கொரோனாவால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேணும்..!!

கொரோனா வைரஸ் ஆனது தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் வேப்பிலையை பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

தினமும் வீட்டைச் சுற்றிலும் வேப்பிலை சாறு, மஞ்சள் கலந்த நீரை தெளித்து விடுகிறார்கள். வீட்டின் கதவுகள், கைப்பிடிகள், ஜன்னல் கம்பிகள் போன்ற அனைத்து இடங்களிலும் வேப்பிலையை சொருகி வைத்து இருக்கிறார்கள்.

மிளகு, வேப்பிலை, சுக்கு, இஞ்சி கலந்த மூலிகைச் சாறை தினமும் குடித்து வருகிறார்கள். இது தவிர நெருப்பில் வேப்பிலை, சாம்பிராணி தூள் சேர்த்து வீடுகளில் புகை போடுகிறார்கள். பெண்களில் பலர் வேப்பிலையை தலையில் சொருகி செல்கிறார்கள்.

வீடுகளின் அருகில் வேப்ப மரம் உள்ளவர்கள் தேவையான அளவு வேப்பிலையை பறித்து பயன்படுத்துகிறார்கள். சிலர் பொடி நடையாக சென்று அருகில் உள்ள மரங்களில் வேப்பிலையை பறித்து வீடுகளுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

பூண்டு, இஞ்சி, மிளகு

அதேபோல உண்ணும் உணவிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பொருட்களை மக்கள் சேர்க்க தொடங்கி இருக்கிறார்கள்.

இதனால் பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள் தூள் போன்றவற்றை சமையலில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். தலைவலிக்கு டீ குடித்தால் கூட அதில் இஞ்சியின் காரம் அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள்.

பெரும்பாலானோர் வீடுகளில் சுடுதண்ணீர் அருந்துகிறார்கள். ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பழங்களை அதிகமாக உண்கிறார்கள்.