மாதம்பட்டி ரங்கராஜ், தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நாயகனாக அறிமுகமானவர்.
ஆனால் அதன்பின் சினிமா வாழ்க்கையில் பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இன்னொரு பக்கம் சமையல் கலையில் களமிறங்கியவர் பெரிய வெற்றிக் கண்டார்.
பிரபலங்கள் வீட்டு விசேஷம் என்றாலே மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் என ஆனது. தொழிலில் பெரிய வளர்ச்சி பெற்றவர் விஜய் டிவி பக்கம் வந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை மறுமணம் செய்த தகவல் சில வாரங்களுக்கு முன் திடீரென தகவல் வெளியானது.
இந்த தகவல் வந்த சில நாட்களில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாவில் மாதம்பட்டி ரங்கராஜுடன் ஊர் சுற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளார். செம ரொமான்டிக்காக Liplock போட்டோவை எல்லாம் பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram







