பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிக்கும் பிரபல கோலிவுட் நடிகர்

Biopic
சமீபகாலமாக பாலிவுட் முதல் கோலிவுட் வரை புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்களாக உருவாவது வழக்கமாக உள்ளது.

பயோபிக் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதாலும், உண்மை சம்பவத்தை கொண்டு திரைப்படம் எடுப்பது சவாலாக இருப்பதாலும் ஃபிலிம் மேக்கர்கள் பலரும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்

யார் தெரியுமா?
இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாம்.

இதில் மோடியின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.