இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் 20 பேருக்கு பாதிப்பு

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உறுமாறிய புதிய வகை கொரோனா மற்ற நாடுகளுக்கும் பரவாமல் தடுக்கும் நோக்கில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான விமான சேவையை நிறுத்தியுள்ளன.

இதனிடையே, இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய 6 பேருக்கு புதிய வகை கொரோனா இருப்பதும், அவர்களுள் தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவர் புதிய வகை கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று 20 பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை படுத்தப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொரோனா தடுப்பு மருந்தாகிய கோவேக்சின் உறுமாறிய புதியவகை கொரோனாவையும் எதிர்க்கும் தன்மை கொண்டது என்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கொரோனா வைரஸ் பல உருமாற்றங்களை அடைந்திருக்கும் என கருதப்படுகிறது. உருமாற்றம் பெற்ற கோரோனா வைரசுக்கு எதிராகவும் கோவாக்சின் தடுப்பூசி செயல்படும் என நம்பலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால், மக்களை நிம்மதி அடைந்துள்ளனர்.