மைக்ரோசொப்ட் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தற்போதைய இணைய உலகில் ஹேக்கர்களின் கைவரிசை எல்லை மீறிக் காணப்படுகின்றது.

இப்படியிருக்கையில் வயிற்றில் புளியைக் கரைக்கும் அதிர்ச்சி தகவலை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் குழு ஒன்று ஐரோப்பிய அரசியல் ஆய்வாளர் குழுக்களை இலக்கு வைத்து பாரிய சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக எச்சரித்துள்ளது.

இந்த சைபர் தாக்குதல் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடம்பெற்றுள்ளன.

Strontium எனப்படும் ரஷ்ய அரசின் முகவர் குழு ஒன்றும் இதனுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

இக் குழுக்கள் பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி, போலந்து, ரோமானியா மற்றும் சைபீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் நூற்றுகும் மேற்பட்ட கணக்குகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்..