ஐ.எஸ். தீவிரவாதிகளை ஹிலாரி ஒழித்துக் கட்டுவார்

அமெரிக்காவின் சிறந்த அதிபராக நான் உருவாக காரணமாக இருந்த ஹிலாரி கிளிண்டன், அமெரிக்காவின் அதிபராகி ஐ.எஸ். தீவிரவாதிகளை ஹிலாரி ஒழித்துக் கட்டுவார் என ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். குடியரசு கட்சியின் சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான டொனால்ட் டிரம்ப் அவரை எதிர்த்து களம் காண்கிறார்.

இந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக பதவி ஏற்பார் என்று இதுவரை நடைபெற்ற ஒன்பது அதிபர் தேர்தல்களின் முடிவுகளை சரியான முறையில் கணித்துக்கூறிய பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஹிலாரி கிளிண்டனை ஆதரித்து ஓஹியோ மாநிலத்தில் உள்ள ஆர்லந்தோ நகரில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் பிரசார கூட்டத்தில் இன்று பேசிய அதிபர் பராக் ஒபாமா ஹிலாரியை வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இந்த கூட்டத்தின்போது ஒபாமா பேசியதாவது:-

ஹிலாரியின் முயற்சிகள் உள்நாட்டில் பெரியளவில் பேசப்படாமல் போயிருக்கலாம். ஆனால், என்னை இந்த நாட்டின் சிறந்த அதிபராக உருவாக்கியதில் ஹிலாரியின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அதற்கான உரிமையையோ, பெருமைக்கோ அவர் சொந்தம் கொண்டாடியதில்லை.

இந்த நாட்டின் சிறப்புக்குரிய, நிதானமாக அதிபராக முப்படைகளுக்கும் தலைமை தாங்கி, ஐ.எஸ். தீவிரவாதிகளை ஹிலாரி ஒழித்துக் கட்டுவார்.

அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடனை வேட்டையாடிய அந்த மிகவும் சவாலான – சிக்கலான வேளையில், எனது முடிவுக்கு அவர் ஆதரவு தெரிவித்து, ஊக்கப்படுத்தினார். பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டபோது என்னுடன் அவர் ஆலோசனை அறையில் இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் நமது நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாக ஓய்வின்றி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமெரிக்காவின் மதிப்பை உயர்த்தியதுடன் மிகுந்த நன்மதிப்பையும் அவர் பெற்றுள்ளார்.

முந்தைய அனுபவங்களின் வாயிலாக அவர் இந்த உலகத்தை மிக நன்றாக புரிந்து வைத்துள்ளார். நாம் சந்திக்கும் சவால்களைப்பற்றி புரிந்து வைத்துள்ளார். தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைந்தால் நல்ல தேர்தல் என்றும் பாதகமாக அமைந்தால் நாற்றமடித்த தேர்தல் என்றும் அவர் கூறியதில்லை.

அவர் தவறுகள் செய்திருக்கிறாரா? ஆம், செய்ததுண்டு. நானும் செய்திருக்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்ட யாரும் தவறுகளே செய்யவில்லை என்று கூறிவிட இயலாது.

ஆனால், ஹிலாரியை பொருத்தவரை நல்லவராகவும், கண்ணியமான நபராகவும், நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்து வைத்துள்ள நபராகவும் இருப்பதால் இந்த நாட்டின் தலைசிறந்த அதிபராக அவர் ஜொலிப்பார்.

இதுவரை நமது நாட்டுக்கு ஒரு பெண் அதிபர் அமையாமல் போனதற்கு ஒரு காரணம் உண்டு. ஒரு ஆண் என்ற முறையில் எனது மகள்கள் தாங்கள் விரும்பும் எதையும் சாதிக்க வேண்டும் என நான் விரும்புவதுபோல், எனக்கு நிகராக இல்லாவிட்டாலும் எனது மனைவியை என்னைவிட உயர்ந்தவராக நான் அறிந்து வைத்திருப்பதுபோல், ஹிலாரி கிளிண்டன் இந்த நாட்டின் அதிபராக வருவதற்கு தன்னை எதிர்த்து போட்டியிடும் மற்றொருநபரை (டொனால்ட் டிரம்ப்) பலவகையில் தகுதியானவர் என்பதை வாக்காளர்களாக நீங்களும் உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரான்சில் நெருக்கடி! பாரிஸ் தெருக்களில் மோதிக்கொண்ட அகதிகள்! பதற வைக்கும் புகைப்படம்

பிரான்சின் பாரிஸ் நகரில் அகதிகள் குழுவாக ஒருவரை ஒருவர் கம்புகளால் தாக்கி கலவரம் வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் காலேஸ் பகுதியிலிருந்த அகதிகள் முகாம்கள் முழுமையாக காலி செய்யப்பட்டு அகற்றும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அகதிகள் பலர் பிரான்ஸ் தலைநகருக்கு படையெடுத்துள்ளனர்.

