இயக்குனர் சீனு ராமசாமிக்கு திருமணம்? – அவரே கூறிய தகவல்

தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் இயக்கியவர் சீனு ராமசாமி. அந்த படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றார்.

இவர் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவர காத்திருக்கும் படம் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமிக்கு சில தினங்களுக்கு முன் திருமணமாகி விட்டது என சமூக வலைதங்களில் பதிவு ஒன்று வெளிவந்திருந்தது.

ஆனால் தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில், சீனுராமசாமி இவ்வாறு பதிவிட்டது ஏன் என பலரும் ஆச்சர்யத்துடன் கேட்க அதுகுறித்து அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது: “இது தவறான தகவல். எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன். அப்டேட் டவுன்லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம்” என்று கூறி திருமண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.