குலுங்கிய அந்தமான்., பதறி ஓட்டம் பிடித்த மக்கள்.!

இந்த உலகம் முழுவதும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. ஆங்காங்கே நிலவும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்., ஏற்பட்ட வெப்பம்., மழை., பனிமழை., வறட்சி என்று பல்வேறு கட்ட பாதிப்புகளால் இயற்கையை நாம் அளித்ததன் விளைவாக இன்று நாம் அனுபவித்து கொண்டு., எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வை அறிந்து வருகிறோம்.

உலகம் முழுவதும் ஏற்படும் ஏதேதோ மாற்றம் மற்றும் பாதிப்பில் ஒன்றாக நிலநடுக்கம் இருந்து வருகிறது. கடந்த வருடத்தின் இறுதியில் இந்தோனேசிய நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதற்கு பின்னர் ஏற்பட்ட சுனாமியால் அங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., அந்த நாட்டில் அதற்கு பின்னர் பல நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்., கடந்த சில மாதங்களாகவே உலகம் முழுவதும் ஆங்காங்கே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலும் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மும்பை மாநிலம்., மணிப்பூர் மாநிலம் மற்றும் தமிழகத்தில் இராசபாளையம் பகுதிகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அந்த வகையில்., இன்று காலை சுமார் 7.24 மணிக்கு அந்தமான் தீவு பகுதிகளில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். மேலும்., இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது அங்கிருக்கும் தீவு பகுதிகளில் உணரப்பட்டதை அடுத்து., ரிக்டர் அளவு கோலில் சுமார் 5.0 ஆக பதிவாகியுள்ளது. மேலும்., தற்போது வரை அந்த பகுதிகளில் 9 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறுகிறது.