முள்ளிவாய்க்கால் காவலரனுக்கு முன் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் கடற்படையினரின் காவலரனுக்கு முன் இன்று அதிகாலையில் தரையில் மாலையிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அதிகமாக மழைபெய்து கொண்டிருந்ததாகவும் அதிகாலை 4.30 மணிக்கு பின் மழை பெய்யவில்லை என்று குறித்த பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் குறித்த இடத்தில் மாலையிட்டு, ஊதுபத்தியுடன் கூடிய அஞ்சலி செலுத்தியது மழை வந்து நின்றபின் நிகழ்ந்துள்ளதற்கு ஆதரமாக அங்கிருக்கும் ஊதுபத்தி வெற்றுப்பெட்டிகள் அடையளப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த அஞ்சலி யார் எதற்காக என்ன அர்த்தத்தில் செய்துள்ளார்கள் என்பது பற்றி அங்கே ஒரு புரியாத புதிராவே காணப்படுகின்றது.

பரந்தன் முல்லைத்தீவு பிரதானவீதி அருகே அமைந்திருக்கும் கடற்படையினரின் காவலரனுக்கு முன் அதி உயர் (1500w) மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேரங்களில் வாகனங்கள் தரித்து நின்றால் அல்லது ஆட்களின் நடமாட்டம் காணப்பட்டால் கடற்படையினரின் காவலரனில் இருந்து அதிஉயர்(றோர்ச்லைட்)ஒளியின் மூலம் குறித்த வளாகத்தை அவதானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.