பிரான்சில் நெருக்கடி! பாரிஸ் தெருக்களில் மோதிக்கொண்ட அகதிகள்! பதற வைக்கும் புகைப்படம்

பிரான்சின் பாரிஸ் நகரில் அகதிகள் குழுவாக ஒருவரை ஒருவர் கம்புகளால் தாக்கி கலவரம் வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் காலேஸ் பகுதியிலிருந்த அகதிகள் முகாம்கள் முழுமையாக காலி செய்யப்பட்டு அகற்றும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அகதிகள் பலர் பிரான்ஸ் தலைநகருக்கு படையெடுத்துள்ளனர்.

இதே சமயம் பாரிஸ் நகரத்தின் மத்தியில் உள்ள சட்டவிரோதமான கூடாரங்களை அதிகாரிகள் பொலிசார் உதவியுடன் அகற்றியுள்ளனர்.

கூடாரங்கள் அகற்றபட்ட சில மணி நேரத்தில் பாரிஸின் Stalingrad மாவட்ட தெருவில் அகதிகள் குழுவாக கம்புகளுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், தற்போது வரை மோதலுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி Hollande, காலேஸில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை நாடு முழுவதும் முன்னெடுக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது அகதிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.