வயிற்றில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 1.36 கிலோ போதை மருந்து: பொலிசில் சிக்கிய பரிதாபம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1.36 கிலோ போதை மருந்தை வயிற்றில் மறைத்து வைத்து கடத்த முயற்சி செய்த பாகிஸ்தான் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா என்ற பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக சிலர் போதைமருந்துகள் பயன்படுத்துவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் காரணமாக குறித்த இடத்தில் பொலிசார் நடத்திய தீவிர வேட்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞரின் அறையில் 1 கிலோ எடையுள்ள போதைமருந்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போது அவர் தன்னுடைய வயிற்றில் போதை மருந்துகளை மறைத்து வைத்துள்ள சம்பவம் பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் பொலிசார் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . அப்போது அவருக்கு அளித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் 5 போதை மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் வெளியில் எடுத்துள்ளனர்.

இதனால் மீதம் எவ்வளவு உள்ளது என்பதைப் பார்ப்பதற்காக மருத்துவர்கள் வயிற்றுப்பகுதியை பரிசோதனை செய்து பார்த்ததில் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம் அவருடைய வயிற்றில் இன்னும் 98 போதைமருந்துகள் உள்ளதாக மருத்துவர்கள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.

அதன் மொத்த எடை 1.36kg என்றும் இதன் மதிப்பு Dh500,000 (இலங்கை மதிப்பு (20,15,86,13 கோடி) வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இது போன்று போதை மருந்துகளை வயிற்றுப்பகுதியில் மறைத்துவைத்து கடத்த முயற்சி செய்வது தவறு என்றும், இது ஒரு சில நேரங்களில் உயிரையும் பறித்துவிடும் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு போதை மருந்து கொடுத்து கொடுமை செய்த பெற்றோர்

அமெரிக்காவில் மூன்று குழந்தைகளுக்கு போதை ஊசி செலுத்தி தூங்கவைத்த பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தைச் சேர்ந்தவர் Ashlee Hutt(24) இவரது கணவர் Leroy McIver (25). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. அதில் பெண்குழந்தைகள் இருவருக்கு 2 வயது மற்றும் 4 வயதும், ஆண் குழந்தைக்கு 6 வயதும் ஆகியுள்ளது.

இந்நிலையில் குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளுக்கு போதை மருந்து ஊசி போட்டு தூங்க வைப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திய போது அவர்கள் குழந்தைகளுக்கு போதை ஊசி செலுத்தியுள்ளது உறுதியானது.

இது குறித்து குழந்தைகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு 6 வயது குழந்தை அளித்த பதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்ததுள்ளது.

அக்குழந்தை கூறுகையில், இதை எங்கள் அம்மா, அப்பா இருவரும் தான் உடலில் செலுத்துவார்கள் என்றும், இது போட்டுக் கொண்டல் உடலுக்கு நல்லது என்றும். இது ஒரு வகை சத்து நிறைந்த ஊசி என கூறி செலுத்தியுள்ளனர்.

மேலும் நான்கு வயது குழந்தை கூறுகையில், ஒரு வெள்ளை நிற பவுடரை எடுத்துக் கொள்வார்கள் என்றும் அதை தண்ணீரில் கலக்கி விட்டு பின்னர் அதை தன்னுடைய உடம்பில் செலுத்துவார்கள் என்றும் அதன் பின்னர் தானாக உறங்க சென்று விடுவோம் என கூறியுள்ளார்.

இதில் நடத்திய விசாரணையில் இரு குழந்தைகளுக்கும் போதை மருந்து செலுத்தியது உறுதியாகியுள்ள நிலையில், 2 வயது குழந்தைக்கு மட்டும் போதை ஊசி செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும் பொலிசார் அக்குழந்தையின் முடியினை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை என்றும், தீவிர விசாரணைக்கு பின்னரே அது தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: மூடிஸ் கணிப்பில் யாருக்கு வாய்ப்பு?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 கோடியே 80 லட்சம் பேர் முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஹிலாரி வெல்வார் என ‘மூடிஸ்’ கணித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வருகிற செவ்வாய்க்கிழமை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்காவில் 18 வயதானவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அங்கு 21 கோடியே 89 லட்சத்து 59 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள். எனினும் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்குப்பதிவு நாள் வரை காத்திருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. தேர்தலுக்கு முன்பாகவே வாக்களிக்கும் சிறப்பு வசதி அங்கு செய்து தரப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் இதுவரை 2 கோடியே 80 லட்சம் பேர் முன்கூட்டியே ஓட்டு போட்டு விட்டனர் என்ற தகவல் வெளியானது. முக்கிய மாகாணமான புளோரிடாவில் மட்டுமே 40 லட்சம் பேர் ஓட்டு போட்டு விட்டனர்.

வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முக்கிய மாகாணங்களில் மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் முதல் பாதிப்பேர் வரை தங்கள் ஓட்டை ஏற்கனவே செலுத்தி விடுவர் என தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் 12 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ள நிலையில், இந்த தேர்தலில் இதுவரை 2 கோடியே 80 லட்சம் பேர் முன்கூட்டியே ஓட்டு போட்டிருப்பது, இந்த தேர்தலில் வாக்காளர்களிடையே முன்கூட்டியே ஓட்டு போடுவதில் ஆர்வம் அதிகரித்து இருப்பதை காட்டுகிறது.

