படுவதால் பொதுமக்கள் எதனையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இது வடக்கில் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 344 ஆரம்பப் பாடசாலைகளில் 588 பெண்கள் ஆசிரியர்களாகக் கடமையாற்றுகிறார்கள்.

உண்மையில் இந்தப் பாடசாலைகள் வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கு அனுமதி வழங்காது படையினர் தாங்களே அவற்றை நடத்துகின்றனர்.

மொத்தமாக இந்த ஆரம்பப் பாடசாலைகளில் 689 யுவதிகள் ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்றார்கள். எனவே வட மாகாண சபையின் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு சமனாக இராணுவத்தினரும் ஆசிரியர்களை நியமித்துள்ளனர்.

இந்த ஆசிரியைகளுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் உள்நோக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இந்தச் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆனால் அவை தொடர்கின்றன.

இதேநேரம், அரச திணைக்களங்களிலிருந்து பொலிஸாருடன் பெண்கள் சம்பந்தமான விடயங்களில் தொடர்புகளை மேற்கொள்ள சில பெண் அலுவலர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றுமாறு கோரியிருந்தார்.

ஆனால், நான் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். எமது பெண் அலுவலர்கள் பொலிஸ் நிலையங்களில் வேலை செய்ய தயார் இல்லை என்பதனை சந்திரிகா அம்மையாருக்கு தெரிவித்தேன்.

பெண்களின் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதானால் வேலையற்ற பட்டதாரிகளான எமது யுவதிகளை அரச காரியாலயங்களில் நியமித்து அவர்கள் ஊடாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகளை அனுப்ப முடியும் என அறிவுரை வழங்கிறேன்.

அது சம்பந்தமாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இது போல் பல்வேறு விடயங்களை ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

திருமணநாள் பரிசு கேட்ட மனைவி: விவாகரத்து கொடுத்த பிரபல கிரிக்கட் வீரர்

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான்கானிடம் திருமண பரிசு கேட்டதற்கு அவர் விவாகரத்து கொடுத்துவிட்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இம்ரான்கானின் இரண்டாவது மனைவியின் பெயர் ரெஹாம். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருந்த சூழ்நிலையில் திடீரென இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

இது குறித்து அவரது மனைவி தற்போது கூறுகையில், கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி தங்களுடைய திருமண நாள் அதன் காரணமாக நான் அவரிடம் திருமண பரிசுகேட்டதாகவும் ஆனால் அவரோ திருமண பரிசுக்கு பதிலாக விவாகரத்து கொடுத்துச் சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார்.

மேலும் இம்ரான்கான் அரசியலில் ஈடுபடுவதை ரெஹாம் விரும்பவில்லை. இதனால் கடந்த ஆண்டு திருமணநாளுக்கு முதல்நாள் அதாவது அக்டோபர் 30 ஆம் திகதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

புற்று நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுதும் சிகிச்சை இலவசம்

நாட்டில் அனைத்து புற்று நோயாளிகளுக்கும் வாழ்நாள் முழுதும் இலவச மருத்துவ சேவையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

தெஹியோவிட்ட சுகாதார அலுவலகத்திற்கு புதிதாக 14 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடமொன்றை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வித அச்சுறுத்தலும் இன்றி எதிர்காலத்தில் சுயாதீன சுகாதார சேவையினை கொண்டு செல்லகூடிய தன்மை நல்லாட்சியின் மூலம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் லொறி மோதி இழுத்துச் செல்லப்பட்ட இளவரசர் பரிதாப மரணம்

பிரித்தானியாவில் லொறி மோதி இழுத்துச் செல்லப்பட்ட இத்தாலிய இளவரசர் பரிதாபமக இயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலிய இளவரசர் பிலிப்பினொ கார்சினி என்பவர்தான் குறித்த வாகன விபத்தில் பரிதாபமாக கொல்லப்பட்டவர். இவர் லணடனில் உள்ள Regent’s பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.

சம்பவத்தின்போது பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் சிறப்பு விரிவுரையில் கலந்து கொள்ளும் பொருட்டு தனது மிதிவண்டியில் வந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக Knightbridge பகுதியில் வைத்து லொறியுடன் மோதியதில், குறித்த லொறியின் சக்கரத்தில் சிக்கி அங்கிருந்து 90 அடி தூரம் வரையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இதில் கடுமையான காயம்பட்டு இளவரசர் கார்சினி சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

21 வயதான இளவரசர் பிலிப்பினொ கார்சினி இத்தாலியில் Florentine உயர்குடியை சேர்ந்தவர். தகவலறிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் பூக்களை குறித்த பகுதியில் குவித்து வருகின்றனர்.

