வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காங்கிரஸ்!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி பேட்டியில் பாஜகவையும், மோடியையும் வெகுவாக தாக்கி விமர்சித்துள்ளார். அதன் பின்னர் அவர், “இந்திரா காந்தியின் பேத்தி நான். அவரைப் போன்று இருப்பது இயற்கைதானே?என்னை அவருடன் ஒப்பிட்டு பேசுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வாழ்த்தும். ஆசிர்வாதமும் தான் எனக்கு துணிச்சல் இன்னமும் அரசியலில் சிறப்பாக செயல்பட வேண்டுமென உத்வேகம் அளிக்கிறது. ஆனால், எனது குழந்தைகளைநான் அரசியலுக்கு அழைத்துவர மாட்டேன். அவர்களை வேறு துறைக்கு அனுப்ப உள்ளேன்.

தாய் என்ற முறையில் நான் கூறியுள்ளேன். ஆனால், எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். அவர்கள் தங்கள் பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. அவர்களை கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க இயலாது. எனது குழந்தைகள் துன்பத்தை அனுபவிக்க கூடாது. என நான் நினைக்கிறேன்.

அவர்களை அதிலிருந்து பாதுகாக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அவர்கள் தற்போது வளர்ந்து இருப்பதால் எனது அரசியல் பாதையை கூர்ந்து கவனிக்கின்றனர். என் மகன் சமையல் செய்ய வேண்டாம். அரசியல் பிரச்சினையைத் தீர்க்க போராடுங்கள் என எனக்கு அறிவுரை வழங்குகிறான்.

என் மகளும் அதைத்தான் கூறுகிறாள். இது எனக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. நான் அரசியலுக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. உத்திரபிரதேசத்தில் எனது அடித்தளத்தை வலுவாக உருவாக்கி இருக்கிறேன். உத்தரப் பிரதேசத்தை காங்கிரஸின் கோட்டையாக மாற்றுவது தான் எனது லட்சியம்” என அவர் தெரிவித்துள்ளார்.