இதே சமயம் பாரிஸ் நகரத்தின் மத்தியில் உள்ள சட்டவிரோதமான கூடாரங்களை அதிகாரிகள் பொலிசார் உதவியுடன் அகற்றியுள்ளனர்.

கூடாரங்கள் அகற்றபட்ட சில மணி நேரத்தில் பாரிஸின் Stalingrad மாவட்ட தெருவில் அகதிகள் குழுவாக கம்புகளுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், தற்போது வரை மோதலுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி Hollande, காலேஸில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை நாடு முழுவதும் முன்னெடுக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது அகதிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

கோட்டாபாய உருவாக்கியதே ‘ஆவா குழு’!

வடக்கில் இயங்கும் “ஆவா” எனப்படும் குழு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு தெரிந்தே உருவாக்கப்பட்ட கொள்ளைக் குழு என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த குழுவினர் இன்று வரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் தேவைகளுக்கு அமையவே செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குழுவை கட்டியெழுப்பிய பிரிகேடியரை தனக்குத் தெரியும் என கூறியுள்ளார். அக் காலப் பகுதியில் இருந்த வேறு சில தமிழ் குழுக்களை அழிக்க இந்தக் குழு உருவாக்கப்பட்டிருக்கலாம்.

எனினும் தற்போது அவ்வாறானதொரு குழு அவசியம் அற்றது எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன  தெரிவித்துள்ளார்.

மகாலட்சுமி வழிபாட்டின் போது சொல்ல வேண்டியது

* வேண்டும் வரங்களை அருள்பவளே! மூவுலகத் தையும் பரிபாலனம் செய்பவளே! பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவளே! அச்சம் தீர்ப்பவளே! நல்லோரைக் கரை சேர்ப்பவளே! ஸ்ரீதரனின் துணைவியே! திருமகளே! உன்னைப் போற்றுகிறேன்.

* அறிவின் இருப்பிடமே! அன்பர்களுக்கு வழிகாட்டு பவளே! செயல்களில் வெற்றியைத் தருபவளே! மந்திர வடிவமானவளே! பக்திக்கும், முக்திக்கும் வழிகாட்டுபவளே! என்றென்றும் என் இல்லத்தில் இருந்து நீயே என்னைக்காத்தருள வேண்டும்.

* முதலும் முடிவும் அற்றவளே! மாயோனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவளே! ஆதிலட்சுமித்தாயே! அனைத்திற்கும் ஆதாரமே! தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரியே! வாழ்வின் பண்பும் பயனுமாக இருப்பவளே! ராஜயோகம் தந்தருள்பவளே! தாயே! அருள்புரிவாயாக.

* செந்தாமரைப்பூவில் விரும்பி உறைபவளே! பட்டாடை, பலவித ஆபரணங்களையும் விருப்பத்துடன் அணிபவளே! மகாவிஷ்ணுவின் இதயத்தில் வீற்றிருப்பவளே! ஜகன் மாதாவே! குளிர்ந்த சந்திரன் போல அருட்பார்வைகொண்டவளே! அபயக்கரம் நீட்டி என்னை ஆட்கொள்ள வருவாயாக.

* மாசில்லாத தூயநெஞ்சில் வாழ்பவளே! யாவராலும் விரும்பி வணங்கப்படுபவளே! மங்கல வடிவானவளே! பசுவின் அம்சமாக திகழ்பவளே! பாற்கடலில் பிறந்தவளே! செக்கச் சிவந்தவளே! தூய்மை நிறைந்தவளே! உன் திருவடித் தாமரைகள் என் வீட்டில் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.

* அமுதம் நிறைந்த பொற்குடத்தை ஏந்தியவளே! அருள் நெஞ்சினர் உள்ளத்தில் உறையும் ஒளியே! சிவந்த இதழ்களைக் கொண்ட இளமயிலே!அலங்கார ரூபிணியே! உன் அருட்பார்வையால் இவ்வுலகை வளம் பெறச் செய்வாயாக.

