தலைகீழாக நிற்கும் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் அறிமுமாக ஆகி பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஹிட் ஆன தெறி படத்தின் ரீமேக் தான் அது. வருண் தவான் அதில் ஹீரோவாக நடிக்கிறார்.

பாலிவுட் என்பதால் அந்த படத்தில் கிளாமராக தான் நடித்து வருகிறாராம். அட்லீ தான் பேபி ஜான் படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படம் மட்டுமின்றி ரிவால்வர் ரீட்டா என்ற படத்தையும் நடித்து முடித்திருக்கிறார் கீர்த்தி.

தலைகீழாக நிற்கும் நடிகை
கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தனது ஒர்கவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் தலைகீழாக நின்று இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். வீடியோ இதோ.