நமிதா
விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்து எங்கள் அண்ணா திரைப்படத்தில் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார் நமிதா. இதற்கு முன் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
டிகன், இங்கிலீஷ்காரன், சாணக்கியா, பம்பர கண்ணாலே, கோவை பிரதர்ஸ், பச்ச குதிரை, வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா, என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.
இந்த நிலையில், நடிகை நமிதா சமீபத்தில் அளித்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில் தனுஷ் படம் என கால்ஷீட் கேட்டு ஏமாற்றிவிட்டதாக நமிதா கூறியுள்ளார். அதை பற்றி விவரமாக பார்க்கலாம்.
ஏமாற்றிய தயாரிப்பாளர்
இதில் “கடந்த 2006ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடிக்க கேட்டார்கள். அந்த படத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை. அப்படத்தில் தனுஷ் உங்களுக்கு ஜோடியாக நடிக்கிறார் என படத்தின் தயாரிப்பாளர் சொல்லி என்னுடைய கால்ஷீட்டை வாங்கிவிட்டனர்”.
“ஆனால் கடைசியில் தயாரிப்பாளரின் உறவினர் அப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதை அறிந்ததும் நான் மிகவும் கடுப்பாகி அந்த படத்திலிருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டேன். அதன்பின் எப்படியோ அப்படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்தனர்”.
“அந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் கவுன்சில் மற்றும் நடிகர்கள் கவுன்சில் உள்ளிட்ட இடங்களில் அந்த சமயத்திலேயே புகார் கொடுத்திருந்தேன்” என நடிகை நமிதா கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.