தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது நாம் செய்யக்கூடாத சில தவறுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் இளம்வயதினர் தங்களது முடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் முடி உதிர்தல், இளநரை இவற்றினாலும் அவதிப்படவும் செய்கின்றனர். இதற்கு சில தயாரிப்புகளை பயன்படுத்தியும் வருகின்றனர்.
தலைமுடி
தலைக்கு எண்ணெய் தேய்ப்பது கூந்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதிகமாக தேய்த்தால் பிரச்சனையும் ஏற்படலாம்.
தினசரி அதிகப்படியான எண்ணெய் தடவுவது மயிர்கால்களை அடைத்து, முடி வளர்ச்சியினைத் தடுக்குமாம்.
அதிக எண்ணெய் பசை இருக்கும் தலையில் தூசியும், அழுக்கும் எளிதாக படிந்துவிடுவதால், அரிப்பு மற்றும் சொரிதல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
கூந்தல் பராமரிப்பில் முதலிடத்தில் இருப்பது மரச்செக்கு தேங்காய் எண்ணெய் தான். எண்ணெய் சிறிதளவு எடுத்து, தலைமுழுவதும் படும்படி நன்றாக தேய்த்து, மென்மையாக மசாஜ் செய்வது அவசியமாகும்.
அதே போன்று அளவுக்கு அதிகமாக தினமும் எண்ணெய் தேய்த்தால் முடியின் ஆரோக்கியம் குறைய தொடங்கிவிடும்.