சான்போர்டு நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய ஹிலாரி கிளிண்டன், ‘‘முன்கூட்டியே ஓட்டு போடுவது வசதியானது’’ என கூறினார். அவர் எப்போதும் முன்கூட்டியே ஓட்டு போடுவதற்கு ஆதரவு தெரிவித்து வருபவர் ஆவார்.

இவர் முன்கூட்டியே ஓட்டு போடுவதற்கு மக்களை தயார் செய்து அனுப்புவதற்கு என்று ஒரு மாபெரும் குழுவை வைத்துள்ளார்.

இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற வர்த்தக, நிதி சேவை நிறுவனமான மூடிஸ் கார்ப்பரேஷனின் அங்கமான ‘மூடிஸ் அனாலிடிக்ஸ்’ கணித்துள்ளது.

இந்த தேர்தலில் எலெக்டோரல் கல்லூரி ஓட்டுகளைப் பொறுத்தமட்டில் ஹிலாரிக்கு 332 ஓட்டுகளும், டிரம்புக்கு 206 ஓட்டுகளும் கிடைக்கும் என இந்த அமைப்பு கணித்திருக்கிறது.

இதேபோன்ற ராயிட்டர்ஸ், இப்சோஸ் கருத்துக்கணிப்பும் ஹிலாரி குறைந்தபட்சம் 278 எலெக்டோரல் கல்லூரி ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெறுவார் என கணித்துள்ளது.

காதலியை ஏமாற்றிய காதலன்: காதலி எடுத்த துணீகர முடிவு!

காதலியை ஏமாற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சி செய்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர் மனீஷ். இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சூளைமேட்டில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்த கேரளாவைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் மனீசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கேரளாவில் உள்ள பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்பதால் நெருக்கமாக பழகியுள்ளனர். இது நாளைடைவில் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது.

காதலனை நம்பிய காதலி அவரின் பேச்சைக் கேட்டு அப்பகுதியின் அருகே உள்ள வாடகை வீட்டில் இருவரும் கணவன், மனைவி என்று பொய் கூறி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இருவரும் வேலைக்கு சென்று வந்த கால கட்டத்தில், சில தினங்களாகவே மனீஷ் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். காதலி தொலைபேசியில் முயன்றும் பேசவில்லை, அதன் பின் நண்பர்கள் உதவியுடன் அவரை தொடர்பு கொண்ட போது அவர் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த காதலி விசாரித்து பார்த்த போது மனீசுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பது தெரியவந்துள்ளது.

ஏமாற்றமடைந்த அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பேஸ்புக் பயன்படுத்தினால் ஆயுள் அதிகரிக்கும் ஆய்வில் தகவல்..!

பேஸ்புக் பக்கத்தை அதிகம் பயன்படுத்துவோரின் வாழ்நாள் அதிகரிப்பதாக அமெரிக்க ஆய்வு ஒன்று ஆச்சர்யமான தகவலைத் தெரிவித்துள்ளது.

செல்போனில் இண்டர்நெட் வசதி கிடைத்த பின்னர், பெரும்பாலானவர்கள் எப்போது பார்த்தாலும் பேஸ்புக், வாட்ஸ்

அப் என சமூகவலைதளங்களில் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் மிகையில்லை.

பக்கத்து வீட்டுக்காரர்களைக் கூட பலர் பேஸ்புக்கில் மட்டுமே பிரண்டாக வைத்துள்ளனர். பல்வேறு நல்ல காரியங்களுக்கு இது போன்ற சமூகவலைதளங்கள் பயன்பட்டாலும், எந்நேரமும் இது போன்று இணையத்திலேயே மூழ்கி இருப்பது உடல் மற்றும் மன நலத்திற்கு நல்லதில்லை என்ற கருத்தும் உள்ளது.

அதோடு, அக்கம்பக்கத்தாரிடம் பழகும் குணத்தையும் இது போன்ற சமூகவலைதளப் பக்கங்கள் குறைத்து விடுகின்றன. இயந்திரங்களோடு பேசும் குணத்தை இவை வளர்த்து விடுகின்றன என்ற பரவலான குற்றச்சாட்டும் உள்ளது.

ஆனால், கலிபோர்னியாவில் உள்ள சான்டீயெகோ பல்கலைக்கழக ஆய்வு வேறு மாதிரியான முடிவைத் தந்துள்ளது. அதாவது பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் ஆயுள் அதிகரிக்கிறது என்கிறது இந்த ஆய்வு. பேஸ்புக் பயன்பாட்டுக்கும், மனித ஆயுளுக்கும் உள்ள தொடர்பு குறித்த இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதாவது கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் மற்றும் அவர்களைக் குறித்த அந்த மாகாண பொது சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதிலும் குறிப்பாக கடந்த 1945ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டுமே இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

இதேபோல், இவர்கள் கடந்த 6 மாதங்களாக பேஸ்புக்கில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் பேஸ்புக்கை அறவே பயன் படுத்தாதவர்களை விட, அதை பயன்படுத்துபவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

மேலும், பேஸ்புக் பயன்படுத்துபவர்களைவிட, அதைப் பயன்படுத்தாதவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகம் என்கிறது இந்த ஆய்வு.

