உங்களுக்கு வயிறு சரி இல்லையா?

மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு.

ஆனால் இன்றைய அவசர உலகில் பலரும் நேரத்திற்கு சாப்பிடமாலும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதனாலும் பல நோய்களுக்கு உள்ளாகி விடுகின்றோம்.

அதில் நாம் அன்றாடம் சந்திக்கும் ஓர் பிரச்சினைகளுள் ஒன்று தான் வயிறு உப்புசம். இது உண்ணும் உணவு சரியாக செரிமானமாகாமல் இருப்பதால் ஏற்படக்கூடியதாகும்.

நாம் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதால், காரமான உணவுகளை உண்பதால், அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால், வயிறு அல்சர், மன அழுத்தம் போன்றவற்றினால் ஏற்படக்கூடியது.

அந்தவகையில் இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • வயிறு சரியில்லாத நேரத்தில் கரட் ஜூஸ் குடிப்பது நல்ல தீர்வைத் தரும். அதுவும் அது வயிற்றில் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கி, உப்புசத்தை நீக்கிவிடும்.
  • பால் மற்றும் தேன் வயிற்று பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் தரும். அதிலும் இக்கலவை இரைப்பையின் உட்புறச் சுவற்றில் உள்ள படலத்தை பாதுகாத்து, பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
  • எலுமிச்சை ஜூஸ் உடலில் pH அளவை சீராக்கி, வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே உங்களுக்கு வயிற்றில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் விரைவில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • அடிவயிற்றில் ஏற்படும் உப்புசம், பிடிப்புக்கள் போன்றவற்றை சோம்பு குறைக்க அதற்கு ஒரு டீஸ்பூன் சோம்பை ஒரு டம்ளர் சுடுநீரில் போட்டு 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் அந்நீரை வடிகட்டிக் குடித்து வர வயிற்று பிரச்சனைகள் விரைவில் நீங்கும்.
  • சிறு துண்டு இஞ்சியை சாறு எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், வயிற்றுப் பிரச்சனைகள் உடனே விலகும்.
  • தாங்க முடியாத வயிற்று உப்புசம் என்றால், பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அத்துடன் தேன் கலந்து குடிக்க, விரைவில் வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை போன்றவை நீங்கும்.
  • புதினா டீயும் வயிற்று பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கின்றது. ஏனெனில் இதற்கு அதில் உள்ள குளிர்ச்சி தன்மை தான் காரணம். இது செரிமான மண்டலத்தில் உள்ள தசைகள் குளிரச் செய்து, வயிற்று பிரச்சனைகளை விரைவில் குணமாகச் செய்யும்.