சிம்பு படத்திற்கு யு சான்றிதழ்

சிம்பு நடிப்பில் நீண்டகாலமாக உருவாகி வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் என்ற புதுமுகம் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அதேபோல், இப்படத்தின் டிரைலருக்கும் ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர். வருகிற நவம்பர் 11-ந் தேதி வெளிவரவுள்ள இப்படம் சமீபத்தில் தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த படக்குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பை படம் கண்டிப்பாக பூர்த்தி செய்யும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.