* பூங்கொடி போன்றவளே! எங்கும் நிறைந்தவளே! மூவரும் தேவரும் போற்றும் முதல்வியே! அலை கடலில் உதித்த அருட்பாவையே! சரணடைந்தவர்களைக் காக்கும் ஜகன்மாதாவே! அஷ்டஐஸ்வர்யங்களையும் தந்தருள்பவளே! அம்மா! உன் குளிர்ந்த பார்வையைக் காட்டி உலகை செழிக்கச் செய்வாயாக.

* பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குணவதியே! சவுபாக்கியம் தந்தருள்பவளே! லட்சுமி தாயே! உன் கருணையால் வீட்டிலும், நாட்டிலும் செல்வ வளம் கொழிக்கட்டும். பயிர்பச்சை செழித்துவளரட்டும். எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கட்டும்.

சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

நம்மில் பல பேர் சோர்வுத் தன்மை நீங்கி சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி டீயை குடிப்போம்.

ஆனால் அடிக்கடி டீ குடிப்பதும் நமக்கு ஆபத்து தான், எனவே உடலுக்கு ஆரோக்கியமான கிராம்பு கலந்த மூலிகை டீயை பருகலாம்.

ஐந்து கிராம்பை ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, பின் அந்த நீரை பருகலாம்.

இந்த டீயில் விட்டமின் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துக் காணப்படுகிறது.

தலைவலி, உயர்ரத்த அழுத்தம், செரிமானப் பிரச்சனை, கல்லீரல் குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தடுத்து, பற்கள் பிரச்சனை, சீரான ரத்தோட்டம், இதயம் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குறிப்பு

பல் வலி இருப்பவர்கள் இந்த கிராம்பு கலந்த மூலிகை டீயை மிதமான சூட்டில் குடிப்பது மிகவும் நல்லது!

ஐ.தே.க வின் தொகுதி அமைப்பாளரானார் சரத் பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் வைத்து இன்று(02) இதற்கான நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த நியமன கடிதம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. ஸ்ருதிஹாசன்

கமல் – கவுதமி பிரிவுக்கு ஸ்ருதிஹாசன் தான் காரணம் என்று ஒருதரப்பினர் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கி வரும் நிலையில் சுதாரித்து கொண்ட ஸ்ருதிஹாசன் தனது செய்தி தொடர்பாளர் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கொடுத்த விளக்கம் இதுதான்: ‘ஸ்ருதிஹாசன் எப்போதும் அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட விரும்ப மாட்டார்.  அவரைப் பொருத்தவரை அவர் பெற்றோர், சகோதரி ஆகிய குடும்பத்தினர் மீது அன்பு செலுத்துவதும்,  அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில்தான் விருப்பம்’ என்று கூறியுள்ளார்.

‘தல 57’ செட்டில் அஜித் செய்த கலாட்டாவை சொன்ன காஜல் அகர்வால்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

இதன் முதல்நாள் படப்பிடிப்பில் காஜலை பார்த்த அஜித், காஜல் ஜி வாங்க, போங்க என்றே அவரை கூப்பிட்டாராம். முதலில் அவரை விட ஜூனியரான தன்னை அவர் ஏன் இப்படி கூப்பிடுகிறார் என்று யோசித்த காஜல், பின்னர்தான் தன்னை ‘தல’ கலைக்கிறார் என புரிந்துகொண்டாராம். எனினும் ‘தல’ அஜித் ஒரு சிறந்த ஜென்டில்மேன் என புகழாரம் சூட்டியுள்ளார் காஜல் அகர்வால்.

இன்று 51-வது பிறந்தநாள்: ஷாருக் கானுக்கு கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன் வாழ்த்து

உலகளாவிய அளவில் அதிக சம்பளம்பெறும் கதாநாயகர்களில் ஒருவராக கருதப்படும் நடிகர் ஷாருக் கான் ‘பவுஜி’, ‘சர்க்கஸ்’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி, பின்னர் 1992-ம் ஆண்டு வெளியான ‘தீவானா’ படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் தடம்பதித்தார்.

‘பாஸிகர்’, ‘டர்’, ‘அன்ஜான்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும், மேலும் சில படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களிலும் பிரகாசித்த ஷாருக் கான், ‘தில்வாலே துல்ஹனிய லேஜாயேங்கே’ படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்ற இந்திப்பட கதாநாயகனாக உயர்ந்தார்.

