ராகுகாலத்தில் ஒரு செயலைச் செய்ய நேர்ந்தால் அதற்கு பரிகாரம் உண்டா?

தவிர்க்க முடியாத பட்சத்தில் ராகுகாலத்தில் ஏதேனும் ஒரு செயலைச் செய்ய நேர்ந்தால் அதற்கு பரிகாரம் உண்டா? என்பதற்கான பதிலை கீழே பார்க்கலாம்.

ராகுகாலத்தில் ஒரு செயலைச் செய்ய நேர்ந்தால் அதற்கு பரிகாரம் உண்டா?
அன்றாடம் செய்து வரும் பணிகளுக்கு ராகுகாலம், எமகண்டம் பார்க்கத் தேவையில்லை. புதிதாக ஒரு முயற்சியில் இறங்கும்போது நல்லநேரம் பார்த்துச் செய்வது நல்லது. அப்படியும் தவிர்க்க முடியாத பட்சத்தில், ராகுகாலத்தில் ஒரு செயலைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும்போது விஷ்ணுதுர்க்கையை மனதிற்குள் பிரார்த்தனை செய்துகொண்டு காரியத்தைத் தொடங்கலாம்.

அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு சுமங்கலிப் பெண்ணின் கையால் ஒரு குவளை சுத்தமான தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு செயலில் இறங்கினால் எடுத்த பணி வெற்றிகரமாக நடந்தேறும். செயலில் வெற்றி கண்டதும் அருகில் உள்ள ஆலயத்தில் துர்க்கைக்கு விளக்கேற்ற வேண்டியது அவசியம்.