விமானத்தில் இளம்பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்..

அமெரிக்காவில் விமான பயணத்தின் போது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன் அருகில் அமர்ந்திருந்த பயணி சிறுவனிடம் நடந்து கொண்ட விதம் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலிருந்து போர்ட்லாண்ட் சர்வதேச விமான நிலையத்துக்கு பயணிகள் விமானம் ஒன்று இரு தினங்களுக்கு முன்னர் கிளம்ப தயாராக இருந்தது.

விமானத்தில் அலெக்சா போஜர்சன் என்ற பெண் தனது மகன் லேண்டன் (7) உடன் ஏறினார்.

அப்போது அவருக்கு ஒரு கவலை ஏற்பட்டது. ஏனெனில் சிறுவன் லேண்டன் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

அவனருகில் வந்து உட்காரும் பயணி, லேண்டன் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து எப்படி எதிர்வினை ஆற்றுவாரோ என அலெக்சா நினைத்தார்.

அப்போது தான் பென் பெட்ரசா என்ற பயணி லேண்டன் அருகில் வந்து உட்கார்ந்தார்.

ஆனால் அலெக்சா நினைத்தது போல பென் இல்லை, அவர் சிறுவன் லேண்டனை பார்த்த போதே அவன் பிரச்சனையை புரிந்து கொண்டார்.

பின்னர் அவனிடம் பல ஜோக்குகளை சொல்லி சிரிக்க வைத்தார். இதை பார்த்த அலெக்சா ஆனந்த கண்ணீர் வடித்தார்.

இதோடு ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலெக்சா நிதி சேகரிக்கிறார் என்பதை அறிந்த பென் அவரிடம் தன் பங்குக்கு நிதியளித்தார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பல்லாயிரக்கணக்கானோரோல் பார்க்கப்பட்டு வைரலானது. இதையடுத்து பென் மிகவும் மனிதநேயமிக்கவர் என பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இதோடு இளம்பெண்கள் பலர் பென் தனியாக வாழ்ந்தால் அவரை மணக்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் இந்த புகழ்ச்சியை எல்லாம் புன்முறுவலோடு கடந்து வரும் பென், ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இன்னும் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.