அம்பானி மகனின் பேச்சுலர் பார்ட்டி!

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் முத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும் – ஸ்லோகா மேத்தாவுக்கும் மார்ச் 10 மற்றும் 11 ஆகிய இரு திகதிகளில் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நடைபெறவிருக்கிறது.

திருமண பத்திரிகையை சித்திவிநாயக் கோயிலில் வைத்து பூஜை செய்துள்ளனர். மகளின் திருமணத்தை தனது வீட்டில் நடத்திய அம்பானி, மகனின் திருமணத்தை மும்பையில் உள்ள பெரிய ஹொட்டலில் நடத்தவிருக்கிறார்.

மேலும், ஆகாஷ் அம்பானி தனது பேச்சுலர் பார்ட்டியை சுவிட்சர்லாந்தில் கொண்டாடவிருக்கிறார்.

St. Moritz இல் இந்த பேச்சுலர் பார்ட்டி நாளை நடக்கவிருக்கிறது. இந்த பேச்சுலர் பார்ட்டிக்கு 500 நண்பர்களை சுவிட்சர்லாந்து அழைத்து செல்கிறார்.

பாலிவுட் பிரபலங்கள் சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டு செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.