கண், காது, மூக்கு இல்லாமல் பிறந்த குழந்தை.! இப்படியும் நடக்குதா??

போர்ச்சுகல் நாட்டில் மருத்துவரின் அலட்சியத்தால் முகமே இல்லாமல் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. போர்ச்சுகலின் செதுபால் நகரைச் சேர்ந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி கண், மூக்கு, வாய் என்று முகத்தில் எந்த உறுப்புகளுமே இல்லாமல், மண்டை ஓட்டின் ஒரு பகுதி முழுக்கவே சரியான வளர்ச்சியில்லாமல் பிறந்திருக்கிறது.

மகப்பேறு மருத்துவரான ஆர்ட்டர் கெர்வெல்ஹோ கருவுற்ற அந்த தாய்க்கு மூன்று முறை வெவ்வெறு காலகட்டங்களில் ஸ்கேன் எடுத்து குழந்தையின் வளர்ச்சியை பரிசோதித்து கொண்டு இருந்துள்ளார்.

மேலும் அந்த பெண், குழந்தையின் வளர்ச்சி சரியான வளர்ச்சியில்லையோ? என்று 6 ஆவது மாதத்தில் சந்தேகத்தையும் கேட்டிருக்கிறார். தாயின் சந்தேகத்தை அலட்சியப்படுத்திய மருத்துவர்., நான் மருத்துவரா? நீங்கள் மருத்துவரா? என்று கேள்வியை முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில்., பெண்ணிற்கு தற்போது பிறந்துள்ள குழந்தைக்கு கண், மூக்கு, வாய் என்று முகத்தில் எந்த உறுப்புகளுமே இல்லாமல், மண்டை ஓட்டின் ஒரு பகுதி முழுக்கவே சரியான வளர்ச்சியில்லாமல் பிறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் இது குறித்து காவல் துறையினர் மற்றும் மருத்துவத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்ததும் விசாரணை மேற்கொண்ட மருத்துவ குழுவினர்., இந்த துயரத்திற்கு காரணமாக இருந்து., அலட்சியமாக செயல்பட்ட மருத்துவருக்கு 6 மாதம் பணியாற்ற தடை விதித்திருக்கிறார்கள். குழந்தையின் பெற்றோர்கள் ஐசியூ வாசலில் செய்வதறியாது திகைத்து கண்ணீருடன் தவமிருக்கிறார்கள் .