வெண்மையாக்கும் கிறீமால் சரும நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாடசாலை செல்லும் 12 ,13 வயது மாணவர்களும் இவற்றை பயன்படுத்துவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர் பெர்னாண்டோ தெரிவித்தார்.

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (11) சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூகத்தில் உள்ள பலர் தற்போது சருமத்தை வெண்மையாக்கும் களிம்புகளை பயன்படுத்துவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். போதியளவான தெளிவின்மையால் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதை விடுத்து இவ்வாறான தரமற்ற களிம்புகளை உபயோகித்து சரும பிரச்சனைகளுக்கு ஆளாகுகின்றனர். இளம் யுவதிகளும், இளம் தாய்மார்களும் அதீத களிம்பு பாவனையால் ஏற்பட்ட சரும நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தோலை வெண்மையாக்கும் களிம்புகளில் தரமற்ற இராயங்கள், பாதரசம், ஸ்டீரோய்ட் போன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய மூலப்பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் இவை தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை, வைத்தியசாலைக்கு வருகை தரும்போது இணையவழியில் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கின்றனர். சருமத்தை வெண்மையாக்கும் களிம்புகளை பயன்படுத்துவதால் நாளடைவில் நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் நரம்பு சார்ந்த நோய்களுக்கு ஆளாகலாம்.

பெண்கள் மாத்திரமல்லாது தற்போது இளைஞர்களும் இவ்வாறன களிம்புகளை பயன்படுத்தி வருகின்றனர். நாட்டில் களிம்பு பாவனையால் சரும நோய்க்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாடசாலை செல்லும் 12 ,13 வயது மாணவர்களும் இவற்றை பயன்படுத்துகின்றனர். களிம்பு பாவனை சமூகத்தில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது என்றார்