கறிசுவையை மிஞ்சும் பட்டர் பீன்ஸ் மசாலா

பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவடிதன்றால் அனைவருக்கமே பிடிக்கும். சமையல் என்பது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்றால் மிகையாகாது.

அந்தவகையில் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில், சற்று வித்தியாசமாக முறையில் நாவூரும் சுவையில் பட்டர் பீன்ஸ் மசாலாவை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வேக வைப்பதற்கு

பட்டர் பீன்ஸ் – 3/4 கப்

உருளைக்கிழங்கு – 250 கிராம்

மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

தண்ணீர் – 2 1/2 கப்

தாளிப்பதற்கு

எண்ணெய் – 1/2 மேசைக்கரண்டி

கடுகு – 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி

கறிவேப்பிலை – 1 கொத்து

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தே.கரண்டி

தக்காளி – 1 (நறுக்கியது) * உப்பு

சுவைக்கேற்ப

மஞ்சள் தூள் – 1/4

மிளகாய் தூள் – 1 1/2 தே.கரண்டி

மல்லித் தூள் – 1 தே.கரண்டி

சீரகத் தூள் – 1/2 தே.கரண்டி

மிளகுத் தூள் – 1 தே.கரண்டி

சிக்கன் மசாலா/கரம் மசாலா – 1/2 தே.கரண்டி

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை
முதலில் ஒரு குக்கரில் பட்டர் பீன்ஸ் மற்றும் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து, தண்ணீர் ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 2 விசில் வரும் வரையில் வேகவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வதக்கிய பின்னர், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அதனுடன் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரையில் வதங்கவிட்டு,அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகம் வரையில் கிளறி விட வேண்டும்.

பின்னர் அதில் வேக வைத்த பட்டர் பீன்ஸையும் சேர்த்து, அதோடு பீன்ஸ் வேக வைத்த நீரையும் அரை கப் அளவுக்கு ஊற்றி நன்றாக கிளறிவிட்டு வேகவிட வேண்டும்.

அதனையடுத்து வேகவைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, பெரிய துண்டுகளாக உதிர்த்து விட்டு நன்றாக மசாலா ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.

கடைசியாக அதனுடன் சிக்கன் மசாலாவை சேர்த்து கிளறிவிட்டு, 2 நிமிடங்கள் வரையில் மூடி வைத்து வேகவிட்டு, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் மசாலா தயார்.