அதிலும் குறிப்பாக பேஸ்புக்கில் அதிக நண்பர்களைக் கொண்டிருப்பவர்கள், அதிகம் புகைப்படங்கள், தகவல்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் போன்றோர் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறார்களாம்.

ஏற்கனவே சமூக தொடர்புகளை அதிகளவில் கொண்டிருப்பவர்களின் ஆயுள் அதிகம் என முந்தைய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதையே தற்போது இந்த ஆய்வும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அண்மையில் கிளிநொச்சி சந்தைப் பகுதியில் அமைந்திருந்த பழக்கடைகள் முற்றாக எரிந்தும் ஏனைய கடைகள் பகுதியளவிலும் எரிந்து பெருமளவு நட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.

தீக்கிரையான கடைகளுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் கடந்த ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. தீக்கிரையான 122 வர்த்தகர்களுக்கும் 74 மில்லியன் ரூபா வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது. அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் முழுமையான வசதிகளுடன்கூடிய தீயணைப்புப் படைப்பிரிவு ஒன்றை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தீக்கிரையான கடைகள் அனைத்தையும் மீள் புனரமைப்புச் செய்வதற்கு 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு சவுதி அரசருக்கு கடுமையான தண்டனை

*REX FEATURES*

சவுதி அரேபியாவில் தற்போது  ஆளும் அரச குடும்பத்தின் இளவரசருக்கு, சிறையில் கடுமையான சாட்டையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக  சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்கள் முன்பு, கொலை குற்றத்தில் கைது செயப்பட்ட  சவுதி அரசக் குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சவுதியின் ஆளும் ”அல் சவுத்”(Al Saud)  என்னும் அரசக் குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு ஜெட்டாவில் உள்ள சிறையில் நீதிமன்ற உத்தரவுப்படி கடுமையான கசையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக  ”Okaz” சவுதி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இளவரசர் எந்த குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டார் என்பது குறிப்பிடப்படவில்லை. இந்த சம்பவம் சவுதியின் கடுமையான சட்டதிட்டங்களை மீண்டுமொருமுறை உலகுக்கு  நினைவுப்படுத்தியுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலைக்குள் புகுந்து வாள்வெட்டு, வைத்தியசாலையில் பதட்டம்!

பருத்தித்துறை வைத்தியசாலைக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொள்வதற்கு முயற்சித்த குழுவொன்றினால் பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் பதட்டம் நிலவியது.

குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

துன்னாலைப் பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் வாள்வெட்டுக்குள்ளாகிய மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை வெட்டுவதற்காக மூவர் கொண்ட குழுவொன்று வாள்களுடன் வைத்தியசாலைக்குள் புகுந்தபோது அங்கே வைத்திசாலைப் பாதுகாப்புக் காவல்துறையினர் ஒருவர் கடமையில் இருந்துள்ளார். இந்நிலையில் குறித்த நபர்கள் உள்ளே செல்லாது வெளியே காத்திருந்தனர்.

இதனையறித்த வைத்திசாலை நிர்வாகம் நோயாளரின் பாதுகாப்புக் கருதி அனைத்து வாயில்களையும் அடைத்ததுடன், பருத்தித்துறை, நெல்லியடி காவல்துறையினரும் அவிடத்திற்கு வருகை தந்ததையடுத்து நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ராஜபக்சர்களின் ஆதரவிற்காக வந்த ஞானசார தேரர் ஆபத்தில்! அம்பலமானது இரட்டை வேடம்

தற்போது இலங்கையில் அதிகம் பேசப்படுகின்ற விடயம் சிவனொளிபாத மலை பறிபோய்விட்டது புனித இடம் சொகுசு ஹோட்டலாக மாறியுள்ளது என்பதே.

இது தொடர்பில் ஒருவர்மீது ஒருவர் மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் தரப்பும், மதவாதிகளும், பொதுமக்களும் கருத்துகளை முன்வைத்து வரும் வேளையில் ஞானசார தேரரும் நேற்று ஊடகங்களுக்கு கருத்தொன்றை வழங்கியுள்ளார்.

நாட்டில் இடம் பெறுகின்ற பாரிய காணி கொள்ளைக்கு அமைச்சர் பைஸர் முஸ்தப்பாவும் அவரது குடும்பத்தாருமே காரணம் எனவும் அவரை அமைச்சுப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இவர் இந்தக் கருத்துகளை முன்வைத்தது தற்போது சிவனொளிபாத மலை தொடர்பில் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள பசில் ராஜபக்சவை காப்பாற்றுவதற்காகவே என்றே தென்னிலங்கை தரப்பு கூறிவருகின்றது.

ஞானசார தேரர் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டில் முக்கியமானதொரு புள்ளி என்பதால் இவர் பசிலுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருப்பது என்னமோ பசில் மீது உள்ள விமர்சனங்கள் பைஸர் மீது திரும்பிவிடும் என்ற காரணத்திற்காக என்பது வெளிப்படையாக தெரிந்து விட்டது.

ஆனாலும் இதே ஞானசார தேரர் கடந்த காலத்தில் சிவனொளிபாத மலை தொடர்பில் எச்சரிக்கை தோரணையில் பகிரங்கமான கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார்.

‘சிவனொளிபாத மலை முஸ்லிம்கள் கைக்கு செல்வதற்கு காரணம் பசில் ராஜபக்சவே அதனை நாம் வெளிப்படையாக கூறுவோம் அவரே இதற்கு முழுக்காரணம்”

“இவை ராஜபக்சர்களின் பரம்பரையில் வந்த சொத்துகள் அல்ல தேசத்தின் சொத்துகள் பொய்யான நாடகங்களை அரங்கேற்ற கூடாது இவை அனைத்தையும் ராஜபக்சர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்”

 

இவை ஞானசார தேரர் மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக வெளியிட்ட கருத்துகள். ஆனால் தற்போது ஊடகங்களிடம் பசில் ராஜபக்சவின் பெயரை உபயோகிக்கவில்லை.

மக்கள் முன்னிலையில் பசில் ராஜபக்ச மீது பழி சுமத்தியவர் தற்போது பின்வாங்கிவிட்டார். இது அவரது இலாபம் நோக்கான அரசியலின் வெளிப்பாடு என கூறப்படுகின்றது.

இதேவேளை அண்மைக்காலமாக மஹிந்த ராஜபக்சர்களுக்கு ஆதரவு கருத்துகளை வெளியிட்டு வரும் ஞானசார தேரர் கடந்த காலங்களில் அவர்களுக்கு எதிர்ப்பு கருத்துகளை வெளியிட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிவனொளிபாத மலை விவகாரத்தினால் பௌத்தர்களின் ஆதரவை இழந்து வரும் ராஜபக்சர்களுக்கு ஆதரவு தேடும் வகையிலேயே இவர் தற்போது கருத்து வெளியிட்டு வருகின்றார்.

இவை மூலம் அரசியல் இலாபங்களுக்காக ஞானசாரதேரர் இரட்டைவேடக் கருத்துகளை முன்வைத்து வருகின்றார் என்பது தெளிவாகின்றதாக தென்னிலங்கை புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலத்தில் ஊடகங்களுக்கு முன் வராத ஞானசார தேரர் தற்போது முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டு சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவருக்கு இருக்கும் ஓரளவு மக்கள் செல்வாக்கும் இழந்துவிடும் அபாயம் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் நாட்டிற்கு செல்ல விசா வேண்டுமா..??

சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல விரும்பும் ஒருவரின் தாய்நாட்டு குடியுரிமையின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றிய பிறகு விசா வழங்கப்பட்டு வருகிறது.

சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான விசாவை பெறுவதற்கு முன்னர் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.

முதலில், சுவிஸ் நாட்டில் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அளிக்கும் அதிகாரப்பூர்வமான ‘அழைப்பு கடிதம்’(Letter of Invitation) அல்லது ’நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்’(declaration of sponsorship) ஆகிய இரண்டு கடிதங்களில் ஒன்றை உங்கள் தாய்நாட்டில் உள்ள சுவிஸ் தூதரகத்திற்கு கொடுக்க வேண்டும்.

அழைப்பு கடிதம்

சுவிஸில் உள்ள அந்த நிறுவனம்/தனிநபர் உங்களை அதிகாரப்பூர்வமாக அழைப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

மேலும், அந்த அழைப்பு கடிதத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் சுவிஸில் தங்குகிறீர்கள்? என்ன நோக்கத்திற்காக தங்குகிறீர்கள்?

மேலும், எத்தனை முறை சுவிஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறீர்கள்? என்ற தகவல்களை குறிப்பிட வேண்டும்.

அதேபோல், இந்த கடிதத்தில் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரை தொடர்புக்கொள்ளும் முகவரியும் உங்களுடைய முகவரியும் இடம்பெற வேண்டும்.

உதாரணத்திற்கு, குடும்ப பெயர், முதல் பெயர், பிறந்த திகதி, குடியுரிமை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற வேண்டும்.

மேலும், உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரின் கையெழுத்து மற்றும் அதன் திகதியும் இடம்பெற வேண்டும்.

முக்கியமாக, இந்த அழைப்பு கடிதம் சுவிஸ் நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டாவதாக, சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான நிதி வசதிகள் உங்களிடம் இருப்பதை சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் நிரூபிக்க வேண்டும்.

இதனை நீங்கள் வாங்கும் ஊதிய அறிக்கை அல்லது வங்கி இருப்பு அறிக்கை மூலம் அதிகாரிகளிடம் நிரூபிக்கலாம்.

இவ்வாறு இல்லாமல், உங்களுடைய அனைத்து செலவுகளையும் உங்களை சுவிஸ் நாட்டில் எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் ஏற்றுக்கொண்டால், அதனை அழைப்பு கடிதத்தில் குறிப்பிட வேண்டும்.

நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்

சுவிஸ் நாட்டிற்கு செல்ல உங்களிடம் போதுமான நிதி ஆதாரம் இல்லை என சுவிஸ் தூதரக அதிகாரிகள் சந்தேகம் அடைந்தால், அவர்களிடம் நீங்கள் ’நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்’(declaration of sponsorship) அளிக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.

இந்த கடிதமான அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும். அதாவது, உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அங்குள்ள உள்ளூர் அதிகாரி அல்லது மாகாண குடியமர்வு துறை அதிகாரியிடம் கையெழுத்து பெற்றுருக்க வேண்டும்.

இந்த கடிதத்தில் கையெழுத்து போடுவதன் மூலம் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அங்குள்ள குடியமர்வு துறைக்கு 30,000 பிராங்க் வரை செலுத்த நேரிடும்.

காப்பீட்டு ஆவணம்

சில நேரங்களில் உங்களுடைய அல்லது உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரின் காப்பீட்டு ஆவணத்தை சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த காப்பீட்டு கடிதமானது 30,000 பிராங்க் வரையிலான மருத்துவ செலவினங்களை ஏற்றுக்கொள்ளும்.

அதாவது, சுவிஸில் நீங்கள் தங்கியிருக்கும்போது உங்களுக்கு உடல்நலக்குறைவு காரணமாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் அல்லது சுவிஸில் மருத்துவம் பார்க்கவும் மற்றும் விபத்து உள்ளிட்ட பிற சூழ்நிலைகளில் உங்களுடைய செலவினங்களை இந்த காப்பீடு ஏற்றுக்கொள்ளும்.

மேலே கூறிய இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்றினால், விசா பெறுவதற்கான அடுத்த கட்டத்தை அடைய முடியும்.

இன்றைய ராசி பலன் 03-11-2016 | Raasi Palan

 

  • மேஷம்

    மேஷம்:  இரவு 7.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்  கொள்வது நல்லது. தடைகள் நீங்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துபோகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால்  உதவிகள் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். இரவு 7.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவி கேட்டு  வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது  முயற்சியை மேலதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள்  யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு  நனவாகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.  எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.  எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • கன்னி

    கன்னி: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள்  உதவியை நாடுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி  பெறும் நாள்.

  • துலாம்

    துலாம்:  குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கேட்ட  இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சக ஊழியர்கள்  ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: இரவு 7.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக்  கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். எதிர்ப்புகள்  அடங்கும் நாள்.

  • தனுசு

    தனுசு:  குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.  வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இரவு 7.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானித்து  செயல்பட வேண்டிய நாள்.

  • மகரம்

    மகரம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி  பெருவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சிறப்பான  நாள்.

  • கும்பம்

    கும்பம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க  நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக்  கூடும் நாள்.

  • மீனம்

    மீனம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம்  தருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் மரியாதைக்  கூடும். சாதிக்கும் நாள்.

 

உடல் எடை குறைய இரவு நேரத்தில் என்ன சாப்பிடுவது என்று தெரியவில்லையா?

தற்போது உடல் பருமனால் அவஸ்தைப்படும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. அப்படியென்றால், இந்தியாவில் உடல் பருமனால் ஏராளமானோர் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே எடையைக் குறைக்க டயட்டைப் பின்பற்ற வேண்டியது முக்கியமான ஒன்றாக உள்ளது. இதுவரை நாம் எடையைக் குறைக்க காலையில் என்ன சாப்பிட வேண்டும் மதியம், என்ன சாப்பிட வேண்டும் என்று தான் பார்த்துள்ளோம். ஆனால் இரவு நேரத்தில் என்ன சாப்பிட வேண்டும் என பார்த்ததில்லை. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை இரவில் எந்த மாதிரியான உணவுகளை சேர்க்க வேண்டும் என கீழே கொடுத்துள்ளது.
சாலட்

இரவு உணவை முதலில் சாலட்டில் இருந்து ஆரம்பியுங்கள். இதனால் கலோரிகளை அதிகம் உட்கொள்வதைக் குறைக்கலாம். மேலும் சாலட் நார்ச்சத்துக்கள் வழங்கி, நீண்ட நேரம் வயிற்றை நிறைத்து வைத்திருக்கும். எனவே பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஆன ஒரு பௌல் சாலட் சாப்பிடுங்கள்.

புரோட்டீன்

இரவில் கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு பதிலாக புரோட்டீன் உணவுகளை உட்கொள்ளுங்கள். சமீபத்திய ஆய்வு ஒன்றில், பால் பொருட்களில் உள்ள புரோட்டீன் உடல் எடையைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே சிக்கன், மீன், பீன்ஸ் போன்றவற்றை இரவு நேரத்தில் சாப்பிடுவது, நீண்ட நேரம் பசி எடுக்காமல் பார்த்துக் கொள்ளும். சிக்கன் என்றால் அதை பொரிப்பதற்கு பதிலாக, க்ரில் செய்து சாப்பிடுவது தான் நல்லது.

