வேட்­பு­ம­னு நிரா­க­ரிக்­கப்­பட்டவர்கள் நீதி­மன்றத்தில் வாய்ப்­பு கோர முடியும்!

நடைபெறவுள்ள உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் மீள் பரி­சீ­ல­னைக்­காக கோரிக்கையினை முன்­வைக்க சகல உரி­மையும் உள்­ளதென மாகாண­சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்துள்ளார்.

வேட்­பு­ம­னு நிரா­க­ரிக்­கப்­பட்டவர்கள் நீதி­மன்றத்தில் வாய்ப்­பு கோர முடியும்!

எனினும் ஒரே நேரத்தில் தேர்­தலை நடத்த வேண்டும் என்ற ஏக­ம­ன­தான ஒத்­து­ழைப்பு உள்­ள­தனால் தேர்தலில் எந்த சிக்­கலும் வர வாய்ப்பில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு வெள்­ள­வத்­தையில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

93 பிர­தேச சபை­க­ளுக்­கான வேட்­பு­மனு தாக்கல் நேற்­றுடன் முடி­வுக்கு வந்­துள்­ளது. எனினும் இதில் பொது எதி­ரணி உள்­ளிட்ட சில கட்­சி­களின் வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

வேட்­பு­மனு நிரா­க­ரிக்­கப்­பட்ட போதிலும் நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்கள் நீதி­மன்றம் சென்று மீண்டும் தமக்­கான வாய்ப்­பு­களை கோர முடியும்.

நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்கள் நீதி­மன்­றத்தில் மீள்­ப­ரி­சீ­ல­னைக்­கான வழக்கு தாக்கல் செய்யும் பட்­சத்தில் நீதிமன்றம் இது குறித்து தமது நிலைப்­பாட்­டினை தெரி­விக்கும்.

எனினும் அவ்­வாறு மீள் பரி­சீ­லனை குறித்து நீதி­மன்றினால் அனு­மதி வழங்­கப்­ப­டு­மாயின் குறித்த தொகுதியின் தேர்­தல்கள் பிற்­போ­கவும் வாய்ப்­புகள் உள்­ளன.

அத்தோடு இப்­போ­துள்ள நிலையில் சகல தொகு­தி­க­ளிலும் ஒரே நேரத்தில் தேர்­தலை நடத்த வேண்­டிய நிலைமை உள்­ள­தனால் தேர்தல் பிற்­போக வாய்ப்­புகள் மிகவும் குறை­வா­கவே உள்­ளன.

எவ்­வாறு இருப்­பினும் நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்கள் தமது நியா­ய­மான கோரிக்­கைக்­காக நீதி­மன்றம் செல்ல சகல உரி­மையும் உள்­ளது. அதை எவ­ராலும் தடுக்க முடி­யாது என வலியுறுத்தியுள்ளார்.