2007-ம் ஆண்டில் ‘கவுன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு இந்தியர் வீட்டு வரவேற்பறைக்குள்ளும் நுழைந்த இவர் ஐ.பி.எல். கிரிக்கெட் அணியில் மோதும் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணியின் உரிமையாளர்களில் இருவராகவும் உள்ளார்.

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றதுடன் பிலிம்பேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வாரிக்குவித்து ‘பாலிவுட்டின் பாதுஷா’ ஆக திகழும் ஷாருக் கான் இன்று தனது 51-வது வயதில் காலடி பதிக்கிறார்.

இதையொட்டி, கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு கைபேசி மற்றும் டுவிட்டர் மூலம் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்.

காதலரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட 10 ரொமான்டிக்கான பரிசுகள்!!!

தவறான நபரை காதலிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

தமிழினிக்கு ஒரு பாடல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினிக்காக  பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழினி தனது உணர்வுகளை சொல்வது போன்ற வகையில் இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு லைட் ஹவுஸ் கெலேயில் நேற்று இடம்பெற்றுள்ளது.

காஷ்யப்ப சத்யபீரிஸ் டி சில்வாவின் பாடல் வரிகளில் உருவாகிய பாடல், இசையமைப்பாளர் மஹிந்த குமாரினால் தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உரேஷா ரவிஹாரியினால் பாடப்பட்டுள்ள இந்த பாடல் தர்ஷன ருவன் திஸாநாயக்க என்பவரினால் உருவாக்கப்பட்டுள்ளது.

காஷ்யப்ப சத்யபீரிஸ் டி சில்வாவினால் பாடல் அடங்கிய இறுவட்டு, தமிழினியின் கணவரான ஜேயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வெளியீட்டு நிகழ்வில் மூத்த ஒளிப்பதிவாளர் தர்மசிறி பண்டாநாயக்க, புகழ்பெற்ற எழுத்தாளர் சுனில் மாதவ பிரேமதிலக்க அடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானம் ஏற்படும் என உறுதியாக நம்பும் அனைத்து மக்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பனம் என தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தமிழினி 2015ம் ஆண்டு ஒக்டோபர் 18ம் திகதி மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

கிளிநொச்சி மாவட்டம் பரந்தனை சொந்த இடமாகக் கொண்ட தமிழினியின் இயற்பெயர் சிவசுப்பிரமணியம் சிவகாமி. இறக்கும்போது அவருக்கு 43 வயது.

கடந்த 1991 ஆம் ஆண்டு 19 ஆவது வயதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த தமிழினி பின்னர் அந்த அமைப்பின் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக உயர்ந்தார்.

இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்ததையடுத்து, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்த போது தமிழினி கைது செய்யப்பட்டார்.

நீண்டகாலமாக வெலிக்கடைச் சிறைச்சாலையில் பெண்களுக்கான பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழினி, பின்னர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு பயிற்சி நிலையத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டடிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் காவலரனுக்கு முன் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் கடற்படையினரின் காவலரனுக்கு முன் இன்று அதிகாலையில் தரையில் மாலையிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அதிகமாக மழைபெய்து கொண்டிருந்ததாகவும் அதிகாலை 4.30 மணிக்கு பின் மழை பெய்யவில்லை என்று குறித்த பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் குறித்த இடத்தில் மாலையிட்டு, ஊதுபத்தியுடன் கூடிய அஞ்சலி செலுத்தியது மழை வந்து நின்றபின் நிகழ்ந்துள்ளதற்கு ஆதரமாக அங்கிருக்கும் ஊதுபத்தி வெற்றுப்பெட்டிகள் அடையளப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த அஞ்சலி யார் எதற்காக என்ன அர்த்தத்தில் செய்துள்ளார்கள் என்பது பற்றி அங்கே ஒரு புரியாத புதிராவே காணப்படுகின்றது.

பரந்தன் முல்லைத்தீவு பிரதானவீதி அருகே அமைந்திருக்கும் கடற்படையினரின் காவலரனுக்கு முன் அதி உயர் (1500w) மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேரங்களில் வாகனங்கள் தரித்து நின்றால் அல்லது ஆட்களின் நடமாட்டம் காணப்பட்டால் கடற்படையினரின் காவலரனில் இருந்து அதிஉயர்(றோர்ச்லைட்)ஒளியின் மூலம் குறித்த வளாகத்தை அவதானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புஷ்ப அர்ச்சனையால் நன்மை ஏற்படுமா?

செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் தன லாபம், தொழில் முன்னேற்றம் கூடும். சூரியனின் அருள் கிடைக்கும்.

* மனோரஞ்சிதம், பவழமல்லி மலர்களால் அர்ச்சனை செய்தால் நீண்ட ஆயுள், இல்லறத்தில் ஒற்றுமை நிலவும். சந்திரன் அருள் கிட்டும்.

* மல்லிகை, இருவாட்சி, வெண்தாமரை, நந்தியா வட்டை மலர்களால் செய்யும் அர்ச்சனை மன சஞ்சலம் நீக்கும். புத்திக் கூர்மை, கலைகளில் மேம்பாடு போன்றவற்றைத் தரும். செவ்வாய் அருள் கிடைக்கும்.

* புதனின் அருள் பெற, மரிக்கொழுந்து, மாசி பச்சை ஆகியவற்றால் அர்ச்சனை செய்யலாம். சுகபோகம், உறவினர் நெருக்கம், வித்தைகளில் தேர்ச்சி கிட்டும்.

* குருவின் அருள் பெற, செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்க அரளி மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். கடன் தீரல், திருமண பாக்கியம் போன்றவை கிடைக்கும்.

* சுக்கிரன் அருள் பெற செம்பருத்தி, அடுக்கு அரளி மலர்களால் அர்ச்சனை செய்யலாம். ஞானம், புகழ், தொழில் விருத்தி உண்டாகும். •

சனி பகவான் அருள் பெற, நீலநிற சங்குப்பூ அர்ச்சனை செய்யலாம். வறுமை, அவச்சொல், அபாண்டங்கள் நீங்கி ஆயுள், ஆரோக்கியம் கூடும். தெய்வ அருள் கிடைக்கும்.

• கருந்துளசி, வில்வம், மகிழம்பூ அர்ச்சனை, சங்கடங்களை நீக்கி சகல காரிய சித்தி தரும். ராகு, கேது அருள் கிடைக்கும்.

மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதியில்!

தமிழகம்- பாம்பன் மன்னார்வளைகுடா கடல்பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

மன்னார்வளைகுடா சின்னப்பாலம் கடல் பகுதியில் நேற்று திடீரென சுமார் 100 மீட்டர் தொலைவு கடல் உள்வாங்கியது.

இதனால் கரையில் நிறுத்தபட்டிருந்த 30 க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தது.

கடந்த சில நாட்களாக மன்னார்வளைகுடா கடல்பிராந்தியத்தில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்துவந்தது இதனால் ராட்சத அலைகளால் உருவாகி பாம்பன் சின்னப்பாலம் குந்துகால் தெற்குவாடி மற்றும் மண்டபம் தெற்குப் பகுதி நாட்டு படகு மீனவர்கள மீன்பிடிக்கச்செல்லாமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந் நிலையில் இன்று திடீரேன சின்னப்பாலம் கடல் பகுதியில் சுமார் 100 மீட்டர் தொலைவு கடல் உள்வாங்கியது இதனால் கரையில் நிறுத்ப்பட்டிருந்த 30 க்கும் க்கும் மேற்ப்பட்ட படகுகள் சேதமடைந்தது.

மேலும் கடலுக்குச் சென்றவர்களும் பெரும் நஷ்டத்தோடு கரை தீரும்பியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை வந்த நெதர்லாந்து விமானம்!

நெதர்லாந்தின் தேசிய விமான சேவையான KLM விமான சேவை 20 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான தனது விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

KLM விமான சேவை நிறுவனத்தின் KL873 இலக்க விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் KLM நிறுவனம் தனது சேவையை இலங்கையில் ஆரம்பித்துள்ளது.

Boening 787 -9 Dreamliner ரக நவீன விமானத்தை இந்த நிறுவனம் தனது விமான சேவைக்கு பயன்படுத்தியுள்ளது.

பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களே எச்சரிக்கை !

விரதத்தை முடிக்கும் போது பழரசம் குடிப்பது ஏன்?

விரதத்தை முடித்த பின்னர் பெரும்பாலும் பழரசம் குடிப்பது தான் வழக்கம், அது ஏன் தெரியுமா?

