திடிரென சரிந்து விழுந்த சுவாமி!

வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது பெருமாள் திடிரென சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா இன்று இடம்பெற்றது.

இதன்போது கருட சேவை நிகழ்ச்சியில் தண்டு உடைந்து திடீரென பெருமாள் சாய்ந்ததில், அர்ச்சகர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கல்யாண வரதராஜ பெருமாள் சன்னதியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கருட சேவை உற்சவத்தில் ஏற்பட்ட இச்சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.