பேருந்து மோதியதில் பலியான மாணவி!

கம்பளை புதிய குருந்துவத்தையில் இன்று காலை பேரவிலவிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பதித்தலாவ, மல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி பேருந்தில் இருந்து இறங்கி பேருந்துக்கு முன்னால் உள்ள வீதியைக் கடந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புதிய குருந்துவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.