சம்பவம் நடந்த குறித்த பகுதியில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 10 விபத்துகள் நடந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனைடையே விபத்துக்கு காரணமான 42 வயது லொறி ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே ஜிஎஸ்பி வரிச்சலுகை!

மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே, சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு தலைமை தாங்கிய ஜீன் லம்பெர்ட் இங்கு கருத்து வெளியிடுகையில்,

‘சிறிலங்காவில் தேர்தல்களின் பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சிவில் அமைப்புக்களும் அரசியல் தரப்புக்களும் கூறுகின்றன. எனினும், உண்மையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மக்கள் உணரக்கூடியதாக இருக்கவேண்டும்.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு 27 அனைத்துலக பிரகடனங்களை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

இவற்றில் 19 பிரகடனங்கள் மனித உரிமைகள் சம்பந்தப்பட்டவை. 6 பிரகடனங்கள் தொழிலாளர் விவகாரங்களுடனும், இரண்டு பிரகடனங்கள், சுற்றாடல் விவகாரங்களுடனும் தொடர்புடையவை.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு அனைத்துலக தரத்திலான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளை சிறிலங்கா பூர்த்தி செய்ய வேண்டும்.

ஜிஎஸ்பி சலுகை குறித்து தொடர்சியான பரந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் முன்னேற்றம் காணப்படுகிறது.

இருந்தபோதும் சிறிலங்காவின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிவித்த பின்னரே அது ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு விடப்படும்.

எமது பயணத்தின் போது பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களையும், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினோம்.

சிறிலங்காவில் புலப்படக்கூடிய மாற்றங்கள் தென்படுகின்ற போதும் இன்னும் பல விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கிறது.

வடமாகாண முதலமைச்சருடனான சந்திப்பில் வடக்கில் இராணுவ மயத்தை குறைத்தல், காணிகளை விடுவித்தல், சிவில் செயற்பாடுகளில் காவல்துறையினரின் தலையீடுகளைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.

காணாமல்போனவர்கள் தொடர்பான பணியகம் அமைத்திருக்கும் விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நல்லிணக்க செயற்பாடுகள் சரியான பாதையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது.” என்று தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்,ருங் லாய் மார்கே,

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்கு சிறிலங்கா அரசாங்கம் விண்ணப்பித்திருக்கும் நிலையில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகிறது.

விண்ணப்பித்து 8 தொடக்கம் 10 மாதங்கள் கழித்தே முடிவு எடுக்கப்படும். கடந்த ஜூலையில் சிறிலங்கா இதற்கு விண்ணப்பித்தது.

எனவே, அடுத்த ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி இந்தச் சலுகையை வழங்குவதா-இல்லையா என ஐரோப்பிய ஆணைக்குழு தீர்மானிக்கும் என தெரிவித்தார்.

என்னைத் திட்டுவோர் எனது படத்தைப் பயன்படுத்தியே நாடாளுமன்றம் சென்றார்கள் – மஹிந்த

இன்று என்னைத் திட்டுவோர் எனது படத்தைப் பயன்படுத்தியே நாடாளுமன்றம் சென்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னைப் பற்றி குறை சொல்லும் நபர்கள் கடந்தகாலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது எனது 18 அடி கட்அவுட்டை பயன்படுத்தியிருந்தார்கள்.

எனது பெயரையும், படத்தையும் பயன்படுத்தியே அவர்கள் சுதந்திரக் கட்சியில் பதவிகளைப் பெற்றுக்கொண்டார்கள். இன்று அவர்களுக்கு என்னை நினைவில்லை.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நான் டீல் போடவில்லை. அவர்களே போட்டுள்ளார்கள். உண்மையான நிலைமைகளை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

கள்வன் கள்வன் என என்னை குற்றம் சுமத்துவோர் இன்று ரணிலின் மடியில் இருக்கின்றார்கள். இந்த உண்மையான நிலைமை கடவுளுக்கு தெரியும்.