அஸ்பாகரஸ் சேர்த்த சிக்கன் சூப்

வீட்டிலேயே அஸ்பாரகஸ் சேர்த்து சிக்கன் சூப் செய்தால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைத்து, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முழு தானியங்கள்

கைக்குத்தல் அரிசி, திணை மற்றும் முழு கோதுமை பிரட் போன்றவை முழு தானிய உணவுகளாகும். முழு தானிய உணவுகள் அடிவயிற்றுக் கொழுப்புக்களைக் கரைக்க உதவுவதோடு, இதில் நார்ச்சத்துக்களும், மக்னீசியமும் ஏராளமாக உள்ளது.

இனிப்பு பொருட்களை முற்றிலும் தவிர்க்காதீர்கள்

எடையைக் குறைக்க டயட் என்று வரும் போது இனிப்பு பொருட்களை முற்றிலும் தவிர்ப்போம். ஆனால் ஆராய்ச்சியாளர்களோ, இனிப்புக்களை முற்றிலும் தவிர்த்தால், மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களின் வெளியீட்டை அதிகரிப்பதாக கூறுகின்றனர். மன அழுத்தம் அதிகமானால், அது ஆரோக்கியமான உணவுகளின் மீது நாட்டத்தைக் குறைத்து, ஜங்க் உணவுகளை உட்கொள்ளத் தூண்டும். இதன் காரணமாக உடல் பருமன் மேன்மேலும் அதிகரிக்கும்.

உணவு சாப்பிட்ட பின் செய்யக்கூடாத செயல்கள் இவைகள் தான்!

உண்ணும் உணவுகளால் பலனைப் பெற வேண்டுமானால், உணவு உண்ட பின் செய்யும் பழக்கங்களும் முக்கிய பங்கை வகிக்கிறது.

ஆனால் நம்மில் பலர் உணவு உண்ட பின் செய்யக்கூடாத செயல்களை அறியாமல் செய்து வருகின்றனர். எனவே மதிய உணவு உட்கொண்ட பின் செய்யக்கூடாத செயல்களை பார்க்கலாம்.

பொதுவாக சிகரெட் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிலும் ஒரு சிகரெட் புற்றுநோயை உண்டாக்கும் 60 கார்சினோஜென்களைக் கொண்டிருக்கும்.

இத்தகைய சிகரெட்டை உணவு உட்கொண்டதும் பிடித்தால், அது 10 சிகரெட்டைப் பிடித்ததற்கு சமம். எனவே இப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

உணவு உட்கொண்ட பின் பழங்களை சாப்பிட்டால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படுத்தி, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும். பழங்களை சாப்பிட சிறந்த நேரம் என்றால் அது காலை வேளையில் தான்.

டீயில் உணவில் உள்ள எசன்ஸை உறிஞ்சும் பொருள் உள்ளது. அதுவும் டீயில் உள்ள டானின் என்னும் பொருள், உண்ட உணவில் உள்ள புரோட்டீனை உடல் உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் டீயை ஒருவர் உணவு உட்கொண்டதும் குடித்தால், இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்.

குளிர்ச்சியான நீரை உணவு உட்கொண்ட பின் குடித்தால், உண்ட உணவு செரிமானமாவதில் இடையூறு ஏற்படும். எனவே குளிர்ச்சியான நீரைக் குடிப்பதைத் தவிர்த்து, சூடான நீரைக் குடியுங்கள். இதனால் உணவில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்சப்படும்.

உணவு உண்டதும் தூங்கினால், இரைப்பையில் உற்பத்தியாகும் செரிமான நீர் அப்படியே உணவுக்குழாய் வழியே மேலே எழும்பி, நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்படக்கூடும். எனவே இப்பழக்கத்தையும் கைவிட வேண்டியது அவசியம்.

உணவு உண்டதும் குளித்தால், வயிறு மற்றும் செரிமான மண்டலத்தில் இரத்த ஓட்டம் குறைந்து, அவற்றில் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும்.

உணவு உண்பதற்கு முன் நீரைக் குடித்தால், அது உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சுவதைத் தாமதப்படுத்தும்.

நீங்கள் அடிக்கடி ஆப்பிள் சாப்பிடுகிறீர்களா? இந்த பிரச்சனைகள் உங்களை தீண்டாது!!

ஆப்பிளை எப்படி சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் கிடைக்கும். ஆப்பிள் எல்லா இடங்களிலும் விளைவிக்கப்படுகிறது. புற்று நோயிலிருந்த் பல்வலி வரை பலவித நோய்களிலிருந்து இந்த பழம் காக்கிறது.

ஆப்பிளை தினமும் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக அவசியமிருக்காது என ஆங்கிலத்தில் பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏனென்றால் ஆப்பிளில் அத்தனை சத்துக்கள் உள்ளது. விட்டமின் ஏ, பி, சி, கால்சியம், நார்சத்து, பொட்டாஸியம், பாஸ்பரஸ் என இன்னும் சத்துக்கள் இருக்கின்றன. தினம் அல்லது வாரம் பல முறை சாப்பிடுவதால் உங்களுக்கு உண்டாகும் நன்மைகளை காண்போம்.

சர்க்கரைவியாதிக்கு ஸ்டே ஆர்டர் :

இந்தியாவில் அதிகம் தாக்கும் நோயான சர்க்கரை வியாதி உங்களை நெருங்காது. ஆப்பிளிலுள்ள பாலிஃபீனால் சர்க்கரை அளவை ரத்தத்தில் கட்டுப்பாடோடு வைத்திருக்கும்.

