சசிகலா விடுதலை ஆவதில் சிக்கல்.?

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது சசிகலா 4 ஆண்டுகள் தண்டனையை முழுமையாக அனுபவிக்கும் முன் நன்னடத்தை அடிப்படையில் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் வெளிவரும் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

சசிகலாவை பெருத்தவரை அவர் சிறையில் இருக்கும்போது விதிமீறல்களை மீறியதாக குற்றச்சாட்டு உள்ளது. சிறைத் துறை இயக்குனராக இருந்த ரூபா அளித்த புகாரின் விசாரணையில் தான் உள்ளது. அப்படி இருக்கும்போது சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என சிறை துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

சசிகலாவின் விதி மீறலை அம்பலப்படுத்திய ரூபா ஐபிஎஸ், கர்நாடக உள்துறை செயலாளராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். உள்துறை செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இவர் 2017 ஆம் ஆண்டு கர்நாடகா சிறை துறை இயக்குனராக இருந்தபோது சிறையில் சசிகலா சொகுசாக இருப்பதாக புகார் எழுப்பினார். சிறைத் துறை அதிகாரிகளுக்கு 2 கோடி லஞ்சம் கொடுத்து சசிகலா வெளியில் சென்று வந்ததாக சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்டார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ரூபா ஐபிஎஸ் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது, திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.

சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என தகவல் வெளியாகி வரும் நிலையில், ரூபா நியமனம் சசிகலா தரப்பினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பொறுப்பு வகித்தால் சசிகலா முன்கூட்டியே விடுதலையாவது, பரோல் பெறுவது உள்ளிட்டவை சிக்கலாக மாறும் என்பதால் சசிகலா ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.