சேறு பூசுதல் அவமரியாதை செய்தல் எந்த நாளும் செய்ய முடியாது. என்ன நடக்கின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றைய ராசி பலன் 02-11-2016 | Raasi Palan

 

  • மேஷம்

    மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வெளுத்த தெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்து ழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். போராட்டமான நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங் குவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். மனைவி வழி உறவினர்கள் உறு துணையாக இருப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட் டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • கடகம்

    கடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலை யையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறி வீர்கள். பிரார்த்த னை களை குடும்பத்தினருடன் சென்று நிறை வேற்றுவீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: எதிர்பார்த் தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக் கும். உத்யோகத்தில் மறுக்கப் பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங் களால் மற்றவர்கள் ஆதாய மடைவார்கள். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார் க்க வேண்டி வரும். உற வினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

  • தனுசு

    தனுசு: மறைமுக விமர் சனங்களும், தாழ்வு மனப் பான்மையும் வந்துச் செல்லும். சகோதர வகை யில் பிணக்குகள் வரும். லேசாக தலை வலிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

  • மகரம்

    மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற் றுவீர்கள். நெருங்கியவர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டப் படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர் களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • மீனம்

    மீனம்: கணவன்-மனைவி க்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியா பாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

 

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்

நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.
2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.
3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.
4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.
5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.
6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.
7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.
8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.
9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.
10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.
12. சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.

ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள்!

தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமானது என்று நினைத்து முயற்சியைக் கைவிடாதீர்கள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கொழுப்புச் செல்களைக் கரைக்க, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம். அதற்கு உதவுவது ஒருசில பானங்கள் தான்.

அந்த பானங்கள் என்னவென்று தெரிந்து, அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர, உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் பருமனை உண்டாக்கும் டாக்ஸின்களும் வெளியேறும்.

மேலும் வெறும் வயிற்றில் அந்த பானங்களைக் குடிப்பதால், எளிதில் அந்த பானங்களில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, கொழுப்புச் செல்களைக் குறைக்கும் பணி வேகமாக்கப்படும்.

சரி, இப்போது தொப்பையை ஒரே மாதத்தில் கரைக்க உதவும் அந்த பானங்கள் என்னவென்று பார்ப்போம். முக்கியமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள அந்த பானங்கள் எந்த ஒரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது என்பதால் தைரியமாக நீங்கள் பின்பற்றலாம்.

மிளகு தண்ணீர்

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முக்கியமாக இது குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் மிளகில் உள்ள கேப்சைசின் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புச் செல்களைக் கரைக்கும். மேலும் இந்த பானம் நுரையீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் உதவும்.

இஞ்சி தண்ணீர்

இஞ்சி தண்ணீர் உடலினுள் உள்ள எடையை அதிகரிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, பகல் வேளையில் கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதற்கு இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் சிறிது இஞ்சியை துருவிப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

மஞ்சள் தண்ணீர்

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் டாக்ஸின்கள் வெளியேறி, உடலினுள் அழற்சியினால் ஏற்பட்ட வீக்கம் குறையும். மேலும் மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் உள்ள கிருமிகளை அழித்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும்.

எலுமிச்சை தண்ணீர்

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வர, அதில் உள்ள அமிலங்கள் மற்றும் இதர சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்கள் கரைய வழிவகுக்கும். முக்கியமாக இந்த ஜூஸ் குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும்.

ஆப்பிள் சீடர்

வினிகர் காலை உணவு உண்பதற்கு முன், ஒரு டம்ளர் நீரில் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, குடித்து வந்தால், கொழுப்புக்கள் கரைத்து உடல் எடை குறைவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் இருக்கலாம். மேலும் இந்த பானம் செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யும்.

குளோரெல்லா தண்ணீர்

இந்த பானம் உடலில் உள்ள நச்சுமிக்க மெர்குரிகளை வெளியேற்றி, உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பித்து, உடல் பருமன் குறைய உதவும். அதற்கு ஒரு டீஸ்பூன் குளோரெல்லா பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது குளோரெல்லா மாத்திரை கிடைத்தால், தினமும் ஒன்றை வெறும் வயிற்றில் போட்டுக் கொள்ளலாம்.

பிரேசிலில் லொறி- பஸ் நேருக்குநேர் மோதி விபத்து! 20 பேர் பலி

பிரேசில் நாட்டின் தென்பகுதியில் உள்ள பரானா மாநிலத்தில் சுமார் 30 பயணிகளுடன் பிரதான நெடுஞ்சாலை வழியாக நேற்று சென்ற ஒரு…….

பிரேசில் நாட்டின் தென்பகுதியில் உள்ள பரானா மாநிலத்தில் சுமார் 30 பயணிகளுடன் பிரதான நெடுஞ்சாலை வழியாக நேற்று சென்ற ஒரு பஸ்சின்மீது எதிர்திசையில் வேகமாக வந்த ஒரு டேங்கர் லொறி பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சிக்கிய பஸ் தீக்கிரையான நிலையில் சம்பவ இடத்திலேயே 19 பேர் பலியாகினர். விபத்தில் காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் மேலும் ஒருபெண் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை இருபதாக உயர்ந்துள்ளது.