பிரித்தானியாவில் லொறி மோதி இழுத்துச் செல்லப்பட்ட இத்தாலிய இளவரசர் பரிதாபமக இயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலிய இளவரசர் பிலிப்பினொ கார்சினி என்பவர்தான் குறித்த வாகன விபத்தில் பரிதாபமாக கொல்லப்பட்டவர். இவர் லணடனில் உள்ள Regent’s பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.
சம்பவத்தின்போது பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் சிறப்பு விரிவுரையில் கலந்து கொள்ளும் பொருட்டு தனது மிதிவண்டியில் வந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக Knightbridge பகுதியில் வைத்து லொறியுடன் மோதியதில், குறித்த லொறியின் சக்கரத்தில் சிக்கி அங்கிருந்து 90 அடி தூரம் வரையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
இதில் கடுமையான காயம்பட்டு இளவரசர் கார்சினி சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
21 வயதான இளவரசர் பிலிப்பினொ கார்சினி இத்தாலியில் Florentine உயர்குடியை சேர்ந்தவர். தகவலறிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் பூக்களை குறித்த பகுதியில் குவித்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த குறித்த பகுதியில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 10 விபத்துகள் நடந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனைடையே விபத்துக்கு காரணமான 42 வயது லொறி ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.