வைபர் ஊடாக பரீட்சை மோசடி;

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வைபர் செயலி ஊடாக பரீட்சை மோசடி செய்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

Untitled-1அநுராதபுரம் – வலிசிங்க ஹரிச்சந்திர பாடசாலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவன், தனது கையடக்கத் தொலைபேசியில் இணையத்தை செயற்படுத்தி, வைபர் செயலியூடாக பரீட்சைத் தாளினை நிகழ்படம் எடுத்து தனது நண்பனுக்கு அனுப்பியுள்ளார்.

நண்பனிடம் இருந்து வைபர் செயலி ஊடாகவே பதில் கிடைத்திருப்பதை தெரிந்துகொண்ட மாணவன், பதிலை எழுதிக் கொண்டிருக்கையில் பரீட்சை நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர் அதனை அவதானித்திருக்கின்றார்.

இதனையடுத்து குறித்த மாணவன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பரீட்சை திணைக்களத்தினால் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.