இது பெண்களுக்கு மட்டும்…

மாதவிடாய் நாட்கள் பெண்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தும் ஒன்றாகும். இந்த நேரத்தில் சில பெண்களுக்கு மன அழுத்தம், உடற்சோர்வு, வயிற்று வலி ஏற்படும். இவை அனைத்தும் உடல் அளவில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் மாதவிடாய் நேரத்தில் துர்நாற்றம் வீசுவதால் பெண்கள் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.

மாதவிடாய் காலத்தில் துர்நாற்றம் வீசுவதற்கான காரணம் இதோ, இந்த நேரத்தில் பெண்களின் PH அளவு அதிகரிப்பதால் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து துர்நாற்றம் வீசச் செய்கிறது.

மேலும், கருப்பையின் புறப்பகுதிகளில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளின் தொற்றுக்கள் இருப்பதால், வெளியேறும் ரத்தத்தில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

மாதவிடாய் காலத்தில் பெண்ணுறுப்பு ஈரப்பதமாக இருப்பதால், பூஞ்சை தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தம் சுகாதார பட்டையின் காரணமாக, காற்று உட்புக முடியாமல் தடுக்கப்படுகிறது. இதுவும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.