கொலை குற்றச்சாட்டு உறுதியானதா..? தலைதெறிக்க ஓடிய வீரவன்ச

தேசிய சுதந்திர முன்னணி இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கலந்துக் கொள்வதாக, அனைத்து ஊடக நிறுவனங்களுக்கு அறிவிப்பு விடுத்து, தொலைநகல் தகவல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

தொலைநகல் தகவலின் காரணமாக அனைத்து ஊடகங்களின் ஊடகவியலாளர்களும் அந்த இடத்திற்கு சென்றுள்ள போதிலும் விமல் வீரவன்ச அங்கிருந்து சென்றுள்ளார்.

ஊடக சந்திப்பை புறக்கணித்த வீரவன்ச, வீரகுமார திஸாநாயக்கவை ஊடக சந்திப்பை நடத்துமாறு கூறிவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இன்றைய தினம் ஊடக நிறுவனங்கள் அவரது வீட்டில் இடம்பெற்ற மர்மமான மரணம் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள தயாராக இருந்தனர்.

எனினும் இதனை அறிந்துக் கொண்ட விமல் வீரவன்ச ஊடகவியலாளர் சந்திப்பை புறக்கணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டை கவிழ்க்கும் கருத்துக்களை வெளியிட்டு வந்த விமல் இந்த நாட்களில் சற்று அமைதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் விமல் வீரவன்ச வீட்டில் 24 வயது இளைஞன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணத்துடன் வீரவன்ச குடும்பத்திற்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த மரணம் இயற்கையானது அல்லவெனவும், திட்டமிட்ட கொலை எனவும் பிரேதபரிசோதனை அறிக்கைகள் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.