உடல் எடை அதிகரிக்காது :

அதிலுள்ள அதிக நார்சத்து மற்றும் குறைந்த கலோரி உடல் எடையை கட்டுக்கோப்போடு வைத்திருக்கும். அதிக நேரம் பசியை தாக்குபிடிக்க வைக்கும்.

இதய நோய்கள் நெருங்காது :

ஆப்பிளிலுள்ள ஃபைடோ சத்துக்கள் இதய சம்பந்த பாதிப்புகளை உண்டாக்காமல் தடுக்கும். அதோடு அவை ஆப்பிளில் உள்ள பெக்டின் கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கிறது. இதனால் இதய அடைப்பு தடுக்கப்படும்.

எலும்புகள் பலப்படும் :

எலும்புகளில் தேவைப்படும் அதிக கால்சிய சத்துக்களை ஆப்பிள் கொண்டுள்ளது. இதனால் எலும்புகள் உறுதியோடு இருக்கும். மூட்டு வலி, ஆர்த்ரைடிஸ் பிரச்சனைகள் ஏற்படாது.

கண்கள் கூர்மையாகும் :

கண்பார்வை தெளிவாகும். வயதான பின் வரும் கேடராக்ட், பார்வை மங்குதல் ஆகியவை உண்டாகாது.

புற்று நோயை தடுக்கும் :

ஆப்பிளிலுள்ள ஃபைடோ கெமிக்கல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் செல் சிதைவை தடுக்கிறது. அதோடு புற்று நோய் செல்களை பெருக விடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

ஆஸ்துமா பிரச்சனை :

ஆஸ்துமா இருப்பவர்கள் தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் ஆஸ்துமா கட்டுக்குள் இருக்கும். அதிலுள்ள ஃப்ளேவினாய்டு மூச்சு குழாயில் உள்ள நச்சுக்களையும் கிருமிகளை அழிக்கிறது.

எனக்கு நயனுக்கு பிரச்சனை இருக்கு

ஒற்றை தலைவலிக்கான காரணமும் அதற்கான சிறந்த தீர்வுகளும்!

சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்கும்போது அல்லது அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது பலர் இந்த ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆண்களை விட பெண்களே ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்கும்போது அல்லது அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது பலர் இந்த ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள். நரம்புகளில் உண்டாகும் இறுக்கமே தலைவலி வருவதற்கான முக்கிய காரணமாகும்.

வேலை செய்ய வேண்டுமே என நிறைய பேர் தலைவலி வரும்போதெல்லாம் ஒரு மாத்திரை எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. இது பக்க வாதம். இதய நோய்கள் மற்றும் சிறு நீரக பாதிப்பை தந்துவிடும். ஆகவே அதற்கான காரணங்கள் என்னெவென்று அறிந்து அதனை தடுக்க முயலுங்கள்.

தலையில் நெற்றிப்பொட்டில், பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். மன அழுத்தம், மனச் சோர்வு, பதட்டம், அடிக்கடி கோபம், டென்ஷன் என இருப்பது ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.

பல ஆண்டுகளாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டுபிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுதான் தான் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மனதை எப்போது மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டும். பிடித்தவர்களுடன் பேசுவது, வெளியில் சென்று வருவது என இருந்தால் தலைவலி வராமல் தடுக்க முடியும்.

செல்போன்களை பழுது பார்க்க கொடுப்பதற்கு முன்

செல்போனில் ஏதாவது பிரச்சனை என்றால் தடாலடியாய் ஏதாவது ஒரு செல்போன் சர்வீஸ் சென்டருக்குப் போய் பழுது பார்க்கும்படி கொடுத்து விடாதீர்கள். செல்போன்களை சர்வீஸுக்கு கொடுக்கும்முன்பு நீங்கள் அதில் சேமித்து வைத்து இருக்கும் உங்கள் வீட்டு குடும்பப் பெண்களின் போட்டோக்களை எல்லாம் அழித்துவிடுங்கள்.

முக்கியமாக மெமரி கார்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில், முக்கியமான தொடர்பு எண்களை உங்களுடைய கம்யூட்டரில் பதிவு செய்து கொண்டு பின் சர்வீஸுக்கு கொடுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக நன்கு அறிமுகமான தெரிந்த நபர்களிடம் சர்வீஸுக்கு கொடுப்பது நல்லது.

வாழைக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – இயற்கை மருத்துவம்

வாழைக்காயில் ஸ்டார்ச் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. இந்த ஸ்டார்ச் கரையாத நார்ச்சத்தாக செயல் பட்டு, நேரடியாக ஜீரண மண்டலத்தை சென்றடைகிறது. அங்கே உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதன் தொடர்பாக வரும் நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. வாழைக்காயை உடலுக்கு சேர்த்தால் நூறு வயது வரை நோயின்றி வாழலாம்.

உடல் எடை குறைக்க :-
வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதினால், உடல் எடை குறையும். பருமனாய் இருப்பவர்கள் குஷிப்படுங்கள். ஏனெனில் இது குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை அழிக்கிறது. உடல் எறையைக் குறைக்கிறது.

