ஓய்வுக்கு பின் விவசாயத்தில் களமிறங்க தயாராகும் கால்பந்து நட்சத்திரம்!

இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனி, தனது ஓய்வுக்கு பின்னர் விவசாயத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது 33 வயதாகும் இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் வெய்ன் ரூனி, டி.சி யுனைடெட் கிளப் அணியில் 2021ஆம் ஆண்டு வரை விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வெய்ன் ரூனி தனது ஓய்வுக்கு பிறகு விவசாயத்தில் களமிறங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனது 20 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள Cheshire மேன்சனில் விவசாய கொட்டகை அமைக்க அனுமதி கோரியுள்ளார் என தெரிய வந்துள்ளது.

அந்த கொட்டகையில் அவர் டிராக்டர் மற்றும் வைக்கோலை நிரப்பி வைக்க உள்ளார் என தெரிகிறது. பண்ணையில் வைக்கோலை நிரப்பி வைக்க விரும்பும் ரூனி, விலங்குகளை கொண்டு விவசாயம் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த கொட்டகை 20 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளார். இதற்கான வரைபடங்களை அவர் தயார் செய்துள்ளார். எனவே, Cheshire East Council-யிடம் தனது திட்டங்களை நிறைவேற்ற அனுமதி கோரியுள்ளார்.

ரூனி கோரியுள்ள அனுமதி குறித்த விண்ணப்பத்தில், அவர் அமைக்க உள்ள கொட்டகை விவசாய சேமிப்புக்காக பயன்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வேளாண் நிலத்தை பராமரிப்பது தொடர்பான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை வைத்துக் கொள்ளவும் இந்த கொட்டகை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உலர் வைக்கோல் சேமிப்புக்கான கிடங்காகவும் இது செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெய்ன் ரூனி மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.