பழச்சாறு செரிமானமாவதில் சிக்கல் இருக்காது. அது விரைவில் ரத்தத்துடன் கலந்து, குளூக்கோஸுக்கு இணையாக உடனடியாக உடலுக்கு சக்தியைக் கொடுக்கக் கூடியது.

நீண்ட நேரம் உண்ணாமல் இருக்கும் போது, பழச்சாறு குடிப்பதன் மூலம் இழந்த சக்தியை சுலபமாகத் திரும்பப் பெற முடிகிறது.

பழங்களில் விட்டமின்கள், கனிமங்கள் என எல்லாம் இருப்பதால், அது ஆரோக்கியமானதும்கூட.

விரதத்தை முடிக்கிற போது, பழச்சாறுதான் குடிக்க வேண்டும் என்றில்லை. இளநீர் கூட மிக நல்லது.

மேலும் தடபுடலாக விருந்தும் சாப்பிடுவது நல்லதல்ல, அளவோடு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறந்து 4 நாட்களேயான பெண் குழந்தைக்கு பெற்றோரால் நேர்ந்த கதி! பின்னணி காரணம்?

ஐதராபாத்தில் பெற்றோரே பிறந்த நான்கு நாட்களான பெண் குழந்தையை 20,000 ரூபாய்க்கு விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கரேணி பகுதியை சேர்ந்த கிருஷ்ணா, சுஜாதா தம்பதியே இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணா, சிங்கரேணி தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சுஜாதாவிற்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, குழந்தையை விற்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

தேவர்கொண்டா பகுதியில் குழந்தையை 20,000 விற்க முற்பட்டபோது தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இதனால் குழந்தையை வாங்க வந்த மர்ம நபர்கள் சம்பயிடத்திலிருந்து தப்பித்துள்ளனர். தகவல் அறிந்த பொலிசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யவுள்ளனர்.

அழகி கிளியோபட்ராவின் ரகசியம்

எகிப்து பேரரசியான கிளியோபட்ரா வரலாற்று அழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருக்கிறார்.

கிளியோபட்ரா என்ற பெயரை கேட்டாலே அவருடைய அழகே பிரதானமாக முன்னிறுத்தப்படுகிறது.

அவள் அழகு இல்லாதவள் என்றும், அமைதியான ஒரு கவர்ச்சிப் பதுமை கிளியோபட்டரா எனவும் இருவேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அழகுக்கு அடுத்தபடியாக, ஆண்களை காதல் வலையில் வீழ்த்துவதில் கைதேர்ந்த மாயக்காரி ஆவார்.

14 வயதில் எகிப்திய பேரரசியாக அரியணை ஏறிய இவள், அந்நாட்டை மிகச்சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தாள்.

வசீகரம், இளமை, புத்திக்கூர்மை, தேசப்பற்று, நினைத்ததை சாதிக்கும் உறுதி இவைதான் கிளியோபட்ராவின் வெற்றி ரகசியம். 11 மொழிகள் சரளமாக பேசுவாள், பேச்சாற்றலும் நிறைந்தவள்.

தனது 21 வயதில் ஜூலியஸ் சீஸர், மார்க் ஆண்டனி என்னும் இரு பெரும் ரோம ஆளுமைகளை காதல் வலை வீசி தன்வயப்படுத்தினாள்.

புத்திசாலித்தனமாக ஆட்சி புரிந்துவந்தாலும், கிளியோபட்ரா தனது மேனியழகை பேணிக்காப்பதில் தனிக்கவனம் செலுத்தி வந்தார்.

தன் அழகிய தோற்றம் மீது அக்கறை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகின் ரகசியம்

தனது உடல் பளபளப்பாக இருப்பதற்காக கிளியோபட்ரா பால் மற்றும் தேனில் தான் குளிப்பாராம்.

தனது முகத்திற்கு தேன் வைத்து மசாஜ் செய்துகொள்வார்.

தனது கூரிய கண்களால் அனைவரையும் கவர்ந்திழுக்க வேண்டும் என்பதற்காக, பல வண்ணங்கள் கொண்ட மைகளால் கண்களுக்கு அலங்காரம் செய்துகொள்வார்.

முத்துக்களை வினிகரில் கரைத்து குடித்துவந்தால், முத்து எப்படி மினுமினுப்பாக இருக்கிறதோ அதேபோன்று உடலும் மினுமினுப்பாக இருக்கும் என்பதற்காக இந்த முறையை பின்பற்றி வந்துள்ளார்.