மலச்சிக்கலிலிருந்து விடுபட :-
வாழைக்காய் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் கொண்டுள்ளதால், குடல்களை சுத்தப்படுத்தி,அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.மேலும் மலத்தை இலகுவாக்கி,எளிதில் வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் குறையும்.

அதிகமான பசியைக் கட்டுப்படுத்தும்:-
வயிறு பருமனாக முக்கிய காரணம் அளவின்றி சாப்பிடுவது ஆகும். சிலருக்கு தாங்களே நினைத்தாலும் சாப்பிடும் அளவினைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் பழுக்காத வாழைப்பழத்தினை உட்கொண்டால் சாப்பிட்ட நிறைவைத் தரும். அதனால் அதிகப்படியாக உணவினை உண்ணத் தோன்றாது. உடல் பருமனாவதைக் குறைக்கலாம்.

சர்க்கரை வியாதி வராமல் இருக்க :-
பச்சை வாழப்பழம்அல்லது பழுக்காத பழம் அல்லது வாழைக்காய் ஆகிய மூன்றுமே ரத்த செல்களில் குளுகோஸ் உறிவதை தடுக்கிறது. இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

ஆரோக்கியமான ஜீரண உறுப்புக்களை தரும்:-
வாழைக்காய் ஜீரண உறுப்புகளுக்கு மற்றும், உணவுக்குழாய்களுக்கு போஷாக்கு அளிக்கிறது. குடலில் இருக்கும் ப்ரோபயாடிக் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. இதனால் அசிடிடி வராமல் ,குடல்களையும்,வயிற்றையும் பாதுகாக்கும்.

பெருங்குடலில் வரும் புற்று நோய் வராமல் விரட்டிவிடும் வாழைக்காய்:-
வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும்,நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. மேலும் பெருங்குடல் புற்று நோய் வராமல் கவசமாய் செயல்படுகிறது.

எலும்புகளுக்கு பலம் தருகிறது :-
வழைக்காய் விட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவைகள் எலும்பிற்கு போதிய பலம் தந்து, மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.

உணர்வுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது :-
வாழைக்காய் ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த அமிலம் மூளையில் நடக்கும் ரசாயனங்களை ஒழுங்குபடுத்தும். அவ்வகையில் வாழைக்காய் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உணர்ச்சிகரமான மன நிலை உண்டாவைத் தடுத்து மன அமைதியைப் பெறலாம்.

பாம்பு கனவில் வந்தால் நடக்கும் பலன்கள்

விஸ்வரூபம் எடுக்கும் உண்மை தகவல்கள்…கவுதமியின் சொத்துக்கள் கமல் வசம்…மகளின் எதிர்காலம் என்னவாகும்?

13 ஆண்டுகள் சேர்ந்திருந்த பிறகு இதயம் நொறுங்கும் படியான ஒரு முடிவு என்று சொன்னதும், 2 வருடங்கள் யோசித்து எடுத்த முடிவு, ஒரு தாயாக என் மகளின் எதிர்காலத்தை முன்னிட்டு எடுத்த முடிவு என்றெல்லாம் கவுதமி கூறும்போது…ஸ்ருதி இதற்கு காரணமா? அல்லது கமலுடன் கிசுகிசுக்கப்படும் நடிகைகள் இருவர் காரணமா? என்றால் …இது வேறு என்கிறார்கள்.

கவுதமியின் சொத்துக்கள் கமல் வசம் தான் உள்ளனவாம். அதை மீட்க எடுத்த போராட்டம் இது என்கிறார்கள்.

கமலின் கணக்கு வழக்கு சொத்து போன்றவற்றை கவுதமி பார்க்கவில்லை. கமல் சொத்து கவுதமியிடம் கொடுக்க வாய்ப்பே இல்லயாம்.

ஏனென்றால், கமல் வீட்டில் பார்த்து வைத்த திருமணத்தில் …வாணி கணபதியுடன் 10 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தார். கமலின் சொத்துக்களை , வருமானத்தை அவர் பார்த்து வந்திருந்தால்…கமல், அவரை விட்டு பிரியும்போது,’ என்கிட்ட ஜீவனாம்சம் தரவே ஒன்றும் இல்லை’ என்று சொல்லியிருக்க மாட்டார். ‘என் சொத்துக்களை, வருமானத்தை எடுத்துபோய் விட்டார்’ என்று சொல்லியிருப்பார்.

அடுத்து, கவுதமிக்கு தன் மகளை ஹீரோயினாக ஆக்க ஆசை. அதற்கு தடை போட்டு வருகிறார் கமல் என்று இன்னொரு தரப்பு சொல்லுகிறது.

தமிழகத்தில் போயஸ் கார்டன் கதவை தட்ட சூழல் இப்போது இல்லாததால், மோடி வீடு கதவை தட்டி இருக்கிறார் கவுதமி. அங்கு தரப்பட்ட உத்தரவாதத்துக்கு அப்புறம்…இந்த பிரிவு அறிக்கை.

கமல் இதை சரியாய் ஹாண்டில் பண்ணி இமேஜை காப்பாற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.