ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஆப்பிள் ஹோம்பாட் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹோம்பாட் ஸ்பீக்கருக்கு ஐ.ஒ.எஸ். மற்றும் ஐபேட் ஒ.எஸ். 13.3.1 அப்டேட், 7 இன்ச் அளவிலும் ஆறு மைக்ரோபோன்கள் மற்றும் ஹோம்பாட் மாடல் ஏ8 சிப் கொண்டிருக்கிறது.

புதிய அப்டேட்டில் ஹோம்பாட் ஸ்பீக்கரில் இந்தியாவுக்கான ஆங்கில மொழி சிரி குரல்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதை கொண்டு இசை, செய்திகள் மற்றும் வீட்டில் உள்ள கனெக்ட்டெட் சாதனங்களினாலும் குரல் வழியேவும் இயக்க முடியும்

அதுமட்டுமின்றி இதில் உள்ள சென்சார்கள் ஸ்பீக்கர் வீட்டில் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப ஆடியோ அளவுகளை மாற்றிக் கொள்ளும் வசதிகளையும் பரிந்துரைகளை அறிந்து கொண்டு இசை சார்ந்த தேடல்களில் பதில்களை அதிவேகமாக வழங்குகிறது.

பயனர்களின் உரையாடல்கள் அனைத்தும் சாதனத்திலேயே சேமிக்கப்பட்டு, அவை முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன.

மேலும் இதில் ஆப்பிள் உருவாக்கிய ஊஃபர் வழங்கப்பட்டுள்ளது. இது ஆடியோ தரத்தை மேம்படுத்தி தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.